About Our Guruji
நானும் என் மனம் தேடிய ஆனந்தமும்
எனக்கென சொந்த வீடு திருவள்ளுவர் நகர், இராமநாதபுரம், இராமநாதபுர மாவட்டத்தில் உள்ளது. சொந்த வீடு கட்டினால் சுகமாக இருக்கலாம் என கட்டினேன்.
வீடு கட்டிய பிறகு பொறுப்புகள் கூடி சுமையானதே தவிர, சுகத்தை காணவில்லை. உறவுகள் அனைத்தும் என் கூட இருந்தும் நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை, என் சொந்த இடம் தேடி அலைகின்றேன்.
நான் என் வீட்டிலிருக்கும் போதும் என் இருப்பிடத்திற்கு வந்ததாக தெரியவில்லை. ஏனெனில் அந்த வீட்டிலும் (திருவள்ளுவர் நகர்) நிறைய வேலைகள் பார்த்துகொண்டுதான் உள்ளேன்.
அங்கும் நான் ஓய்வு எடுக்கவில்லை. எங்கு நான் முழுமையான ஒய்வும் பரிபூரணமான அமைதியும் ஆனந்தமும் அடைகின்றோனோ, அதுவே என் சொந்த வீடு என எண்ணுகிறேன்.

நான் யாருமற்று தனியாக இருந்தும் பார்த்துவிட்டேன் அங்கும் எனக்கு ஓய்வும் அமைதியும் கிட்டவில்லை. எனக்கு ஓய்வும் அமைதியும் வேண்டுமானால் என் சொந்த வீடு எதுவென்று புரியவேண்டும் அதனை அறிய வேண்டும். என் சொந்த வீடு எது?
என்னுடைய சொந்த வீடென்பது என்ன? நான் குடியிருக்கும் வீடா! அல்லது இந்த உடலா! ஏனெனில் நான் எந்த வீட்டிலிருந்தாலும் முழுமையான ஒய்வு கிட்டவில்லை ஆகையால் என் உடலையே என் சொந்த வீடாக்கி உள் நுழைந்தேன்.
என் உடலென்னும் வீட்டிற்குள்ளும் என்னால் ஓய்வும் அமைதியும் பெறமுடியவில்லை. அங்கு மனமென்ற ஒன்று என்னை நினைவுகளாலும் கனவுகளாலும் நிரப்பி என்னை அதிகமாக வேலை வாங்கியது.
மனம் என்னை படுத்தும்பாட்டை என்னால் வெளியில் சொல்லவும் முடியவில்லை.
என் வீடல்லவே? என பல குழப்பங்களோடு மீண்டும் என் உடலும் மனமும் என்னை படுத்தியபாட்டில் இதுவும் சொந்த வீட்டை தேடினேன்! தேடல் பெரிதாக விரியவே! என் வீட்டை தேடுவதை விட்டுவிட்டு நான் யாரென்பதை தேடினால், என் அடையாளம் என்னவென்று அறிந்தால் என் சொந்த வீட்டை எளிதாக அடைய வழி கிடைக்கலாமென என்னை (நான்) தேடி…….
தன்னை அறிதல் (self realization)
நான் யார் ? Who i am?
நான் என்னவாக இருக்கிறேன்? what am I?
என் அடையாளம் என்ன? What is my identity?
எங்கே இருக்கிறேன்? where i am?
என்ன செய்கிறேன்? What i do?
என்ன செய்யப்போகிறேன்? what i will do?
எனக்கு என்ன வேலை? What is my duty?
எனக்கு என்ன வேண்டும்? What i need?
நான் யார்? இந்த கேள்விகளை கேட்கத் தூண்டியது யார்?
நான் ஒரு பல் மருத்துவராகவும் மருத்துவமனையை நடத்துபவராகவும் உள்ளேன். மனைவிக்கு கணவனாகவும், என் குழந்தைகளுக்கு தகப்பனாகவும், தாய் தந்தைக்கு மகனாகவும், நண்பர்களுக்கு நண்பனாகவும், இன்னும் எத்தனையோ பெயர்கள்.
இதில் எது நான்?
