Asanas
ஆசனங்கள் என்றால் என்ன?
ஆசனம் என்பது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஓர் உன்னத கலை .ஆசனங்கள் உடல் நோய்களை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நம்மை ஆன்மீகப் பாதைக்கு அழைத்து செல்கிறது .
ஆசனத்தை ஓர் ஒழுங்கு முறையுடன் செய்து வந்தால் பிராணன் உள்ளிழுக்கப்பட்டு , உயிரிழந்த செல்களும் , உள் உறுப்புகளும் உடம்பும் புத்துயிர் பெற்று, நாம் என்றும் இளமையுடனும் துடிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ உதவுகிறது.
உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஓர் வடிவப்பயிற்சி. நீண்ட நாள் நோயற்றதன்மையுடன் வாழ வழி செய்கிறது.
ஆசனங்கள் செய்வதால் ஏற்படும் நன்மைகள்?
ஆசனங்கள் நோயற்ற வாழ்க்கையை உருவாக்குவதோடு, மருந்துகளால் குணப்படுத்தமுடியாத நாள்பட்ட வியாதிகளையும் குணப்படுத்துகிறது. ஆசன வகைகளில் நூற்றுக்கணக்கான ஆசனங்கள் உள்ளது. ஒவ்வோர் வகையான ஆசனங்களும் பல வியாதிகளை குணப்படுத்துகிறது.
ஆசனங்கள் செய்யும் வழிமுறைகள்:
சில ஆசனங்கள் எளிதாகவும், சில கடினமாகவும் இருக்கும். சில ஆசனங்களை சிலர் செய்வதற்கு தடை உள்ளது. 50 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆசனங்களைப் பழகப், பழக சில முக்கியமான ஆசனங்கள் பழக்கத்திற்கு வந்து விடும். ஆசனங்கள் செய்வதற்கு இடம் தேடி அலைய வேண்டியதில்லை. ஆறடி நீள விரிப்பும் நல்ல காற்றோட்டமும் இருந்தாலே போதும். வீட்டில் இருந்து கொண்டே செய்து கொள்ளலாம். அல்லது நண்பர்கள் வட்டாரம் நல்லா இருந்தால் ஒரு நேரத்தைத் தேர்வு செய்து, எல்லோரும் இணைந்து தினந்தோறும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் நேரம் தவறாமல் செய்தால், உடலும் மனமும் ஆசனத்திற்கு பழக்கப்பட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.
சூரிய நமஸ்காரம் செயல் முறைவிளக்கம்:
இரண்டு கால்களையும் நேராக வைத்து நிற்கவும் படம்
1. பிறகு கைகள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து மார்பின்நடுபகுதியில் வைக்கவும் படம் 1.
2. அப்படியே கைகளை தலைக்குமேலே தூக்கி உடலை பின்நோக்கி வளைக்கவும். படம் 2 .
3. அப்படியே முன்பக்கமாக வளையவும். உள்ளங்கைகளை கால்பாதத்தின் பக்கத்தில்வைக்கவும் படம் 3.
4. அப்படியே வலதுக்காலை பின்நோக்கி நீட்டவும் தலையை மேலே தூக்கவும். படம் 4 .
5. பிறகு இடது காலையும் பின்நோக்கி நீட்டவும்படம் படம் 5 .
6. அப்படியே படுக்கவும் படம் .
7. இப்போது உடலை நாபிவரைக்கு தூக்கவும் படம் .
8. அப்படியே உடலை உள்னோக்கி வளைக்கவும் படம் .
9. பிறகு அப்படியே வலதுக்காலை முன்நோக்கி வைக்கவும் .
10. பிறகு அப்படி இடது காலையும் வலது காலோடு சேர்த்து வைக்கவும். படம் .
11. அப்படியே கைகளை தலைக்குமேலே தூக்கி உடலை பின்நோக்கி வளைக்கவும் படம் 12.
12. அப்படியே படம் 2ம் நிலைக்கு வந்து கைகளை கீழே இறக்கவும். இது சூரிய நமஸ்காரத்தின் ஒரு சுற்று பயிற்சியாகும்.






