Skip to content Skip to footer

Pranayama

பிராணனின் அறிமுகம்:

உயிர் அல்லது பிராணன் என்பது:

எல்லா ஆற்றல்களும் உள்ளடங்கிய ஓர் அற்புதமான ஆற்றல்களின் தொகுப்பு ஆகும். உயிர்களை  உயிரோடு வாழ வைக்க பயன்படுத்தபடும் பரப்பிரம்ம ஆற்றல் சக்தியை பிராணன் அல்லது உயிர்சக்தி என்றும் சீன மொழியில் இதை  Qi என்றும் அழைக்கிறார்கள். 

உயிர்  திடபொருட்களில் இருக்கும் போது அவைகள் அணுதுகள்களாக இயங்கி கொண்டும் உயிருடலில் இருக்கும் போது ஒரு செல்லாக இயங்கி கொண்டும் இருக்கிறது. உயிர்கள் நடமாடுவதற்கும் மற்றும் பூமி, சூரியன் மற்றும் இதர கோள்கள் சுழல்வதற்கும் உயிர் என்ற பிராணணே பிரதானமாக உள்ளது. உயிர்  உலகம் முழுவதும்  வியாபித்திருக்கிறது.

உயிர் உணர்வு. சுவாசம், மனம். செயல்பாடு, இயக்கம்.; மாற்றம் இவைகள் ஏழும் தனித்தனியாக இயங்காமல்  ஒன்றின்பின் ஒன்றாக இணைந்து இயங்கும். உலகில், உடம்பில் நடக்கிற எல்லா நிகழ்வுகளும் உயிரோட்டத்தால் தான் இயங்குகின்றன. உயிர் நிறுத்தப்பட்டால். மின்சாரம் அற்ற மின் விசிறியைப் போல் உலகில் உடம்பில் உள்ள எல்லாம் செயல் இழந்து விடும், உயிரின் இயக்கம்  அனுவை, அனுவின் இயக்க விதியை அடிப்படையாக வைத்து இயங்குகிறது. உயிரால் உடலில் புதிய உற்பத்திகளை தூண்டவும்; உடம்பில் குறைபாடற்ற ஒன்றை உயிரோட்டத்தால் சரி செய்து கொள்ள முடியும். உயிரின் இயக்கத்தால் உணர்வுகளும். உணர்ச்சிகளும் புதிய பரிணாம வளர்ச்சிகளும் உருவாகிறது. உயிரின் இயக்கத்தால், ஓரிடத்தில் உள்ள துகள்கள் உணர்வுகள் என்ன அலைகள் அனைத்தும் மற்றோர் இடத்திற்கு கடத்தப்படுகின்றன.

மனம் அடங்கும் பொழுது சுவாசம் அடங்குகிறது. சுவாசம் அடங்கும் பொழுது உணர்வு அடங்குகிறது. உணர்வு அடங்கும் பொழுது உயிர் அடங்குகிறது.

நமது உடம்பில் உயிர் இயங்கும் இடங்களை பொறுத்து இயக்கத்தை பொறுத்து அது நான்கு வகையாக உள்ளது .

1.   உயிர் தன்மை

 2.   உயிர் சக்தி

 3.    உயிர் ஆற்றல்

4.   உயிர் ஓட்டம்  அல்லது உயிரின் இயக்கம்

2உயிரிலிருந்தே உயிர்கள் தோன்றுகிறது.

உயிர் தனக்குள் 12 (பனிரெண்டுவகையான ஆற்றல்களை உருவாக்கி;  அப்பனிரெண்டு வகையான ஆற்றல்களை தனக்குள் ஓரிடத்தில் குவித்து,  குவித்து வைத்த ஆற்றல்களிலிருந்து புதிய உயிர்களையும் உலகையும் படைக்கவல்லது.