கருவறையில் கண்ணுக்கு தெரியாத கருவாக, தாயின் மடியில் குழந்தையாக, விளையாடிடும் சிறுவனாக, காமமும் காதலும் நிறைந்த வாலிபனாக, லட்சியங்கள் நிறைந்த கணவனாவும், பொறுப்புகள் நிறைந்த தகப்பனாக, மருத்துவனாக, சமுதாய சேவகனாக, பலருக்கு பிடித்தவனாக, சிலருக்கு பிடிக்காதவனாக, தளர்ந்து தள்ளாடிடும் வயோதிகனாக இவைகள் எல்லாம் நான்தானா?
எனக்குள் இத்தனை மாற்றங்களா? அப்படியானால் இதில் எது நான்?
இதில் எது என் சொந்த பருவம்?
காலத்தினால் என் பருவம் மாறினால் என் உண்மை பருவம் என்ன?
நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அனைத்து பருவமும் என்னை ஆட்படுத்துவது உறுதி.
எந்த மாதிரியான உருவத்தை நான் விரும்புகிறேன்? எனக்கு மற்றவர் சொல்லும் அடையாளம் என்ன? கருப்பா, சிவப்பா, குட்டையா, நெட்டையா, நல்லவனா, கெட்டவனா?
திறமையானவனா? திறமையற்றவனா? இதில் எந்த அடையாளத்தை நான் விரும்புகிறேன். மற்றவர்கள் சொல்லும் அடையாளங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? சில நேரங்களில் கோபம் வருவதும் இயல்பு தானே?
அப்படியானால் என்னுடைய உண்மையான அடையாளம் என்ன? நான் யார்?
உடம்பு என்ற ஒன்று இல்லாவிட்டால் நமக்கு எந்த வடிவமும் அடையாளமும் கிடையாது. ஆகையால் உடம்புதான் நாமாக இருப்போம் என்று நினைத்து உடம்பை நோக்கினேன். 
எனக்கு குடல் வால்வு வலி வந்த போது குடல் வால்வு நீக்கபட்டது. பின்னர் வந்த வியாதிகளாலும் விபத்துகளாலும் என் உடலில் பல பாகங்கள் அறுவை சிகிச்சையால் எடுக்கப்பட்ட பின்பும் நான் உடம்பு என்னும் அடையாளத்தோடு வாழ முடிந்தது. எப்படி முடிகிறது! என்ற ஆச்சரியத்தில் சிறிது சிந்தனைக்கு பிறகு நான் இதயமாக இருக்கிறேன் என்று நினைத்தேன்.
என் நண்பனுக்கு இதயமே அறுவை சிகிச்சை மூலம் மாற்றபட்ட பிறகும் அவரை உயிருடன் பார்த்தபோது நான் இதயமாக இருக்கிறேன் என்று நினைத்த எண்ணமும் தவிடு பொடியானது. 
உடல் பல பாகங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும் அத்தனையும் மூளையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதே. ஒருவேளை நான் மூளையாக இருக்கும் என்று என் மூளையை ஆராய்ச்சி செய்தேன். விஞ்ஞானிகள் மூளை 2% கூட பயன்படுத்தபடவில்லை என்றும் கூறுகிறார்கள்.
நான் தான் மூளை என்று நினைத்த போது என் மூளை மொத்தமும் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும் ஆனால் மூளையில் பயன்படுத்தப்படாத பகுதிகள் உள்ளன என்றால் நான் மூளையும் அல்ல! ஒருவனின் மூளை செயலிழந்த கூட பிறகும் மயக்கநிலையில்(coma) இருந்தாலும் பைத்தியக்காரனாக இருந்தாலும் பூமியின், சுழற்சியில் இரவு பகலை, குளிர் வெப்பத்தை அனுபவிக்கத்தான் செய்கிறார்கள். உணவும் உட்கொள்கின்றார்கள்.
உடம்பில் எந்த பாகம் போனாலும் நான் உயிரோடு உலா வருகிறேன் என்று உறுதியான போது நாம் உடம்பல்ல என்று உள்ளுணர்வு உறுதிசெய்தது.