மனமும் சக்கரங்களும்
மனம் என்பது நமது உடம்பில் ஆதாரத்தை அடிப்படையாக வைத்து ஆறுவகை மனமாகவும், உயிரை அடிப்படையாக வைத்து ஏழு வகையான சக்கரங்களாகவும், உணர்வை அடிப்படையாக வைத்து எட்டு வகையான உணர்வுகளாகவும், நமது உடம்பில் ,நமது உணர்வில் ,நமது உயிரில் இயங்குகிறது. ஒவ்வொரு மனதிற்கும் ஒரு பெயர் உண்டு.

ஒவ்வொரு மனமும் ஒரு ஆதாரத்தையும் சக்கரத்தையும் சூழ்நிலையையும் பொறுத்து நமது உடம்பில் ஆரோக்கியத்தையும் உடல் உறுப்பில் அழிவுகளையும் ஏற்படுத்துகிறது.

1.மூலாதாரம்(ஆழ்மனம்)
அறிமுகம்
- ஆழ்மனதை ஆழம் அறிந்தால் உலகம் நம் கையில் இருக்கும்.
- இது பொன், பெண், மண் என்ற மூன்று தன்மைகளை கொண்டுள்ளது:
- பொன் – உலக ஆசைகள்
- பெண் – காமம்
- மண் – உலகப் பற்று
- ஆழ்மனம் முதல் சக்கரமான மூலாதாரத்தில் அமைந்துள்ளது.
- பூமியோடு தொடர்புடையதால் உடலுலக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து மூலப்பொருட்களையும் பெறுவதற்கான அடித்தளம் ஆகும்.
- ஏழு வயதிற்குள் ஆழ்மனம் நன்கு செயல்பட்டால் உடல் திடகாத்திரமாக இருக்கும்.
மூலாதாரத்திலிருந்து உருவாகும் உறுப்புகள்:
- எலும்புகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், முடி, நகம், பற்கள், சதைகள், மர்மஸ்தானங்கள், நுகர்ச்சியுறுப்புகள்.
ஆழ்மனம் பலப்பட்டால்

- அழியாத தன்மை மற்றும் தன்னிறைவு பெறும் சக்தி உருவாகும்.
- உடல், மனம் உறுதி பெறும்.
- எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல், சக்தி, அமைதி மற்றும் உள்ளுணர்வு அதிகரிக்கும்.
ஆழ்மனம் பலப்படாவிட்டால்
- இரத்த சோகை, இரத்த போக்கு
- தளர்வு, உறுதியின்மை
- முதுகுவலி, இடுப்புவலி
- மலச்சிக்கல், மனச்சோர்வு
- தூக்கமின்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
- உடல் மெலிதல் அல்லது ஊளச்சதையால் பருமன் ஆகுதல்
விடுபட உதவும் வழிகள்
கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:
- கடினமான கருப்புக்கல், ஸ்படிகம், கூழாங்கல் போன்றவற்றைப் பயன்படுத்துதல்
- சிவப்பு நிற வீடுகள், வாகனங்கள் பயன்படுத்துதல்
- அமாவாசை நாட்களில் விழிப்புணர்வுடன் இருந்து தியானம் செய்தல்
கடைபிடிக்க வேண்டிய பயிற்சிகள்:
முத்ரா:
- ப்ருதிவி