உயிரே –12 (பனிரெண்டுதமிழ் எழுத்துகளாக,

உயிரே –12 (பனிரெண்டுமாதங்களாக

உயிரே-12 மாதங்களில் சுழலும் சூரியனாக

உயிரே  உடலில் சுழலும் சக்கரங்களாக

உயிரே  உடலில் பனிரெண்டு படுவர்மம்மாக

உயிரே  மூளையில் பனிரெண்டு மைய நரம்புமண்டலமாக

உயிரே பிரபஞ்சத்தை இயக்கும்பனிரெண்டு இராசிகளாக

உயிரே குத்தூசி(Acupuncture)  மருத்துவமுறைகளில்  12 மெரிடியன்களாக
இந்த 
 உயிரானது  உலகை இயக்குகிறது.

3. உயிர் என்பது நம் உடலில் ஏற்படுத்தும் பரிணாம மாற்றங்கள் ;

 தனக்கு தேவையானவற்றை தானே தேரந்தெடுத்துக்கொள்ளும் வல்லமையும்ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்ற அன்றாட சுழற்சிகளுக்கும் காரணமாக  உள்ளது.

 உயிர் தான் அசைவதோடு மட்டுமில்லாமல் தன்னை சுற்றியுள்ள எல்லாவற்றையும் அசையவைக்கக்கூடியது;

தன்னில்தானே உணர்வுஉணர்ச்சிஉள்ளம் என்ற மூன்று சக்திகளாக
பிரியக்கூடியதுஇப்படி பிரிந்த மூன்றிலும் தானே உள்ளிருந்து இயங்கவும்
மற்றும்   இயக்கக்கூடியதாகவும் உள்ளது.

உயிர் என்பது உயிர்ப்பின் பயணம் ஆகும்.

உயிர் தன்னில் உணர்வாக இருக்கும் பொழுது

·  சந்திரனாகவும் ,மெய்ப்பொருளாகவும்,ஞானமாகவும், தந்தைஸ்தானமாகவும் (சிவமாகவும் உள்ளது).

சுவாசம்(பிராணாயாமம்)

சுவாசம் என்பது பிரபஞ்சததை இயக்கி கொண்டிருக்கும் உயிரோட்டமான “பிராணனை” உடலானது தனக்குள் உள் இழுத்து வெளிவிடும் ஒரு நிகழ்வாகும். 

சுவாசத்தில் உடம்பில் உள்ள ஒவ்வோர் செல்களும் “பிராண சக்தியை பெற்று” ஆக்க பூர்வமான வேலைகள் நடைபெற்று, கழிவானவைகளை வெளியேற்றிய பின்னர் பிராணன் வெளியேற்றப்படும் ஒர் அரிய தொடர் நிகழ்வாகும்.

 உடம்பில் உள்ள, உயிர் ஆரோக்கியத்திற்காக பயிலக்கூடிய, செய்யக்கூடிய சுவாசப் பயிற்சியே பிராணாயாமம் ஆகும். 

இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மரணத்தின் நேரத்தை நம் கையில் வைத்துக் கொள்வதோடு பஞ்சபூதங்களையும், ஐம்புலன்களையும், மனதையும் அடக்கியாளலாம்.

பிராணணை அறிந்தவன் பிரம்மத்தை அறிந்தவன் ஆவான் என்று உபநிசத்தில் கூறியப்படி ஒருவன் பிராணணை பிராணாயாமத்தால் கட்டுப்படுத்தி வெற்றி கொண்டால் பிரம்மத்தை அடைந்தவனாகிறான். 

யார் ஒருவர் பிராணாயாம பயிற்சியை முறையாக தொடர்ந்து செய்து வருகிறார்களோ அவர்களின் மனம் எப்பொழுதும் ஒரு இனம் புரியாத சந்தோசமாகவும், முகம் வசீகரத்தன்மையாகவும் பொலிவாகவும் இருக்கும். 

பிராணாயாமம் பயிற்சியினால் இரத்தக் குழாய்களில் ஏற்படுகின்ற அடைப்புகளை நீக்கி இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. 

இரத்தம் தூய்மை அடைகிறது, அனைத்து நாடி நரம்புகளும் வலிமையடைகிறது. நுரையீரல் நன்கு விரிவடைகிறது. 

நுரையீரல் விரிவடைவதால் மூச்சை உள்ளே இழுக்கும் பொழுது அதிகமான பிராணவாயு உள்ளே செல்கிறது. மூச்சை வெளியே விடும் பொழுது அதிகமான கரியமிலவாயு வெளியேறுகிறது. 

