Skip to content Skip to footer

ATOMS LAW IN UNIVERSE

பிரபஞ்சமும் அணுவின் தோற்றங்களும் அதன் இயக்கங்களும்

 

உயிரின் இயக்க அமைப்பே அணுவாகும்

0. உலக இயக்கத்தில் அணுவே ஆரம்பம் அதுவே முடிவு                                 

                                    ஒன்று இரண்டாகி ஒன்று தனித்திருக்க 

                                    இரண்டுக்குள் ஒன்று, ருவாகி உறவாகி

                                    மூன்றும் சேர்ந்து உறவாடி மூன்றும்  

                                    முதலிழந்து ஒன்றுக்குள் ஒன்றாகி விட்டனவே…

1.அணு என்பது மிகப் பெரியதும் அதுவே மற்றும் அதுவே மிகச்சிறியது. நுண்ணியதிலும் நுண்ணியது. எந்த ஒன்றிலிருந்தும் தனித்து பிரித்தெடுக்க முடியாதது. அணுவே அண்டசராசர இயக்கம் ஆகும். அணுவானது அணுவுக்குள் அணுவாக, ஒன்றுக்குள் ஒன்றாக, நீண்ட தொடராக நீண்டு கொண்டிருந்தாலும், அணுவின் வட்டம் விரிந்தாலும் சுருங்கினாலும். அணுவுக்குள் அணுவாக ஒவ்வோர் அணுவிற்க்குள்ளும் இயக்க விதி மாறாதது.

2.அண்டசராசர இயக்கத்திலுள்ள ஒளி,ஒலி,பால் வீதிகள், உடு மண்டலங்கள், சூரிய குடும்பங்கள், கோள்கள், துணைக்கோள்கள் மற்றும் அதிலுள்ள துகள்கள் நீர் நிலைகள் காற்று செயல்படும் முறைகள், ஆற்றல்கள், அழிவுகள் மற்றும் உலகமென்று சொல்லக்கூடிய அனைத்தும் அணுவின் அடிப்படை இயக்க விதியைக்கொண்டே இயங்குகிறது.

3. அண்ட சராசரத்தில் அனைத்தும் அணுவின் இயக்கத்திலுள்ள நான்கு கட்டமைப்பு விதிகளான

                                   1.தன்முனைப்பு(SELF EVALUATING LIFE FORCE) (SELF)

                                   2.தன்முனைப்பு ஆற்றல் (SELF EVALUATING ENERGY) (SEE)

                                    3.நேர்மறை சுழற்சி ஆற்றல் (SELF ROTATING ENERGY POSITIVE) (SRE +)

                                    4.எதிர்மறை சுழற்சி ஆற்றல் (SELF ROTATING ENERGY NEGETIVE) (SRE-)

4.ஏதாவதுதொரு ஒன்றில் அணுவின் அடிப்படை இயக்க விதியை கொண்டு இயங்குகிறது. அணுவின் நான்கு கட்டமைப்பு விதிகளும் ஒன்றுக்குள் ஒன்றாக தனித்து இயங்கினாலும், அணுவின் நான்கு கட்டமைப்புகளும் ஒன்றுக்குள் ஒன்று தன்முனைப்பு என்ற ஆற்றலால் இணைக்கப்படுகிறது இயக்கப்படுகிறது.

5.அணுவின் நான்கு கட்டமைப்பு விதிகளும் இயக்கத்தில் ஒன்றுக்குள் ஒன்று மாறுபட்ட தன்மையுடையனவாக இருந்தாலும், இவைகள் சேர்ந்து இயங்கும் போது புதியதோர் அணு இயக்கத்துக்களையும், புதியதோர் பரிணாமத்தையும்,பரிமாணத்தையும் உருவாக்குகிறது. 

6.ஒவ்வோர் அணுஇயக்க துகளிலும் உள்ள இந்த கட்டமைப்பு விதிகளைத்தான் அறிவியலார்கள் போட்டான்,நியுட்ரான், புரோட்டான், எலெக்ட்ரான், நியுட்ரினோ என அழைக்கிறார்கள்.