மாமா, சொல்லி உயிர் உடம்பை விட்டு பிரிந்த பிறகு (இறப்பிற்கு பின்) நம் பெயர் சொல்லி அழைத்தவர்களும் நம்மை அப்பா, உறவு அண்ணன், தாத்தா என்று அழைத்தவர்களும் உயிர் பிறிந்த சிறிது நேரத்திலேயே பிணம் என்றே அழைக்கின்றார்கள். பிணத்தை எடுக்க நேரம் குறிக்கின்றார்கள். உயிரோட்ட உடம்பினில் மற்றவர்களுக்கு பெயராகவும் உறவாகவும் இருந்த நாம் எங்கு போனோம்? நாம் உடம்பல்ல என்று உறுதி செய்து விட்டு பிரபஞ்ச உலா சென்று விட்டோம்.
நம் அடையாளமும் வடிவமும் உடம்பல்ல எனும் போது நம் உண்மையான அடையாளமும் வடிவமும் என்ன?
நாம் என்பது உடலல்ல எனும் போது உடலை வைத்து, அடங்கா ஆசைகளுடனும். கனவுகளுடனும். உணர்சிகளுடனும். உடலினுள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் யார்?
கண்களால் காட்சிகளை கண்டபின் கண்ட காட்சிகளுக்கு ஏற்ப பரவசமும் பரபரப்பும் உணர்சியும் அடைவது யார்?
உடம்பை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரா? அல்லது
மனமா? ஜீவனா? சக்தியா? அல்லது ஆன்மாவா? ஆத்மாவா? பிரபஞ்சமா? இதில் எது நாமாக இருக்கமுடியும் என எனக்குள் எழுந்த கேள்விகளில் மீண்டும் என்னை தேடி?…..
நான் என்பது உயிரா?
உடம்பை இயக்கும் உயிரை என் சுவாசத்தின் மூலம் மூச்சை உள்ளிழுக்கும்போதும் உள்ளிழுத்த சுவாசக்காற்றை வெளிவிடும் போதும் எனக்கு வேண்டிய நேரம் கட்டுப்படுத்த முடிகிறது.
சிறிது நேரம் உள்ளிழுத்த சுவாசக்காற்றை வெளியில் விடாமல் அடக்கி கொள்ளவும். வெளியில் விட்ட சுவாசக்காற்றை சிறிது நேரம் உள்ளிழுக்காமலும் (உயிரற்றநிலை) இருக்க முடிகிறது.
உடம்பை இயக்கிக் கொண்டிருக்கும் உயிர் எனக்கு கட்டுபடுகிறது என்றால் உயிர் நானல்ல! அது வேறொன்றாகத்தானே இருக்க முடியும்.

நான் என்பது மனமா?
என் மனசு சொல்லுது என நாம் மனதை பற்றி சொல்லும் பொழுதே என்+மனசு என இரண்டையும் பிரித்துத்தான் சொல்கிறோம். என் என்பது நானாகின்றேன். மனம் என்பது யார்?
பொதுவாக உலகவியலில் உள்ள மக்கள் மனதை தேடுகின்றார்கள். மனமும் நானும் எப்படி வேறுவேறாக இருக்கமுடியும் என்ற குழப்பம் வரலாம்! 
மனம் என்பதே நம் எண்ணம் தானே என எண்ணலாம். இங்கு நாம் என்பது வேறு எண்ணம் என்பது வேறாகிறது, நாம் அழகிய வீட்டை, நல்ல வாகன ஊர்தியை,அழகான காதல் ஜோடிகளை பார்க்கும் போது நாமும் ஏன் அவ்வாறு இருக்க கூடாது தோன்றுகிறது. இந்த நிகழ்வுகளை கண்ட பிறகுதானே இவ்வாறு தோன்றுகின்றது. 
இந்த நிகழ்வுகளை காணவில்லையெனில் அவ்வறு தோன்றியிருக்காது. ஆகவே எண்ணம் என்பது ஐம்புலன்களின் வழி உருவாவதுதானே.
கண்களால் பார்த்த காட்சியும் (ஒளி), காதால் கேட்ட சப்தமும்(ஒலி), மூக்கால் நுகர்ந்த நுகர்வும் (வாசனை), தோலால் உணர்ந்த உணர்வும் (நெருப்பு), மூளையில் தங்கி (ஞாபகங்களாக) மனமாகி எண்ணங்களாக வெளிவருகிறது.