சுவாச இயக்கமும் அதன் பாதிப்பும்

எல்லாவிதமான உணர்வுகளம் உணர்ச்சிகளும் சுவாசத்தை பாதிக்கின்றன. உதாரணமாக..

ஸ்பரிசம் 

அழுத்தம் 

வலி 

குளிர் 

வெப்பம் 

அதிர்ச்சியான தகவல்கள் 

பயம் 

உள்ளுணர்வுகள் 

நினைவுகள் 

சுவாசம் பற்றி

நரம்புகள் ஓடும் இடம் நாடிகளாகவும், கொண்டு செல்லும் உணர்வுகள் வாயுக்களாகவும், அவற்றை சேர்ப்பு அல்லது இழப்பு குருதியோட்டமாகவும் உள்ளது நாடிகள் வழியே செல்லும் வாயுவின் (பிராணன் அல்லது உயிர்) ஓட்டம் சுவாசம் என்று அழைக்கப்படுகிறது. சுவாசம் என்பது உடம்பில் உள்ள எல்லா திசுக்களுக்கும் செல்களுக்கும் செல்கிறது.

 

சுவாசம்= மூச்சு  

1.உள் இழுக்கப்படும் சுவாசத்தை பூரகம் என்றும்

2.வெளி விடப்படும் சுவாசத்தை ரேசகம் என்றும்

3.உள் அடக்கப்படும் சுவாசத்தை கும்பகம் என்றும்

4.சுவாசத்தை வெளியில் விட்டு சுவாசமற்று இருப்பதை அந்தர் கும்பகம் என்றும் அழைக்கப்படுகிறது

சுவாசமும் 3 விதமான தோஷங்களும்

1.சுவாசம் இடகலை ஓடுவதை வாதம் என்றும் 

2.பிங்கலை ஓடுவதை பித்தம் என்றும், 

3.சுழிமுனை ஓடுவதை கபம் என்றும் கூறலாம். 

சுவாசமும் செயல்படும் விதமும்

சுவாசமானது நுரையீரலை அடிப்படையாக வைத்து நாசிகளின் வழியாக சுவாசக் குழாயை (trachea) பாதையாக அமைத்து, நுரையீரலினுள் செல்கிறது. 

“சுவாசக் காற்றை” நுரையீரல் உள் இழுத்து தன்னுள் அடங்கியுள்ள காற்றறைகளில் பிராணனை நிரப்புகிறது.

 நுரையீரலினுள் உள்ள காற்றறைகளுக்கு இதயத்தில் இருந்து வரும் இரத்தமானது தன்னிடம் உள்ள வினைபுரிந்த வாயுக்களை காற்றறைகளுக்குள் தள்ளி புதிய பிராணனை காற்றறையிலிருந்து இரத்தம் தன்னுடன் எடுத்துச் சென்று இதயத்தில சேர்க்கிறது. 

“இதயம்” தன்னிடம் உள்ள, பிராணனை உடலுறுப்புள் சக்தியுடன் செயல்பட இரத்ததின் வாயிலாக உடல் முழுவதும் பகிர்ந்தளிக்கிறுது. 

நுரையீரலையும் வயிற்றையும் மற்ற உறுப்புகளில் இருந்து பிரிக்கும் ஒரு தடுப்புச்சுவர் உதரவிதானம் (diaphragm)என்று அழைக்கப்படுகிறது. இச்சுவர் சுவாசம் நடைபெறும் போது நுரையீரல் சுருங்கி விரிய துணை செய்கிறது. 

இந்த நிகழ்வுகள் யாவும் மூளையில் உள்ள முகுளத்தின் (medulla oblangatta) தூண்டுதலால் நடைபெறுகிறது. தூண்டுதல்கள் யாவும் யின் யாங் தங்களுக்குள் ஏற்படுத்தும் வினைகளால் ஏற்படுகிறது.