 

7.அண்டசராசரமும் முழுவதும் ஓர் அணு இயக்கம் தான்.பேரணுவானது இயங்கவில்லை, அதன் இருப்பிடமும் அதற்குள் இயங்கும் நான்கு விசைகளின் தொகுப்பும், இயங்கவில்லை அது இடம் பெயரவும் இல்லை. அதன் எல்லையும் மாறவில்லை. 

8.பேரணு அசையா நிலையில், நிசப்தமான சூழ்நிலையில் நீல வண்ண சுற்று வட்டத்தில் தங்கநிற வெளிச்சமாக மையத்தில் மையம் கொண்டுள்ளது.

9.அசையா நிலையில் உள்ள இருப்பிடத்தினுள்ளிருந்தே எல்லாம் அசைகின்றன.

10.பிரபஞ்சம் ஒன்பது வகையான இயக்கத்தில் ஆக்கல்,காத்தல், அழித்தல் என்ற மூன்றின் பெருக்களாக இயங்கி கொண்டிருந்தாலும் அசையா நிலையிலுள்ள தன் முனைப்புக்குள் எல்லாம் கட்டுப்படுகிறது.

                                       நான் அசையவில்லை உடல் அசைகிறது, 

                                       உடல் அசையவில்லை மனம் அசைகிறது, 

                                        உடல் அசைகிறது பூமி அசையவில்லை, 

                                        பூமி அசைகிறது சந்திரன் அரசயவில்லை, 

                                        சந்திரன் அசைகிறது சூரியன் அசையவில்லை, 

                                        சூரியன் சுழல்கிறது சுற்றுகிறது  ஆனால் 

                                         அதன் மையமும் மையத்தின் இருப்பிடமான பிரபஞ்சம் அசையவில்லை

11.அணு என்பது ஜீவ ஆற்றலாகவும், அணு இயக்கதுகள் என்பது ஆற்றலாகவும், அதே நேரத்தில் அணுவின் இயக்க விதிக்கு கட்டுப்பட்டவையாகவும் உள்ளது. வெற்றிடமும் அணுவின் இயக்கவிதிக்கு கட்டுப்பட்டவையாக உள்ளது.

1. தன் முனைப்பு SELF (Self evaluating life force)

  

1.தன் முனைப்பு  தனக்கு தேவையானவற்றை தானே தேர்ந்தெடுத்து, தனக்கு தேவையுள்ள வடிவில் உருவகம் செய்து, அவற்றை பாதுகாத்து, தேவையற்றபோது தேவையற்றவற்றை விலக்கி வாழ்வின் அனுபவத்தை தன்னுள் பதித்து கொள்ளும் உயர் சக்தியாகும். 

2.தன் முனைப்பு உருவமற்றது போல் தோன்றினாலும் எல்லா தோற்ற முடிவுகளின் காரணகர்த்தாவாக உள்ளது.

3.அண்டசராசரத்திலுள்ள ஒவ்வோர் உயிரும் துகள்களும் தனக்குள் உள்ள தன் முனைப்பின் அம்சத்தாலேயே உழன்று கொண்டுள்ளது. 

4.அண்டசராசர தோற்றத்திற்கு முதல் காரணமான தன்முனைப்பு மிகப் பெரியது. மனிதகுல ஆராய்ச்சியில் அதன் ஒரு பகுதியைக்கூட கண்டுபிடிக்கபடவில்லை. 

 

5.சமீபமாக கருந்துளை ஆராய்சியில் பிரபஞ்மையம் என புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தில் மூன்று உலகங்களின் காட்சி ஆமைப்பு உள்ளது. 

6.தன்முனைப்பே அகிலத்தின் அனைத்து இயக்கத்திற்கும் மூலமும், மூலகாரணமாகவும் மூவுலகிற்கும் தலைவனாக உள்ளது.

7.சகல வரையறைக்கும் அப்பாற்பட்டது.நுண்ணியதிலும் நுண்ணியது. பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும், விரிவாக்கத்திற்கும், மாற்றத்திற்கும், சுழற்சிக்கும் காரணமாக உள்ளது. 