இந்த சிறிது சிந்தித்து பார்த்தால் உலகம் நம்மை சுற்றியுள்ள (அண்டசராசரம்) தான் மனமாகவும் எண்ணங்களாகவும் செயல்படுகிறது என்பது விளங்கும். ஆகவே மனம் என்பது இயங்குகிறஇயக்கமே தவிர மனமும் நாமும் ஒன்றல்ல. என் உடலும் உயிரும் மனமும் நான் வாழும் வாழ்க்கையும் நானல்ல என்ற போது, இவைகளை தாண்டி செல்ல எனக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை.
என் கண்கள் மூடும் போது என் சுவாசத்தின் சப்தம் கூட இல்லாமல் நான் எங்கோ பயணமாகிறேன். என்னுள் நானே விரிவடைகிறேன் என்பதையும் தெள்ளத்தெளிவாக ஓர் உணர்வு மையத்திலிருந்து உணர்கிறேன்.
சிறிதுநேர இருளுக்குபின் தோன்றுகிற ஒளிகளுக்குள் என்னை நான் தேடிய போது ஒரு உறுவமற்று ஆனால் ஒளிகளை பார்க்க கூடியவனாகவும் இருக்கிறேன். என்பதை உணரமுடிகிறது. என்னால்
உணர ஆனால் நான் என்னை தேடுவதை, நான் யாரென்று அறிய முற்படுவதை நான் நிறுத்தவில்லை, தொடர்ந்தேன், தொடர்கிறேன், தொடர்ந்து இருப்பேன். கொண்டே
கேள்விகள் என்னவெனில் எனக்குள் ஏற்பட்ட சுவாசமற்று எப்படி பயணிக்க முடிகிறது. ஒருவேளை நான் சக்தியாக இருப்பேனோ?
என்னுள் நானே எப்படி விரிவடைய முடிகிறது. ஒருவேளை நான் ஜீவனாக இருப்பேனோ? ஓர் உணர்வு என்ற நிலையிலிருந்து எப்படி எல்லவற்றையும் என்னால் உணர முடிகிறது ஒருவேளை நான் ஆன்மாவாக இருப்பேனோ!

நான் தியானத்தில் இருக்கும் போது எனது உடல் பருமனாகி கனமற்றதாகிறது அதை உணர்பவனாகவும், ஒளிகளை பார்க்க கூடியவனாகவும், எண்ண அலைகளாக பிரபஞ்சத்தில் எதை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளக் கூடியவனாகவும் எப்படி முடிகிறது. ஒருவேளை நான் ஆத்மாவாக இருப்பேனோ?
இப்படிபட்ட பல கேள்விகளுக்குள் என்னை புதைத்துக் கொண்டே, நான் என் உணர்வு மையத்தை விடமால் பிடித்து கொண்டே, வானத்துக்கும் பூமிக்கும் இடையில் பாதை போன்ற இருண்ட அகலவெளியில் பயணித்த போது, எனை மறந்து போனேன். நான் என்ற உணர்வு அற்ற போது பிரபஞ்சம் தெள்ளத்தெளிவாக காட்சியளித்தது. ஒவ்வோர் முறையும் நான் என்ற உணர்வு அற்றபொழுது பிரபஞ்சம் ஒவ்வோர் பகுதிகளாக காட்சியளித்தது.
நான் என்ற உணர்வு அற்றபோது தான் பிரபஞ்சம் காட்சியளிக்கிறது என்றால் பிரபஞ்சம் காட்சியளிக்கும் பொழுது நான் எங்கே? நாம் வாழ்கின்ற புவியியல் உலகத்தை பொறுத்தவரை தன்னைத்தேடி சென்றவர்கள் மீண்டும் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பியதில்லை. தேடல் அதிகமாக அதிகமாக எனக்குள்ளும் நான் எடுக்கும் முயற்சியும், போகும் பாதையும், அதற்காக நான் செலவிடும் நேரமும், பொருளும் சரிதானா? என்ற கேள்வி எழுந்தது, அதே நேரத்தில் புவியியல் உலகத்தில் நான் வாழ்கின்ற வாழ்க்கை சரிதானா? என்ற கேள்வியும் எழுந்தது
நான் வாழும் வாழ்க்கைக்கும் மற்ற ஜீவினங்கள்
உயிரினங்கள் வாழும் வாழ்க்கைக்கும் எனக்கும் என்ன ஒற்றுமை வேற்றுமை! மனிதனற்ற மற்ற ஜீவன்கள் வாழ்க்கையிலிருந்து எங்கு நான் வேறுபடுகின்றேன் அவைகளும் நான் வீடு கட்டுவது போல் கூடு கட்டி, குடும்பம் நடத்தி, தன் குட்டிகளுக்காக இரை தேடி செல்கின்றன, கூட்டம் கூடி ஒன்றுக்குள் ஒன்று குலாவி கும்மியடித்து சண்டையிட்டும் கொள்கின்றன, கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப குளிர் வெப்ப பிரதேசங்கள் தேடி (சுற்றுலா) செல்கின்றன.