 

சுவாச எண்ணிக்கை

 

சுவாசம் இருக்கும் வரை மனிதன் உயிரோடு இருக்கிறான். சுவாசத்தை கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் சுவாசம் தொடர்ந்து நடை பெறுகிறது. ஒரு நாழிகையொன்றுக்கு முந்நூற்றறுபது சுவாசமாக இரவு பகல் இருபது நாள் இயக்கி (நாளொன்றுக்கு மொத்தம் இருபத்தோராயிரத்து அறுநூறு (21600) சுவாசங்கள் நடைபெறுகிறது)

 

 

1. மூலாதாரத்தில் சுவாசம் –         600

2.சுவாதிட்டானத்தில் சுவாசம் –6000

3.மணிப்பூரகத்தில் சுவாசம் –    6000

4.அனாகதத்தில் சுவாசம் –          6000

5.விசுத்தியில் சுவாசம் –                 1000

6.ஆக்கிணையில் சுவாசம் –        1000

7.நாதாந்தத்தில் சுவாசம்-           1000 

                                    மொத்தம்=      21,600 

இவ்விதமாக 21600 சுவாசம் இயங்குவதில் பதினாலாயிரத்து நானூறு (14400) சுவாசம் உள்ளுக்குத் திரும்பிப் பாய்ந்தும்,எழாயிரத்து இருநூறு (7200) சுவாசம் வெளியில் போய்ப் பாழாகும் என்றறிக! “பிரணவாயுவை உயிர்க்கால்” என்பர். 

பிராணாயாமத்தின் வகைகள்....

1. நாடிசோதனா பிராணாயாமம்:

செயல்முறை விளக்கம்:

தியான ஆசனங்களில் ஏதாவுது ஒரு ஆசனத்தில் அமரவும். கைகளை நீட்டி முழங்கால்மேல் வைத்து கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும்.

கண்களை மூடவும் இப்போது வலது கையை மடக்கி ஆள்காட்டிவிரலையும், நடுவிரலையும் மடக்கி வைக்கவும். (படம் )

பிறகு மூச்சை இடது நாசிவழியாக முழுவதுமாக வெளியே விடவும். வலது நாசியை மோதிரவிரலால் அடைக்கவும் ( படம்

இப்போது இடது நாசிவழியாக மூச்சை 4 அல்லது5வினாடி உள்ளுக்குள் இழுக்கவும்

இப்பொழுது இடது நாசியை மோதிர விரலால் அடைக்கவும் (படம் ) இப்பொழுது வலது நாசிவழியாக அதே அளவுக்குமூச்சை வெளியே விடவும் (படம் ) மூச்சை வெளியேவிட்டுமீண்டும் வலது நாசி வழியாகவே மூச்சை உள்ளே இழுக்கவும்

 (படம் ) இப்போது வலது நாசி அடைக்கவும் (படம) இப்பொதுஇடதுநாசி வழியாக மூச்சை வெளியே விடவும் (படம்இது நாடிசோதனா (நாடி சுத்தி) பிராணாயாமத்தின் ஓரு சுற்று பயிற்சி ஆகும் இப்படி 10 முதல் 15 சுற்று வரை செய்யலாம்.

2. நாய் சுவாச பிராணாயாமம்:

 செய்முறை விளக்கம்:

வஜ்ராசனத்தில்  அமரவும். கைகளை நீட்டி முழங்கால் மேல் வைக்கவும் உடலை முன்நோக்கி வலைக்கவும் (படம்

 இப்போது நாக்கை நன்றாக வெளியே நீட்டி நாய் போல வாய் வழியாக மூச்சை வேகமாக இழுத்து விடவும் (படம்

 இப்படி 15 முறை செய்து 5 வினாடி ஓய்வு எடுக்கவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும். இப்படியே 3 முதல் 5 சுற்று வரை செய்யலாம்.

 

3. கபாலபதி பிராணாயாமம்

செயல்முறை விளக்கம்

ஆசனங்களில் ஏதாவது ஒன்றில் அமர்ந்து கைகளை முழங்கால் மேல் அமர்ந்து சின்
முத்திரை செய்யவும் இரு நாசி வழியாகவும்
வேகமாக 30 முறை மூச்சை உள்ளே
இழுத்து வெளியே விடவும். இது ஒரு சுற்று
பயிற்சியாகும். இப்படியே மூன்று முறை பயிற்சி செய்யவும்.