8.தன் முனைப்பு அடரத்தியும் செறிவும் அதிகமாக இருந்தால், அங்கு உயிரோட்டம் அதிகமாகவும், தன் முனைப்பு அடர்த்தியும் செறிவும் குறைவாக இருந்தால் உயிரோட்டம் குறைவாகவும் இருக்கும். சூழ்நிலை எப்படி இருப்பினும் தன்முனைப்பு இல்லாத இடமே இல்லை.

9.தன் முனைப்பின் நிறை நீளம் கணக்கற்றது. எவ்வளவு தூரம் என்பதை யாராலும் அளவிட முடியாது.தன் முனைப்பு நிறமற்றிருப்பதால் சாதரண கண்களுக்கு புலப்படுவது இல்லை. அணு இயக்கத்துகள் முதல் அண்டசராசரம் வரை மற்றம் அனைத்தும் தன் முனைப்பின் சக்தியில்தான் மிதக்கின்றன. 

 

                                                   பகல் சூரியனுக்கு உறவு, 

                                                   இரவு சந்திரனுக்கு உறவு, 

                                                   பூமி கோள்களுக்கு உறவு, 

                                                   கோள்கள் உயிர்களுக்கு உறவு,  

                                                   காற்று உயிருக்கு உறவு,

                                                   உணவு உடம்புக்கு உறவு, 

                                                   ஆண் பெண்ணுக்கு உறவு 

 

                                                   ஆனால் எல்லாவற்றிக்கும் தன்முனைப்பே ஊடகமாகவும் உறவாகவும் உள்ளது.

10.சிரிய துகள் முதல் அண்டசராசரத்தில் இயங்கும் அனைத்து வகையான பொருட்களின் இயக்கங்களும்  தன் நிலையின் தொடர் பயனத்தால் உருமாற்றம் அடைந்து கொண்டேயுள்ளது. ஆனால் தன் முனைப்பு எவ்வித பயணமும், உருமாற்றமும் அடையவில்லை. ஏனெனில் எல்லா இடங்களிலும் நடுமையத்தில் இதுவே நிறைந்துள்ளது.

11.தன்முனைப்பு தன்னை அடையாளம் காட்டும் போது இருட்டாகவும் வெளிச்சமாகவும் வெளிப்படுத்துகிறது. தன்முனைப்பு இயங்கும்போது சூரியனாகவும் கண்களை பறிக்கும் ஒளியாகவும் காட்சியளிக்கிறது. எல்லா ஆற்றல்களையும் உள்வாங்கும் சக்தியாகவும், எல்லா ஆற்றல்களையும் தன் சுதந்திர கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்துள்ளது. தன்முனைப்பே நிலையான ஆற்றல் அல்லது தேக்க ஆற்றல் எனவும் அழைக்கலாம்.

1.தன் முனைப்பு(SELF) “அணுவுக்குள் அணுவாக” இருந்து..

2.தன்முனைப்பு ஆற்றல் (SEE) ஆன்மா

3.நேர்மறை சுழற்சி ஆற்றல் (sre+) சக்தி

4.எதிர்மறை சுழற்சி ஆற்றல் (sre-) மனம்

மேல் கீழ், வலது இடது, எனவும், நான்கு புறத்திற்கும் (எல்லா திசைகளுக்கும்) தன்முனைப்பே மறைமுக காரணமாகவுள்ளது.

தன் முனைப்பின் பிற பெயர்கள்:

1. இறைவன்,

2. இயற்கை,

3. மைய ஆற்றல்,

4. உணர்வுகள்,

5. அஹம்

6. ஆத்மா.

7. ஜீவன்.

8. ஆண்சக்தி 

9.சமநிலை(Gravitational force) 

 

தன் முனைப்பு ஆற்றல் (SELF EVALUATING ENERGY) (SEE): 

 

 

1.தன் முனைப்பு என்பது இயங்கும் போது ஆதியாகவும் அதுவே அந்தமாகவும் விளங்கினாலும், “ஆதி” அந்தம் என்ற இரு இயக்கத்திற்கு இடையில் நடைபெறும் எல்லா காட்சிகளும் மற்றும் தோற்ற மறைவுகளும் தன்முனைப்பு ஆற்றலின் இயக்கத்தை பொறுத்து அமையும்.  