ஒன்று இறந்து விட்டால் மற்றெல்லாம் கூடி ஈமச் சடங்குகள் செய்கின்றன. என்ன வித்தியாசம் தோன்றிய விசயங்கள் ஏராளம் என சிந்தித்து பார்த்த பிறகு மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் இடையில் உள்ள வேற்றுமை.
பத்து பேர் நூறு பேருக்கு தேவையான உணவுப் பொருளையும், இருப்பிடத்தையும் ஒரே மனிதன் தன் உயர்ந்த அறிவால் தன் வசப்படுத்திக்கொள்வது.
தனக்குரிய ஆசைகளை வித விதமாக அனுபவிக்க வேண்டும் என்று எண்ணி தன் வாழ்நாளை செலவிடுகிறான்.
தன் குடும்பத்திற்காக சொத்து சேர்கிறேனென்று தன் வாழ்நாளில் ஆனந்தமான நிமிடங்களை அனுபவிக்காது கடக்கிறான்.
தனக்கும் ஐம்புலன்களும் வேலை செய்கிறது என்பதற்காக மற்றவர்களை பற்றி புறம் பேசுவதும், ஒருவன் அறியாமையில் செய்யும் சிறிய தவறுகளை மன்னிக்கவோ மறக்கவோ தெரியாமல் அவர்களை மட்டம் தட்டி, தான் எந்த தவறும் செய்யாதவர்கள் போலும், தன்னை தெய்வ பிறவி என்று எண்ணி தங்களை தாங்களே படுகுழியில் தள்ளிக்கொள்கிறார்கள்.
மொத்தத்தில் காமம், குரோதம், லோபம், மோகம், மதமாச்சரியம் இவற்றினுள் தன்னை இழக்கிறான் படைத்தவனுக்கு கோயில்கட்டி கோயிலில் படைத்தவனை விரட்டிவிட்டு பந்தாவிற்காக பால்குடம் எடுத்து பகட்டு காண்பித்து தன்னை மறக்கிறான். இப்படியொரு சமுதாய வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சொந்த வாழ்க்கை சரிதானா? என்று எண்ணும் பொழுது எனக்கு ஒரு சிந்தனை!
மனிதன் உயர்ந்த பிறப்பென்று சொல்கிறார்களே என எண்ணி இன்னும் ஆழமாக எனக்குள் பயணிக்கும் போது மனிதன் என்பவன் சாதாரண பிறப்பில்லை என்று விளங்கியது. 292
அங்கமாகவும், மனிதன் இறைவனின் சந்நிதானத்திலும் பொதுவாக மனித இனமற்ற மற்ற ஜீவினங்கள் இறைவனின் (இருப்பிடம்) இருக்கிறார்கள் அதாவது மனிதன் மனிதனாக இருக்கும் பொழுது இறைவனின் சந்நிதானத்தில் (மந்திரி போல்) வசிக்கிறான் மற்ற ஜீவராசிகள் தன் படிநிலைகளை பிறப்பெடுத்து இறைவனின் உயர்த்தி மனிதனாக சந்நிதானத்திற்கு வர பல ஜென்மங்கள் ஆகலாம்
மனிதனும் மற்ற ஜீவராசிகளை போல் தன்னிலையை மறந்து வாழ்ந்தால் அவர்களும் இறைவனின் அங்கமாக இருக்க முடியுமே தவிர இறைவனின் சந்நிதானத்திற்குள் நுழைய முடியாது. அவர்கள் இறைவனின் சந்நிதானத்தை அடைய பல ஜென்ம படிகட்டுக்கள் தாண்ட வேண்டியிருக்கும்.
மனிதனற்ற மற்ற ஜீவராசிகள் அதிகமாக சிந்தனை பண்ணாமல் தனக்கு இட்ட பணிகளை முடித்து மற்றவர்களை கஷ்டப்படுத்தாமல் தன் படிநிலைகளில் வேகமாக முன்னேறி வருகிறது.