- சின் முத்திரை

- குண்டலினி முத்திரை

- பிராணாயாமம்:
- பத்மாசனத்தில் நாடி சுத்தி பிராணாயாமம்

பந்தம்:
- மூலபந்தம்
ஆசனம்:
- பத்மாசனம்
- சூரிய நமஸ்காரம்
- தடாசனம்
மந்திரமும் தியானமும்:
- “லோஉம்” மந்திரம்
- வாசியோகம்
- சக்ர தியானம்
2. சுவாதிஷ்ட்டானம்(மறைமனம்):
அறிமுகம்
· இரண்டாவது சக்கரம் சுவாதிஷ்ட்டானத்தில் அமைந்துள்ளது.
· ஆண், பெண் பிறப்பு உறுப்பின் மேல்பகுதியில், முதுகெலும்பின் திரிகமுள் பகுதியில் இருந்து இயங்குகிறது.
மறைமனத்துடன் தொடர்புடைய உடலுறுப்புகள்
· ஆண், பெண் இரு பாலரின் பிறப்பு உறுப்புகள்
· சிறுநீரகம், சிறுநீரகப்பை
மறைமனத்தின் செயல்பாடுகள்
· பிறப்பிற்கு உயிர்களின் புதிய காரணமாகிறது.
· உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் உயிர்த் தன்மையை அனுப்புகிறது.
· உயிர்கள் தனித்து வாழ, பிராண சக்தியை உள்வாங்க, கழிவுகளை (மலம், கெட்டநீர்) அகற்ற உதவுகிறது.
· விந்து, கருமுட்டை, மாதவிடாய் சுழற்சி, பிரசவம் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.
· நல்ல உணர்ச்சிகளை வகைப்படுத்துகிறது, கெட்டவற்றை பிரித்தறிய
ஆற்றல் அளிக்கிறது.
· அறுசுவைகளை வேறுபடுத்துகிறது.
· உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டும்.
· பாசம், பந்தம், நேசம், பற்று, பக்தி, அன்பு, காதல், காமம் போன்ற உறவுகளை உருவாக்குகிறது.
· உயிர்சத்து குறைதல்
· ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை
· பாசம், அன்பு, காதல், காமம் போன்ற உணர்வுகளில் கோளாறு
· வெட்கம், கூச்சம், தவறுக்கு பிறரை குறைசொல்லும் பழக்கம்
· கீழ் முதுகுவலி, இடுப்பு பிடிப்பு, அசதி, சோர்வு
· நீர்சத்து குறைவு
· செரிமான குறைவு
· நோய் எதிர்ப்பு சுரப்பிகளில் சமநிலையின்மை
· தாய், தந்தையருக்கு அடிபணிதல்
· ஆனந்தமாக எல்லோருடனும் பழகுதல்
· படுக்கையறைகளில் சந்தன நிறம் பூசுதல்
· கதர் ஆடைகள் அணிதல், சந்தன மாலைகள், கடற் சங்கு அணிதல்
· சந்தனம் பூசி குளித்தல்
· பஞ்சகல்ப பொடி தேய்த்து குளித்தல்
கடைபிடிக்கவேண்டிய பயிற்சிகள்
முத்ரா:
- அப்புமுத்ரா

- லிங்கமுத்ரா

- யோனிமுத்ரா

பிராணாயாமம்:
- நாடிசுத்தி
- பஸ்திரிக்கா
- உஜ்ஜாயி
பந்தம்:
- உட்டியானபந்தம்
- மூலபந்தம்
ஆசனம்:
- திரிகோணாசனம்
- வீரபத்ராசனம்
உணவு முறை:
- நீர்சத்துஅதிகமுள்ள உணவுகள்
- தர்பூசணி, வெள்ளரிக்காய், புடலங்காய், வெள்ளைப்பூசணி
தியானம்:
- மனதைஆக்ஞாவுக்கும் சஹஸ்ராராவுக்கும் இடையில் வைத்து தியானம் செய்வது
மந்திரம்:
“வ உம்” என உச்சரித்தல்
3. மணீபூரக சக்கரம்(பிரபஞ்சமனம்):
அறிமுகம்: 
சூரியனின் மனம்,
சக்தி, செல்வம், வைடூரியம் நிறைந்த “சொர்க்கப்பூமி“
o உடலில் பஞ்சபூத சக்திகளை உருமாற்றி தேவைக்கேற்ப அனுப்புதல்
o சக்தி விநியோகத்தின் தொழிற்சாலை
· இடம்:
தொப்புள் பின், முதுகுத் தண்டில் (மணீபூரஹ
சக்கரம்)
· உறுப்புகள்:
அட்ரீனல் சுரப்பு, கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம், மண்ணீரல், கணையம், வயிறு, குடல் முழுமை
பலப்பட்டால்:
· சூரியன் போல் பிரகாசம், தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம், வீரத்தன்மை
· தெளிவான முடிவு எடுக்கும் திறன்
· செல்வ வளம்
பலவீனமாக இருந்தால்:
· சிறுநீரகம், கல்லீரல், குடல் நோய்கள்,
· நீரழிவு, இரத்த அழுத்த பிரச்சனைகள்,
· பசியின்மை, வயிற்று புண், வீக்கம்,
· தன்னம்பிக்கை,முடிவெடுக்கும் திறன் குறைவு.
வலுப்படுத்தும் முறைகள்:
· விதிமுறைகள்:
சூரிய தியானம், மஞ்சள் ஆடை, எலுமிச்சை,அன்னாசி,மஞ்சள் வாழைப்பழம், மஞ்சள் வர்ண சாப்பாட்டு அறை
· முத்ரா:
சூரிய முத்ரா
ருத்ர முத்ரா
· பிராணாயாமம்:
நாடிசுத்தி
கபாலபதி
பஸ்த்திரிக்கா
· பந்தம்:
உட்டியானா பந்தம்
· ஆசனம்:
தனுராசனம், 
பஸ்சிமோத்தானாசனம்,
ஹலாசனம்
,
மயூராசனம்.
4. அநாகத சக்கரம்(உள் மனம்)

