Mudras
முத்ரா:
பிரபஞ்சத்தோடு நாம் பேசும் (உரையாடும்) மௌன மொழி.
இறைவன் நாலாபுறமும் விதவிதமான சக்திகளாக எழுச்சி பெற்று நடனம் ஆடினாலும், தன்னுள் மௌனமாகவே உள்ளான். அந்த மௌனத்தை கலைத்து
அவனிடமிருந்து சக்திகளைப் பெறுவதற்கு முத்ரா பயன்படுகிறது.
பொதுவாக முத்ரா செய்யும் பொழுது உணவு அருந்தி, இரண்டு
மணிநேரம் கழித்தே முத்ரா செய்யவும்.
எந்தவோர் ஆசனத்திலோ அல்லது விரிப்பிலோ அமர்ந்திருக்கும் போது உடம்பில் ஏதாவது ஒரு பகுதி பூமியோடு தொடர்பு கொண்டிருந்தால் மிகவும் நல்லது.
தியானம்:
நம் ‘மனதின்” மீது நாம் முழு கவனம் செலுத்தி மனமற்ற நிலையை உருவாக்கி தன் உணர்வில் நிலைத்திருப்பதே தியானம்.
தியானம் மனதை அலைபாயவிடாமல், ஒரு கட்டுக்கோப்புக்குள் வைக்க உதவும்.
மனமே மாயம், மனமே உலகம், மனமே மந்திரம், மனமே தந்திரம், மனமே எந்திரம்.
மனதை தியானத்தின் மூலம் வெல்லும் போது நமக்குள் பிரபஞ்சத்தின் எல்லை கட்டுப்பட்டுவிடும்.
எளிமையாக ஆழ்நிலைக்கு நம்மை கொண்டு செல்லும் தியானப் பயிற்சி: 
1.சற்று நேரம் அமைதியாக அமரவும்.உட்காரும் போது வஜ்ராசனம். சுகாசனம், பத்மாசனம், இதில் ஏதாவது ஒரு நிலையில் உட்கார்ந்து கொண்டு சின் முத்ரா அல்லது உள்ளங்கை வானத்தை நோக்கியவாறு இருப்பது நல்லது.
2. மென்மையாக மூச்சை இழுத்து சிறிது நேரம் மூச்சைப் பிடித்து மெதுவாக மூச்சை விடவும்.
3. நமது எண்ணத்தை நம் இதயப்பகுதியில் நிறுத்தி, நமது இதயத்துடிப்பையும். உடலினுள் ஓடும் காற்றோட்டத்தையும். சீராக கவனிக்கவும்.
4. சிறிது நேரம் ஆக. ஆக நாம் மூச்சுவிடும் சப்தம் அற்று உணர்வு பூர்வமாக மட்டும் இருப்போம், அந்த நேரத்தில் நமது எண்ணம் முழுவதும் முதுகுத் தண்டு வடத்தின் கடைசிப் பகுதிக்கும் குதத்திற்கும் இடையில் இருந்தால் நல்லது.
5. சிறிது நேரத்தில் நாம் நம்மை மறந்து இருப்போம்! நமது உணர்வு மெல்லியதாக தோன்றும் பொழுது முதுகுத் தண்டு வடத்தின் கடைசிப் பகுதியில் இருந்து வெப்பமான காற்று கிளம்பி உடல் முழுவதும் பரவி உச்சந்தலையை வந்தடையும். உடலில் உள்ள அசுத்தங்கள் நீக்கப்பட்டு ஒரு புத்துணர்வு ஏற்படும். நம்மைச் சுற்றி ஏதாவது நிறங்களின் வளையங்கள் சுழல்வது போலும் தெரியலாம்.
6. இந்நேரத்தில் நாம் உணர்வுடன் இருந்தால், ஆழ்மன நிறைவேறா ஆசைகள் அதிர்ஷ்டமனதுக்கு அனுப்பப்பட்டு காலமும் சூழ்நிலையும் வரும்போது பிரபஞ்ச மனத்துடன் கலந்து நமக்கு நடக்க வேண்டிய விசயங்களை பிரபஞ்ச மனம் இறைமனத்துடன் தொடர்பு கொண்டு நடத்தித் தரும்.
7. ஆழ்மனப் பயிற்சியை தினம் செய்து வந்தால் நம் உணர்வுகளை மட்டுமல்லாது, அருகில் உள்ளவர்களின் உணர்வையும் எளிதாகப் புரிந்து கொ கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் நமக்கு உள்ள வியாதிகள் தீர்ந்து புத்துணர்வு பெற்று புதிய ஆற்றல் வாய்ந்த மனிதனாக இவ்வுலகில் சஞ்சரிக்கலாம்.