படிநிலைகளில் முன்னேறிய மனிதனோ தன்னை இறை ஸ்தானத்தில் வைத்துக்கொண்டு தன் அதிகார பலத்தை துஷ்பிரயோகம் செய்து தன் படிநிலைகளில் முன்னேறாமல் தனக்கு கீழாகவும் செல்கிறான். சில நேரங்களில் வெட்கமும், மானமும் அற்று போகிறான்.
இப்படிப்பட்ட சூழ்நிலைக்கைதிகளோடு இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு வாழ்வதற்கும் என்னை யாரென்று தேடி, என் அடையாளம் என்னவென்று அறிந்து இறைவனின் சந்நிதானத்தில் இல்லாமல் உணவு கூடியவனாகவும், படுக்கையறை இல்லாமல் படுக்கக் கூடியவனாகவும், வாகனம் இல்லாமல் எல்லா இடங்களுக்கும் செல்லக் கூடியவனாகவும் இருக்க வேண்டுமெனில் அந்த இடத்தை அடைய “நான்” என்னை தேடும் பணிகளில் செலவிடுவது சரியானதே என்று எண்ணி மீண்டும் என்னை உண்ணக் தேடி,
என் சிந்தனையை உயர்த்தி உலகவியலை உற்று நோக்கும் பொழுது மனிதன் முதற்கொண்டு எல்லா ஜீவராசிகளும் ஏதோ ஓர் பயணத்தில் பயணித்துக்கொண்டே உள்ளன.
பயணம் :
ஒரு முனைப்பிலிருந்து ஓருயிராகி, உயிரிலிருந்து செல்லாகி, செல்லிலிருந்து, சிசுவாகி, சிசுவிலிருந்து உடலாகி, உடலிலிருந்து வயோதிகனாகி, மனிதன் 101 படிகட்டுகளில் பயணித்துகொண்டே இருக்கிறான். மற்ற ஜீவராசிகளும் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஏதோ படிக்கட்டுகளின் முடிவில் உடலற்ற உயிராகி மீண்டும் தன் இருப்பிடத்திற்கே திரும்புகின்றன, மீண்டும் பயணம்.. ஒரு அணு புள்ளியாகி, புள்ளி துகளாகி, துகள் 101 படிக்கட்டுகளில் கோள்களாகி, கோள்கள் சிதறுண்டு மீண்டும் புள்ளியாகி தன் இருப்பிடத்திற்கே பயணித்து திரும்புகின்றன மீண்டும் பயணம் தொடர்கிறது…
வீட்டை விட்டு வெளியில் செல்லும் மனிதன், இறைதேடி, சுகம் தேடி, சேவை புரிய இடம் தேடி, உற்றார் உறவினருக்காக பொருள் தேடி, அலைந்தாலும் மீண்டும் தன் வீடு நோக்கி வருவதுபோல் தன் வாழ்நாளின் மொத்த பயணத்தையும் முடித்து மீண்டும் தன் இருப்பிடத்திற்கே திரும்புகிறான்.
அன்றாடம் வீட்டைவிட்டு வெளியில் செல்லும் மனிதனுக்கு தன் இருப்பிடம் எங்கு இருக்கிறது என்று தெரிகிறது, ஆனால் தன் வாழ்நாள் மொத்தமும் பயணித்து கொண்டிருக்கிற மனிதனுக்கு தன் நிரந்தமான இருப்பிடம் எதுவென்று தெரியவில்லை எங்கே இருக்கிறானென்றும் புரியவில்லை என்னால் அவர்களைப்போல் வாழவும் தெரியவில்லை வாழ இஷ்டமும் இல்லை ஆகையால் மீண்டும் என் உண்மை சொரூபத்தைதேடி நான் பஞ்சபூதங்களின் அசைவுகளை என் உணரும்போது நான்தான் ஜீவன் என்று எண்ணினேன். ஏனெனில் ஜீவனால் உணரவும், தனக்குள். விரிவடையவும், நடக்கும் விசயங்களை (அனுபவமாக) தனக்குள் பதிவு செய்ய மட்டும் முடியுமே ஒழிய, தன்னால் உணர்ந்த உணர்வுகளுக்கு ஏற்ப எண்ணியதை செயல்படுத்த முடியாது. அது செயல்பட சக்தி தேவை. சக்தி இருந்தால் தான் அது ஓர் இடத்தில் இருந்து வேறோரிடத்திற்கு செல்லமுடியும்.