- இடம்: மார்பின் நடுப்பகுதியில், முதுகெலும்பில் உள்ள நான்காவது சக்கரம்.
- பங்கு: வாழ்க்கையில் நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துகிறது.
- 22–28 வயதில் உச்சமாக இயங்கும்.
- உடல் உறுப்பு: தைமஸ் சுரப்பி, இருதயம், நுரையீரல் பகுதி.
- சிறப்புகள் (பலப்படுத்தப்பட்டால்):
- நம்பிக்கை, நிலைத்தன்மை, அன்பு, ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை.
- உறவுகள் வலிமை பெறுதல்.
- பலவீனமாயின்:
- அவநம்பிக்கை, எதிர்மறை எண்ணங்கள், கோபம், சந்தேகம்.
- இதய நோய், மூச்சுத்திணறல், முதுகு/தோள்பட்டை வலி.
பலப்படுத்தும் முறைகள்

- மனப்பாங்கு:
- திடமான நம்பிக்கை.
- அன்பு, நேசம், விட்டுக்கொடுக்குதல்.
- சுற்றுப்புறம்:
- பச்சை நிற சுவர்/திரை/விளக்குகள்.
- பசுமையான இடங்களுக்கு சுற்றுலா.
- உணவு:
- பச்சை காய்கறிகள், கீரைகள்.
பயிற்சிகள்

- முத்ரா: அஞ்சலி முத்ரா, சங் முத்ரா, தீர்க்க சுவாச முத்ரா, அபான வாயு முத்ரா.
- பிராணாயாமம்: கபாலபதி, நாடி சுத்தி, உஜ்ஜாயி.
- ஆசனம்: தனுராசனம், பஸ்சிமோத்தானாசனம், ஹலாசனம், மயூராசனம்.
- தியானம்:
- “யோஉம்” மந்திரம் உச்சரிப்பது.
- பச்சை ஜோதியை நினைத்து தியானம்.
- அகோசரி அல்லது சாம்பவி முத்ரா.
5. விசுத்தி (அதிர்ஷ்ட மனம்):
இடம் & வயது:

· கழுத்துக் குழியின் பின்பக்கம் உள்ள முதுகெலும்பு ,
· 5வது சக்கரம்.
· 29–35 வயதில் இயக்கம் அதிகம்.
சிறப்புகள்:
· சிருஷ்டிக்கு உயிரோட்டம் தரும் சக்தி.
· புதிய மாற்றங்களை உருவாக்கும் திறன்.
· உள்ளுணர்வு, எதிர்காலம் அறிதல், பிறர் எண்ணங்களை அறிதல்.
· தலைமையின் குணம்.
உடலுறுப்புகள்:
· நுரையீரல், தைராய்டு, பாரா தைராய்டு, குரல்வளை, உணவுக்குழாய்.
· தலை–உடல் இடையே இரத்தநாள்கள், நரம்புகள், முதுகுத்தண்டுவட எலும்புகள்.
பலப்பட்டால்:
· ஆளுமை திறன், சுறுசுறுப்பு அதிகரிப்பு.
· பிறர் குணங்களை ஆராய்தல், விமர்சனம், கண்டனம்.
· சப்தம் கேட்கும் திறன் அதிகரிப்பு.
பலவீனமானால்:
· தைராய்டு சுரப்பி கோளாறு → உடல் வேதிப்பொருள் சமநிலை குலைவு.
· உடல் பருமன், வலுவிழப்பு, வளர்ச்சிக் குறைவு, மனஅழுத்தம்.
· தொண்டை வலி, எரிச்சல், வீக்கம்.
· பற்கள், ஈறு பிரச்சினை, வாய் புண்.
· கழுத்து விறைப்பு, உலக ஆடம்பரத்தில் பற்று.
· சொற்களை சரியாக உச்சரிக்க முடியாமை, காது கேளாமை.
· காரணமின்றி அலைந்து திரிதல்.
உதவும் முறைகள்:
· ஆடல், பாடல், கலைகளை ரசித்தல்/பயிற்சி.
· கூச்சமின்றி இருபாலருடனும் பழகுதல்.
· பகல் வானம், மேகங்களை ரசித்தல்.
· யோகிகளுடன் தொடர்பு.
· குளிர்ந்த காற்றை சுவாசித்தல்.
· காலை, மாலை சாம்பிராணி வாசனை.
· ஊதா நிறக் கற்கள் (ஓபல்), ஆகாய நீலக் கற்கள் அணிதல்.
பயிற்சிகள்:
· முத்ரா: கேசரி முத்ரா.
· பந்தம்: ஜாலந்தர பந்தம்.
· பிராணாயாமம்: உஜ்ஜாயி.
· ஆசனம்: ஹாலாசனம், சர்வாங்காசனம்.