2. ஓர் அணுவின் முழுப்பகுதிக்கும் இதுவே அடித்தளம். தன் முனைப்பு ஆற்றல்தான், சிறிய அணுத்துகள் முதல் அண்டசராசரம் வரை அடிப்படை ஆற்றலாக இருந்து விரிவு அடைந்து கொண்டேயுள்ளது. 

4.உருவங்கள் தோன்றுவதற்கும், தோன்றிய “உரு” வின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கும் தன்முனைப்பு ஆற்றலின் சக்கர சுழற்சியே காரணமாகவுள்ளது. 

5.தன் முனைப்பு ஆற்றலே “மஹா சூரியனாகவும்” சூரியன்களாகவும் எல்லாருக்கும் தலைவியாகவும், தலைவனாகவும் எல்லாவற்றையும் அறிய வைக்கும் ஊடகமாகவும் உள்ளது.

6. விஞ்ஞான கூற்றுபடி தூண்டப்பட்ட நியூட்ரானிலிருந்து தொடர்ந்து கதிரியக்கம் தோன்றுவது போல தன் முனைப்பு ஆற்றலில் இருந்து (சக்கரசுழற்சியினால்) தொடர்ந்து கதிரியக்கம் நடைபெற்றுக் கொண்டேயள்ளது.

 

7. தன்முனைப்பு ஆற்றலே எட்டு திசைக்கும் கதிரியக்கமாக பரவுகிறது.

8. தன்முனைப்பு ஆற்றலில் “தன்முனைப்புக்கு” இருப்பது போல் பகுத்தறியும் ஆற்றல் “தன்முனைப்பு ஆற்றலில்” இருப்பதில்லை. இருப்பினும் தன்முனைப்பு ஆற்றலானது தன்னிடமிருந்து முழுமையான ஆற்றலை வெளிப்படுத்துவதோடு பகுத்தறிவதற்குரிய உணர்வுக்கு ஏற்ப உணர்ச்சி வசப்பட கூடிய மற்றும் உணர்வுக்கு ஏற்ப முடிவு எடுக்க கூடிய ஆற்றல் தன்மைகளை உள்வாங்கி உடனே செயல்படும் அமைப்பு இருக்கும். நேர்மறை சுழற்சி ஆற்றலும், எதிர்மறை சுழற்சி ஆற்றலும் தன்முனைப்பு ஆற்றலிலிருந்தே உருவாகின்றன.

 

9. தன் முனைப்பு ஆற்றலின் ஒளிவட்ட விரிவாக்க நிலை சுருங்கும் போது “தன் முனைப்பின்” தன்மை அதிகமாகவும், ஒளிவட்ட விரிவாக்க நிலை விரியும் பொழுது “தன் முனைப்பின்” தன்மை குறைந்தும் உள்ளது.

10. தன் முனைப்பு ஆற்றலின் தன்மை, இயக்கம், விகிதாச்சாரம் இவற்றை பொருத்துதான் “உரு” மற்றும் உயிர்களின் உருவ அமைப்பு மாறுபடுகிறது.

11. தன் முனைப்பு ஆற்றலில் உள்ள “தன் முனைப்பின்” தன்மையும், அதன் செறிவையும் பொறுத்து தான் வைரஸ் கிருமி முதல் மனிதன் வரை உருவாகிறான்.

12. “தன் முனைப்பின் ஆற்றலை” சேமிக்கும் எந்த ஓர் உயிரும் மற்றும் ஒவ்வொரு துகள்கள் முதல் கோள்கள் வரை நீண்ட நாள் காட்சிகுரிய உலகில் வலிமையுடன் நீடித்திருக்கும்.