அதை சக்திக்குள் உணர்வுகளை பதிவுபடுத்திக் கொண்டு தேவைக்கேற்ப குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்தக்கூடிய உணர்வு மையம் கிடையாது. உணர்வு மையமும் சக்தியின் ஆற்றலை கட்டுபடுத்தகூடிய மையமும் இல்லாததால் சக்தியின் ஆற்றலை கட்டுப்படுத்த சக்திக்கு ஜீவன் தேவைப்படுகிறது.
ஜீவன் இல்லாமல் சக்தி இல்லை, சக்தியில்லாமல் ஜீவன் இல்லை. எந்தவொரு செயலுக்கும் இரண்டும் இணைந்தால் தான் உண்டு. அப்படியானால் ஜீவன் என்பது உணரக்கூடிய நீரினாலான பொருள். சக்தி என்பது ஆற்றலாக செயல்படுத்தப்படக் கூடிய பொருள், இரண்டும் எனக்குள் உட்கிரகிப்பவராகவும் (reciver) வெளிவிடுபவராகவும்(giver) இருப்பதாக நான் உணர்கிறேன், நான் உணர்கிறேன் செயல்படுகிறேன் என்று எண்ணுவது நான் தான் ஆகவே நான் ஜீவனும் சக்தியுமல்ல, அதையும் தாண்டி தேடல் விரிவடைகிறது!

உலகம் அனைத்தும் ஆன்மாவில் அடங்கியுள்ளது. உலக சக்திகள் யாவும் ஆன்மாவாகவே உள்ளது. இதற்கு நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடு கிடையாது, தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் தன்னுடைய ஆற்றலை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டே இருக்கும். ஆன்மாவின் மறு உருக்களே சக்திகள். அந்த ஆன்மாவா நான் என்று என்னும் போது சிறிது பயம் தோன்றியது. மஹா சக்திக்குரிய அந்த ஆன்மாவா? அல்லது ஆன்மாவிற்குள் மறைந்துள்ள அந்த ஆத்மாவா? நான் யாரென்று விளங்கியது.
எனக்கென எந்த உருவம் கிடையாது, அருவமும் கிடையாது. ஆன்மாவும் ஆத்மாவும் ஒன்றிணைந்து உலகமாக காட்சியளிக்கிறார்கள் அவர்களின் செல்லக்குழந்தையே நான்!
இன்னும் நன்றாக உணர்ந்து சொல்லபோனால் அவர்களின் காட்சிப்பொருளே நான்.! நான் உடலென்ற உருவுக்குள் ஒளிந்துகொண்டு ஆன்மாவாகவும் ஆத்மாவாகவும் உலகில் காட்சி தந்து கொண்டுடிருக்கிறேன்.
என் தேடல் இன்னும் முடியவில்லை!
உணர்வும் காட்சியும் அற்று ஓர் உன்னத சுகத்தை அடைவது யார்? ஆன்மாவா, ஆத்மாவா? அவர்களையும் தாண்டி எந்த உருவமும் அருவமும் அற்று எல்லாவற்றிற்கும் மிகச்சிறியனவாகவும் அதே நேரத்தில் எல்லாவற்றிலும் பெரியதுமாக, தன்முனைப்புமான, அதாவது எல்லாமே தானாகி தன்னில் எல்லாம் லயித்து நடனம் புரியும் மஹா பரம் பொருளே! யா அல்லாஹ்! யா இறைவா! எல்லாம் நீயே, நான் அங்கும் இல்லை எனக்கென எந்த வடிவமும் இல்லை, எந்த சக்தியும் இல்லை, பரம் பொருளே நீயே எல்லாம்! நான் ஒரு மனித ஜடத்துக்குள் வாழும் ஒரு மாயை, எனக்கு இந்த மாயை வேண்டாம்.
உடலாக இருக்கும் போது எல்லோருக்கும் அடையாளமாக இருக்கிறேன்.
உயிராக இருக்கும் போது இவ்வுலகில் இயங்கி கொண்டிருக்கிறேன்.