· தியானம்: “ஹம்“, “ஸோஹம்” உச்சரிப்பு.
· உணவு முறை: அளவான உணவு, பசித்தவுடன் சாப்பிடுதல்.
6. ஆக்ஞை சக்கரம்
அறிமுகம்:
· ஆக்ஞை சக்கரம் இரு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது மற்றும் அது உடலுக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளை உணர்ந்து, ஆறு ஆதாரங்களின் தலைமைப் பீடத்திற்கு அனுப்பகூடியது. இதுவே பார்வையாளராக உள்ளது.
· ஆக்ஞை சக்கரம் 36 வயது வரை தெளிவாக இல்லாமல் “கண்டதே கோலம், நிண்டதே காட்சி” என்ற நிலைபாட்டில் இருக்கும்; 42 வயதிற்குப் பின் அதன் இயக்கம் தெளிவாக முக்காலமும் அறியக்கூடியதாக ஆகும்..
ஆக்ஞையிலுள்ள உடலுறுப்புகள்:
· உடலின் கார்ப்பஸ் கல்லோசம், கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, தோல் போன்ற உறுப்புகளில் உள்ள உணர்வுகளை எடுத்துக்கொள்ளும் பகுதிகள் ஆக்ஞை சக்கரத்துடன் தொடர்புடையவை.
· எண்ணங்கள் ஐம்புலன்களால் (senses) உருவாகுவதால், புலன்களை கட்டுப்பாட்டில் வைத்தால் ஆக்ஞை சக்கரமும், வெளிமனமும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
· ஆக்ஞை சக்கரம் பாதிக்கப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள்: தலைவலி, கெட்ட கனவுகள், கண் மற்றும் காது பிரச்சினைகள், தோல் வியாதிகள், அசமந்தம் மற்றும் மூளை கோளாறுகள்.
· ஆக்ஞை சக்கரத்தை பலப்படுத்த உதவும் ஆசனங்கள்:
சவாசனம்,