13. தன் முனைப்பு ஆற்றலின் வட்டத்திற்குள் (சுழற்சி நிலையத்திற்க்குள்) வேறு எந்த வகையான ஆற்றலும் உள் நுழைய முடியாது. நேர்மறை சுழற்சி ஆற்றல், எதிர்மறை சுழற்சி ஆற்றல் என இரு வகையான எதிர்மறை சுழற்சி ஆற்றல்கள் தன் முனைப்பு ஆற்றலிலிருந்து உருவாகிறது. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தோ அல்லது கவர்ந்தோ அல்லது எதிர்த்தோ இயங்குகிறது. இவ்வாற்றல் இயங்குவதிலிருந்து இரவு, பகல் ,ஒளி ,ஒலி, ஆண், பெண், நல்லது, கெட்டது, நான், நீ என மாறுபட்ட குணங்கள், மேல், கீழ், உயர்வு தாழ்வு, துவைதம், உடல் மனம், அறிவு அறியாமை என் பேதங்களும், பேதங்களிலிருந்து பலகுணங்களும், குழப்பங்களும், ஒன்பது வகையான இயக்கங்களும், ஏழு வண்ணங்களும், சப்தங்களும், உருவாகிறது.

14.நேர்மறை சுழற்சி ஆற்றல் (SRE+) சக்தி ,எதிர்மறை சுழற்சி ஆற்றல் (SRE-) மணம், என்ற இரண்டு ஆற்றல்களின் உள் ஆற்றல்களாகவும் வெளி ஆற்றல்களாகவும் தன் முனைப்பு ஆற்றலேயுள்ளது. நேர்மறை சுழற்சி ஆற்றலாலும், எதிர்மறை சுழற்சி ஆற்றலாலும் தன் முனைப்பு ஆற்றலின் தன்மை உணர முடியுமே தவிர தன் முனைப்பு ஆற்றலின் இயக்கத்தையோ, வேகத்தையோ கட்டுப்படுத்த முடியாது.

15.நேர்மறை சுழற்சி ஆற்றலும், எதிர்மறை சுழுற்சி ஆற்றலும் தங்களுக்குள் சுழலும் போது தன் முனைப்பு ஆற்றலின் இயக்கம் உள் ஆற்றலாக இவ்விரண்டிற்குள்ளும் மறைந்திருக்கும். நேர்மறை சுழற்சி ஆற்றலும், எதிர்மறை சுழற்சி ஆற்றலும் தங்களுக்குள் பிரிக்க முடியாத மூன்று கட்ட நிலையில் இணைந்த பிறகு தங்களுக்குள்ளிருந்து தங்களுக்குள் சேமித்து வைக்கப்பட்ட தன் முனைப்பு ஆற்றலை வெளிவிடுகிறது. (ஆணும் பெண்ணும், சந்திரனும் சூரியனும், பால் வீதியும் உடுமண்டலங்களும் இணைந்த பிறது)

தன் முனைப்பு ஆற்றலின் பிற பெயர்கள்:

ஆற்றல், நிலையான தங்க நிற சுழற்சி வீச்சாற்றல்

தொடர் ஆற்றல

உயிராற்றல்

கட்டுபடுத்த இயலாத ஆற்றல்

உள் முக (மறைமுக) ஆற்றல்

 

எதிர்மறை சுழற்சி ஆற்றல் (SELF ROTATING ENERGY NEGATIVE) 

 

  

1.எதிர்மறை சுழற்சி ஆற்றல் துகள்கள் முதல் அண்டசராசரம் வரை அனைத்ததையும் தன் கட்டுபாட்டுக்குள் வைத்துள்ளது. இதன் ஆற்றல் கண்ணுக்கு தெரிவது இல்லை. 

2.இதுவே உணரும் ஜீவனாக ஏகமாக நிறைந்துள்ளது. கண்ணுக்கு தெரிந்தவரை நிலவாக, பால் வீதியாக, பாலாக, பனிக்கட்டிகளாக நேர்மறை சுழற்சி ஆற்றலின் சிறுபகுதியை தன்னுடன் இணைத்து தன்னுருவத்தை வெளிப்படுத்துகிறது. 

3.தான் என்ற அகந்தை உணர்வுக்கு அடித்தளமாகவும், அனுபவிக்கப்பட்ட உணர்வுகளின் (எண்ணங்களின்) சேமிப்பு கிடங்கான மனமாகவும் அண்டசராசரம் முழுவதும் நிறைந்துள்ளது. 

4.எதிர்மறை சுழற்சி ஆற்றல் கண்ணுக்கு தெரியாவிட்டாலும் இதன் எடையும் நேர்மறை சுழற்சி ஆற்றலின் எடையும் ஒரே அளவாக இருப்பினும், எதிர்மறை சுழற்சி ஆற்றலில் தன் முனைப்பின் தன்மை அதிகமாக உள்ளது.  