4. பஸ்திரிகா பிராணாயாமம்

செயல்முறை விளக்கம்

தியான ஆசனத்தில் அமர்ந்து சின் முத்திரை வைத்து கண்களை மூடவும்.

இப்போது இருநாசி வழியாகவும் ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து வாய் வழியாக வேகமாக வெளியேவிடவும்

இப்படி 10 முறை செய்யவும் இது ஒரு சுற்று பயிற்சியாகும். இது போல் 5 முதல் 10  வரை செய்யலாம்.

5. உஜ்ஜாயி பிராணாயாமம் :

செயல்முறை விளக்கம்

தியான ஆசனத்தில் அமர்ந்து சின் முத்திரை வைத்து கண்களை மூடவும்.

இப்போது தொண்டையில் ……..என்ற ஓசையோடு மூச்சை நிதானமாகவும் ஆழமாகவும் இழுக்கவும்

பிறகு ஸ்..என்ற ஓசையுடன் நிதானமாக மூச்சை வெளியே விடவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும்

இப்படி 10 முதல் 20 சுற்று வரை செய்யலாம். .

6. பிரணவ பிரணாயாமம்:

செயல்முறை விளக்கம்.

தியான ஆசனத்தில் அமர்ந்து சின் முத்திரை வைத்து
கண்களை மூடவும்.

இப்போது இருநாசி வழியாக ….. ….. ம்…..
என்று மனதால் நினைத்து நிதானமாகவும்,ஆழமாகவும், மூச்சை உள்ளே இழுக்கவும்

வெளியே விடும்போதும் …. …. ம்……
என்று மனதால் நினைத்து வெளியே விடவும் இது ஒரு சுற்று
பயிற்சியாகும்.

இப்படியே 20 முதல் 30 சுற்று வரை செய்யலாம்.

7 த்ரிநேத்ரா பிராணாயாமம் :

செயல்முறை விளக்கம்:

தியான ஆசனத்தில் அமர்ந்து சின் முத்திரை வைத்து
கண்களை மூடவும் .

முதலில் இரு புருவ மத்தியில்
கவனம் செலுத்தவும். 

பிறகு இரு நாசி வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும்.

மூச்சை உள்ளே இழுக்கும் போது புருவ மத்தியில்
இருந்து மின்னல் போன்ற பொன் நிறமான ஒளி
உச்சந்தலையை நோக்கி செல்வது போல மனதால் நினைக்கவும்.


(படம் ) மீண்டும் மூச்சை வெளியே விடும் போது கழுத்தின் பின்
பகுதியில் இருந்து ஒளி உச்சந்தலையை நோக்கி
செல்வது போலவும், அங்கிருந்து புருவ மத்தியில் (படம் ) வந்து முடிக்கவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும்.

8. சீதலி பிராணாயாமம் :

செயல்முறைகள்:

 

.தியான ஆசனத்தில் அமர்ந்து சின் முத்திரை வைத்து
கண்களை மூடவும் இப்பொழுது நாக்கை வெளியே நீட்டி குழல் போல் செய்யவும் .

பிறகு நாக்கின் வழியாக நிதானமாகவும் ஆழமாகவும் ஸ்…. என்ற ஓசையுடன் உள்ளுக்குள் உறிஞ்சி இழுக்கவும்

.இப்போது நாக்கை இயல்பான நிலைக்கு கொண்டு போய் வாயை மூடிக்கொள்ளவும்.
பிறகு நாசியின் வழியாக மூச்சை வெளியே விடவும். இது ஒரு சுற்று
பயிற்சியாகும்.

9. சந்திரபேதா பிராணாயம்:

செயல்முறை

ஆசனங்களில் ஏதாவது ஒன்றில் அமரவும் .