தனுராசனம்,
பஸ்சிமோத்தானாசனம்,
ஹலாசனம்,
சர்வாங்காசனம் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன.
· பிராணாயாமங்கள்:
நாடி சுத்தி,
சந்திரபேதா ஆக்ஞை சக்கரத்தைக் குணப்படுத்த உதவும்.
· உணவு முறையில் வெள்ளை மற்றும் வைலட் நிற உணவுகள் (மாதுளை, பீட்ரூட், கீரைகள், பால் போன்றவை) சாப்பிட வேண்டும்;
தவிர்க்கப்பட வேண்டியவை:
மிளகாய், காப்பி, டீ, மது
· ஆக்ஞை சக்கரத்தை வளர்க்க உதவுபவைகள்:
· இரவு வானில் உள்ள நட்சத்திரங்களை கவனித்தல்
· முகத்தை அண்ணாத்தி வைத்து புருவ மத்தியைக் கவனித்து தியானம் செய்வது
· முழு நிலவின் ஒளியில் அமர்ந்து தியானம் செய்யுதல்
· அடர் ஊதா நிற வண்ண விளக்குகளை பயன்படுத்துவதாலும் , ஆக்ஞை சக்கரம் நன்றாக பலப்படும்.
7. மாதாபித்ரு மனம்:
எல்லா மனங்களுக்கும் மையமாகவும் எல்லாவற்றையும் ஆக்கல், காத்தல் அழித்தல் என முத்தொழிலை உள்ளடக்கி ஆட்சி செய்யக் கூடியதாகவும் உள்ளது.
மூளையின் மையப்பகுதியில் வலது பாகத்திலுள்ளது. இம்மனம் மற்ற எல்லா மனங்களுக்கும் தாயாக இருந்து, தன்னில் தன் ஆத்மாவை சுமந்து, உலக நலனுக்காக தன்னை அர்பணித்து இவ்வுலகை உருவாக்குகிறது.
“மாதாபித்ரு” மனதிலிருந்தே, உலகில் காணுகிறயாவும் தோன்றின. இம்மனம் சூட்சுமமாக மறைந்தே நிற்கிறது. இம்மனதுடன் தொடர்பு கொண்டால், நமக்கு எது வேண்டுமோ, அது நடக்கும்.
கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:
இம்மனதுடன் தொடர்பு கொள்ள மந்திர உச்சாடனங்கள் செய்வது. எல்லாக் குழந்தைகளையும், உயிர்களையும் மாந்தர்களையும், தன்னுடையதாக கருத வேண்டும். ஒரே மாதிரியான அன்பு செலுத்த வேண்டும்.
உடல் உள்ளம் இரண்டையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கடைபிடிக்க வேண்டிய பயிற்சிகள் :
மற்ற சக்கரங்களுக்கு கொடுக்கப்பட்ட எல்லா பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
8. பிதாமனம் :
மனம் என்று கூறமுடியாது, எல்லா அணுவிற்குள்ளும் உயிர்களுக்குள்ளும் இருந்து கொண்டு இயக்குவது இதுதான். நடப்பவற்றை ஏற்றுக் கொள்வதும் இது தான்.
கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள்
பற்றற்ற நிலையை உருவாக்குதல்.
தன்னுணர்வை அறிதல்.
சரணாகதி, மௌனம், போன்றவைகளை கடைபிடித்தல்,
மனம் என்பதை அறிந்து, தெளிந்து, உணர்ந்து அதனோடு ஒன்றி வாழ வேண்டும்.
மாதாபித்ருமனம், பிதாமனம், பலப்பட கண் தியான பயிற்சி :

சிறிது நேரம் கண்களை கவனியுங்கள். மூடி கண் இமைகளை கண் இமைகளில் இருந்து, கண்களினுள் கண்மணிகளை (முட்டை வடிவமான உருண்டையை) உணருங்கள்.
அவ்வுணர்வோடு கண்களில் உள்ள கண்மணிகளின் கனத்தை சிறிது நேரம் கவனிக்கவும்.
கண்மணிகள் இட வலமாகவோ, வல இடமாகவோ கண்களுக்குள் நகர்வதை உள் உணர்வால் உணருங்கள்.
பின்னர் உங்களின் சுவாசம் மிக மெல்லியதாக நிகழ்வதையும் கவனியுங்கள்.
கண் இமை, கண் உருண்டை, சுவாசம் மூன்றையும் புருவ மத்தியில் வைத்து உணருங்கள்.
இடது கண்களை கவனியுங்கள்.
உங்கள் உடம்பு மெல்லியதாக தோன்றும், அப்போது இடது பக்கம் மட்டும் சுவாசம் இருப்பது போல் தோன்றும் போது பௌர்ணமி நிலவு சிகப்பு வானங்களுக்கு இடையில் இருப்பது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
கண்களில் உங்கள் முழு கவனத்தையும் வலது வையுங்கள். உங்கள் உடம்பினுள் மறைந்திருக்கும்.
சூட்சும மனமான மாதபித்ரு மனத்தின் ஆவியால் உங்கள் உடம்பினுள் சக்திகள் பாயும்.
மேலும் சூரியனை மனதால் நினைத்து கொண்டு வலது கண்ணிலிருந்தே கவனியுங்கள். உங்களின் உடம்பினுள் ஆற்றலும், தேஜசும் பெருகும்.