5.நேர்மறை சுழற்சி ஆற்றல் (பூமி) ,எதிர்மறை சுழற்சி ஆற்றலின் (சந்திரனின்) கட்டுப்பாட்டுக்குள் தான் சுழல்கிறது. 

 

நேர்மறை சுழற்சி ஆற்றல் (SELF ROTATING ENERGY POSITIVE):

1.நேர்மறை சுழற்சி ஆற்றல் தன்முனைப்பு ஆற்றலிலிருந்து தனித்து இயங்கும் இரு எதிர்மறை ஆற்றலில் அதிகமாக இயங்கக்கூடிய ஆற்றல் எதுவெனில் அது நேர்மறை சுழற்சி ஆற்றல் ஆகும். 

2.இவ்வாற்றலே கண்களால் பார்க்ககூடிய உருவாக உலகில் உள்ள சிறிய துகள் முதல் பூமி மற்றும் ஏனைய கோள்கள் முதல் அண்டசராசரத்தில், உருக்கொண்டு அலைந்து சுழன்று திரியும் அனைத்தும் இவ்வாற்றலின் உருவகமே.

3.நேர்மறை சுழற்சி ஆற்றல்,எதிர்மறை சுழற்சி ஆற்றலுடன் தொடர்பு கொண்டு இணைந்து, நீரை உருவாக்கி, நீரிலிருந்து உப்பை உருவாக்கி, உப்பிலிருந்து கடல் பாறை உருவாகி, கடல் பாறையிலிருந்து ‘கற்பாறை’ ‘உருவாகி’ ஒவ்வொரு துகள்களிலும் உள்ள ஏழு நிலைகளில் நேர்மறை சுழற்சி ஆற்றல் தன் ஆதிக்கத்தை செலுத்தி “தன் உருவத்தை வளர்த்து” துகள்கள் முதல் கோள்களாகவும் அண்டசராசரமாகவும் சுழன்று கொண்டுள்ளது.  

4.உடல், பூமி கோள்கள் அனைத்தும் இவ்வாற்றலின் வெளிப்பாடே. “இவ்வாற்றல்” எதிர்மறை சுழற்சி ஆற்றலின் கட்டுபாட்டுக்குள் இயங்ககூடியதாகவும் எல்லைகள், திசைகள், எடை பருமன் உடையதாகவும், வளர்தல், மாற்றம், மற்றும் மறைகள் தன்மை உடையதாகவும் உள்ளது

அணுவின் இயக்கமும் அதன் விரிவாக்கமும்:

1. தொடர் சுழற்சி ஆற்றல் தொடர்ந்து ஏகமாக பரவுதலும் தொடர் சுழற்சியால் நடை பெற்றுகொண்டேயுள்ளது

2. தொடர் இயக்கத்தில் இரு வகையான எதிர் எதிர் ஆற்றல்கள் (SRE- SRE+) ஒன்றுக்குள் ஒன்றாக கவர்ந்தோ அல்லது எதிர்த்தோ அரை வட்ட வடிவில் உருகொண்டு மேலும் கீழுமாக இயங்கிக்கொண்டுள்ளது.

3. மேல் பக்கமாக அரைவட்ட வடிவில் அமைந்துள்ள எதிர்மறை (Sre -) ஆற்றல் எல்கைக்குட்பட்டு, கீழ் பக்கமாக அரைவட்ட வடிவில் அமைந்துள்ள நேர்மறை (SRE+) ஆற்றல் மேல் நோக்கி சுழல்கிறது.

 

4. இரு வகையான எதிர் எதிர் ஆற்றல்களும் (SRE -SRE+) ஒன்றுக்குள் ஒன்றாக மூன்று இடங்களை மையமாக வைத்து ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாகிறது.

5. தொடர் சுழற்சி ஆற்றலிலிருந்து அதன் இடது புறமாக ஒளியும் ஓசையுமின்றி தங்க நிற கதிர்கள் மட்டும் தொடர்ச்சியாக தன் எல்கையை தாண்டி நீண்ட தூரம் சென்று கொண்டேயுள்ளது.