கைகளை நீட்டி மணிக்கட்டை முழங்கால்மேல் வைத்து கைவிரல்களால் சின்முத்திரை செய்யவும்

பிறகு  வலது கையை மடக்கி ஆள்காட்டி விரலையும்,நடுவிரலையும் மடக்கி வைக்கவும் .இப்போது வலது நாசியை பெருவிரலால் அடைக்கவும்

பிறகு இடது நாசி  வழியாக 4அல்லது 5 வினாடி மூச்சை உள்ளே இழுக்கவும் (படம் 8) 

மூச்சை உள்ளே இழுத்து மீண்டும் இடது நாசி வழியாகவே விடவும் இது ஒரு சுற்றுப்பயிற்சி ஆகும் இப்படி 10 முதல் 15 சுற்றுவரை செய்யலாம்.

வாசி யோகம்:

வாசி யோகம் என்பது சித்தர்கள் மற்றும் யோகிகள் பின்பற்றி வந்த வாழ்நாளையும் உடல் ஆரோக்கியத்தையும் அதிகபடுத்தும் பயிற்சி முறையாகும்.

வாசி என்றால் என்ன ?

வாசி என்பது வா-என்ற எழுத்து உயிரையும் சி – என்ற எழுத்து நெருப்பயும் குறிக்கும்.யோகம் என்பதற்கு இணைதல் என்று பொருள் கொள்ளலாம்.

அதாவது வா என்ற எழுத்து உயிராகவும்  நம் உடம்பில் தலைஉச்சி ஆகிய சகஸ்ர தளத்தில் அமைந்துள்ளது, சி என்ற எழுத்து நெருப்பாகவும் நம் உடம்பில் முதுகு தண்டின் அடிப்பகுதியில் அமைந்துள்ள மூலாதாரத்தில் உள்ளது.

இன்னும் ஆழமாக சொல்ல போனால்  சி என்ற  நெருப்பை மூட்டி வெப்பதை ஏற்படுத்தும்போது  இந்த வெப்பமானது மேல்நோக்கி எழும்போது தலைஉச்சியில்  உள்ள உயிர்காற்றானது கீழ்நோக்கி வர ஆரம்பிக்கும்.

அப்படி கீழ்நோக்கி வரும் வா என்ற உயிர் காற்றும் சி என்ற மூலதார வெப்பமும் ஒன்றாக இணைவதே வாசி யோகம்  என்பதாகும்.

வாசி என்ற வார்த்தையை திருப்பி போட்டால் சிவா என்று வரும்.நாம் சிவா நிலை என்ற உன்னதமான நிலையை அடைய வேண்டும் என்றால் அதற்கு வாசியோகம் நல்ல பலனை கொடுக்கும்.

வாசி உடம்பிற்கு பின்னால் இயங்கும் மற்றும் உடலுக்கு நடுவில் இயங்கும் உடலுக்கு முன்னும் நடக்கும்.

அதாவது இடகலை பிங்கலை சுழுமுனை இந்த மூன்றையும் ஒன்றிணைத்து தலை உச்சியில் நிற்பதே இந்த வாசி ஆகும்.வாசியை ஒருவன் உணர்ந்து பயிற்சி செய்தால் அவன் தேகம் கற்ப தேகமாகும்.

அவர்களின் உடலில் உள்ள முதுகு தண்டுவடம் வலுவாகி அவர்கள் உடல் பார்பதற்கு ராணுவ வீரர் போல் காட்சியளிப்பார்கள்.இப்படி தனக்குள்இருக்கும் வாசியை உணர்நது பயிற்சி செய்தார்கள் என்றால் அவர்களின் சக்கரங்களில் ஏற்படும் சுழற்சியே தனி தான்.

அப்படிப்பட்ட வாசியோகத்தை நாம் இந்த இணையதளத்தில் விளக்கியுள்ள பிரபஞ்சம் மற்றும் அணு இயக்க விதியையும் உணர்ந்து பயிற்சி செய்தார்கள் என்றால், ஆன்மீகத்தில் அவர்களின் நிலையே தனித்தான்.

அதுமட்டுமல்ல, வாசியோகத்தில் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த ஆதி முதல் அந்தம் வரை பயணம் செய்து, மீண்டும் ஆதியாகிய இறைவனிடம் கலக்க செய்வதே வாசியோகத்தின் மிக உயர்ந்த நிலையாகும்.

நன்றி நல்வாழ்த்துக்கள்….