Skip to content Skip to footer

Sidhavedhamum Varmamum

சித்த வேதமும் வர்மமும்:

1. வர்மத்தின் அடிப்படை

  • வர்மம் என்பது:

    • சக்தி, ஆற்றல், உணர்வு, மனம், உயிர் ஓட்டம் ஆகியவை சேமிக்கும் சிறியகிடங்குபோன்றது.
  • வர்ம சூத்திரம் (ஓலைச்சுவடி) நூலில் வர்மம் 108 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வர்மக்கலை என்பது நமது பாரம்பரிய கலை ஆகும்.
  • வர்மா என்பது உடம்பில் மிக மிக முக்கியமான இடமாகும்.
  • வர்மக்கலையை நமது உடல் மனம் உயிர் ஜீவன் ஆரோக்கியத்திற்கும் அதன் செயல்பாட்டிற்கும் மற்றும் தற்காப்புகலையாகவும் பயன்படுத்தப்படுகிறது.மேலும் வர்மக்கலை என்பது உடல் மனம் உயிர் ஆகிய மூன்றையும் ஒன்றிணைந்து செய்ய கூடிய கலைக்கு பெயர் தான் இந்த வர்மக்கலை. 
  • 4.உதாரணத்திற்கு 
  •       1.உடல் தத்துவம்-96
  •       2.ஜீவ தத்துவம்-8
  •        3.உயிர் தத்துவம்-12 ஒரு மனிதனுக்கு வியாதி உண்டானால்  இந்த மூன்று தத்துவங்களின் அடிப்படையிலேயே வியாதிகள் உண்டாகிறது.
  • 3.இந்த மூன்று தத்துவங்கள் அடிப்படையில் தொடு வர்மம் ,படு வர்மம் ,தட்டுவர்மம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் ஒருவரது வியாதியை ஆராய்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் போது அவரின் வியாதி 100%குணமடைகிறது என்பது அனுபவ பூர்வமான உண்மை.
  • 4. இப்படிபட்ட அருமையான வர்மகலை நிறைய ஆசான்களின் அகங்காரத்திநாளும் மற்றும் ஒரு குரு தன் சீடர்களுக்கு சரியாக போதிக்காமல் இருந்ததாலும் இந்த வர்மக்கலை மறையும் தருவாயில் உள்ளது.அப்படிபட்ட இந்த வர்மக்கலை சாஸ்திரத்தை ஷாஜி யோகம் மற்றும் தியானம் மையம் மூலமாக புதுபிக்கப்பட்டு இன்று பல மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க படுகிறது.
 

2. வர்ம வகைகள்

முக்கிய பிரிவு (4 வகை)

  1. படுவர்மம் — 12 (ஒவ்வொன்றும் 8 துணை வர்மம் கொண்டது → 12 × 8 = 96)
  2. தொடு வர்மம் — (12 × 8) = 96
  3. தட்டு வர்மம் — 8
  4. நோக்கு வர்மம்பார்வை மற்றும் மனக்குவிப்பால் தாக்கத்தை ஏற்படுத்தும் நுட்பம்
 

தத்துவ அடிப்படையில் பிரிவு

  • வாத வர்மம் — 64
  • பித்த வர்மம் — 24
  • சிலேத்தும வர்மம் — 6
  • உள் வர்மம் — 6
  • தட்டு வர்மம் — 8

மொத்தம்: 108 வர்மப் புள்ளிகள்

 

3. உடல் பிரிவு அடிப்படையில்

  • உடலில்: 96
  • உள்ளுறுப்பு (மார்பின் உள்): 12
 

4. வர்மத்தின் வேலை

  • உயிர் ஓட்டத்தை கட்டுப்படுத்தும்
  • காயம், அழுத்தம், தவறான தாக்கம் ஏற்படின் செயலிழக்கலாம்
  • சரியான முறையில் தூண்டினால் சிகிச்சையாக பயன்படும்
 

5. வர்ம சிகிச்சை முறைகள்

  • பயன்படும் முறை:

    • கை, விரல் அழுத்தம்
    • எண்ணெய் தடவி மசாஜ்
    • மூச்சுப் பயிற்சி
  • கருவிகள்:

    • வில்லாங்கோல், கம்பி, கல், பித்தளை கருவி, மரச் சுவடி
  • புற மருந்துகள்:

    • மூலிகை பேஸ்ட், எண்ணெய், பசை
 

6. பாதிப்பு நிலைகள்

  • சிறிய பாதிப்பு: வலி, சதை வீக்கம், இயக்கத் தடைகள்
  • மிகவும் ஆபத்தானது:

    • சுவாசம் நின்றல்
    • நரம்பு பாதிப்பு
    • திடீர் மயக்கம்
    • மரணம் (சில முக்கிய வர்மங்களில்)
 

7. வர்மத்தின் பயன்பாடு

  • மருத்துவம்: காயம், வலி, செயலிழப்பு சரி செய்ய
  • யுத்தம்: எதிரியை கட்டுப்படுத்த / செயலிழக்கச் செய்ய
  • யோகா: உயிர் ஓட்டத்தை சீரமைக்க
  • மருத்துவ சோதனை: நோய் கண்டறிதல்