மனமாக இருக்கும் போது இவ்வுலக வாழ்க்கையை அனுபவிக்கிறேன்.
ஜீவனாக இருக்கும் பொழுது இவ்வுடலில் நடக்கும் எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பாக இருப்பதாக உணர்கிறேன்.
செயல்படுகிறேன். சக்தியாக இருக்கும் பொழுது நான் ஆற்றலாக
ஆன்மாவாக இருக்கும் பொழுது பிரபஞ்சமாக விரிகிறேன்.
ஆத்மாவாக இருக்கும் பொழுது எல்லாவற்றையும் அறிகிறேன்.
நானே எல்லாமாக இருந்தாலும் எனக்கென எதையும் சொந்தம் கொண்டாட முடியவில்லை.
நான் என்பது அற்று நான் என்ற கர்வமும் அற்று நான் என்பது மறைந்து படைத்த படைத்தவனிடமே சரணாகதி அடைகிறேன்.
நான் யாரென்று விளங்கியதாலும், என் அடையாளம் என்ன வென்று புரிந்ததாலும், என் சொந்த வீட்டை அடைய எனக்கென்றும் கஷ்டமாக இல்லை.
கடைசி பக்கம்
படைத்தவன் பற்றி நாம் உணர்வோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒவ்வோர் நாள் இரவும் நம்மை தூக்கம் என்ற பெயரில் அவனின் இல்லத்துக்கு அழைத்து, உடம்புக்கு புத்துணர்ச்சியும், புதிய தெம்பையும் (உற்சாகத்தையும்) கொடுத்து மீண்டும் பூலோகத்திற்கு உடம்பின் மூலம் அனுப்புகிறான். ஒவ்வோர் நாள் தூக்கத்திலும் நாம் அவனின் குழந்தையாக எது பற்றியும் அறியாதவர்களாக அவன் மடியில் உறங்கி வருகிறோம்.
நாம் தியானத்தின் மூலம் “நம்மை” யாரென்று எப்பொழுது அறிகிறோமோ அன்று முதல் இறைவனின் சந்நிதானத்தில் நாம் விரும்பிய போதெல்லாம் செல்கிறோம். அவனுடன் விளையாடுகிறோம். அவன் மடியில் உறங்குகிறோம். மீண்டும் தன் உணர்வோடு பூமிக்கு வந்து செல்கிறோம். மாயையை அனுபவிக்கிறோம். அறியாப் பருவத்தில் விளையாடும் குழந்தை அடிக்கடி கீழே விழுந்து மண்டை உடைவது, உடம்பில் அடிபடுவது போல நாமும் வாழ்க்கையில் இறைவனையும் நம்முடைய சுயரூபத்தையும் அறியாமல் வாழ்வதால்தான் நஷ்டப்படுகிறோம். கஷ்டப்படுகிறோம்,
இந்த உலகம், உடல், சந்தோஷம், துக்கம் அனைத்தும் அவனுடையதே, நமக்கென்று இங்கு அனுபவிக்கும் அனுபவத்தை தவிர வேறேதுவும் சொந்தமில்லை. யாருக்கும் எதுவும் சொந்தமில்லை.
எங்குே யாரும் போவது கல்லறைக்கு ஒன்றிற்கு தேவையில்லா எங்கு தோன்றினோமோ அதே இடத்திற்கு மீண்டும் யாரும் போவதில்லை கருவறையிலிருந்து வந்த ஒருவன் கல்லறைக்கு தான் திரும்புகிறான். எதுவும் நிரந்தரமில்லாத ஒன்றிற்கு இவ்வளவு சச்சரவுகளும், கஷ்டங்களும், தேவையில்லாத சிந்தனைகளும் தேவைதானா?
கடைசிப் பக்கம்
அனுபவம் என்பதும், மனம் என்பதும் நமதல்ல அதுவும் இறைவனின் சித்து விளையாட்டே முடிந்தால் சிரித்து விட்டுபோங்கள் இல்லையேல் அழுதுவிட்டு போங்கள் இரண்டும் அற்று அடக்கமாக இருக்காதீர்கள் அனைத்தும் தெளிவாகும்.
முறையாக இச்செய்தியைஎல்லாவற்றையும் வாசிப்பவர்களுக்கு இறைவனின் பார்வை உண்டு.