6. இரு எதிர்மறை ஆற்றல்கள், தொடர் சுழற்சி ஆற்றலில் இருந்து சற்று விலகி தனித்து இயங்குகிறது. இரு வகையான எதிர் எதிர் ஆற்றல்களும்(SRE-, SRE+) தங்கள் அரைவட்ட முடிவில் வலதிருந்து இடதுபுறமாகவும் பின்னர் இடதிருந்து வலதுபுறமாகவும் ஒன்றுக்குளொன்று மாறி மாறி தொட்டுவிட்டு மீண்டும் அதாவது தங்கள் ஆரம்ப இடத்திற்க்கே வருகின்றன.

7. தொடர் சுழற்சியில் இரு வகையான எதிர் எதிர் ஆற்றல்கள் (SRE-, SRE+) ஒன்றுக்குள் ஒன்றாக கவர்ந்தோ அல்லது எதிர்த்தோ அரை வட்ட வடிவில் உருகொண்டு எதிர்மறை (SRE -) ஆற்றல் முழு வட்ட வடிவில் கீழுமாகவும் நேர்மறை (SRE+) ஆற்றல் முழுவட்ட வடிவில் மேல் நோக்கி சுழல்கிறது.

8. இருவகையான எதிர் எதிர் ஆற்றல்களும் (SRE-SRE+) முழு வட்டவடிவில் ஒன்றுக்குள் ஒன்றாக சுழன்ற பின் மீண்டும் தங்கள் ஆரம்ப இடத்திற்கே வருகின்றன.

  

9. தொடர் சுழற்சி ஆற்றல் இரு வகையான எதிர் எதிர் ஆற்றல்கள் (SRE-SRE+) முழுவட்ட வடிவில் அவைகளுக்குள் அசைவு அற்று காட்சி தருகிறது.

10. தொடர் சுழற்சி ஆற்றல் இரு வகையான எதிர் எதிர் ஆற்றல்கள் (SRE-SRE+) மேல் கீழ் என்ற நிலை அற்று சக்கரம் சம நிலைக்கு வருகிறது.

11. சக்கரத்தின் பயணம்-சம நிலைக்கு வந்த சக்கரம் வடக்கு (தன் இருப்பிடத்திற்கு) நோக்கி பயணம் ஆகிறது. 

12. ஆதியும் அனைத்திற்க்கும் தலைமை பீடமாக விளங்கும் சப்தமின்றி நிசப்மாக ஒளி நிறைந்து விளங்கும் ஆதி சக்கரத்துடன் தனித்து இயங்கிய சக்கரம் இணைந்து காணாமல் போகிறது. 


13. தொடர் சுழற்சி (தன்முனைப்பு ஆற்றல்) ஆற்றலிலிருந்து தொடர்ந்து தங்க நிற பட்டை போன்ற அமைப்புடைய கதிர்கள் எல்லா திசைகளிலும் வேகமாக தொடர்ந்து சென்று கொண்டேயுள்ளது.

15. தொடர் சுழற்சி (தன் முனைப்பு ஆற்றல்) ஆற்றலிலிருந்து அதற்கு முன்புறமாக வடிவ அமைப்பில் இரு வகையான தங்க நிற பட்டை போன்ற அமைப்புடைய பட்டைகள் உருவாகின்றன. அருகில் சென்றபோது தோன்றும் காட்சிகள்

16.அணு இயக்கம் அணு சுழற்சியால் தான் ஒளியும் ஒலியும் உருவாகிறது.

                     இவ்வுலகில் உள்ள எல்லா உருவங்களும் ஒளியின் குழந்கைகள்

                     இவ்வுலகில் உள்ள எல்லா ஆற்றல்களும் ஒலியின் குழந்கைகள்

 

 அண்டசராசர இயக்கமும் அணு விதியும்: 

 

1.ஒளி, ஒலி பால் வீதிகள், உடு மண்டலங்கள் சூரிய குடும்பங்கள், கோள்கள், துணைக்கோள்கள், ஜீவிதத்திற்குரிய கோள்கள் மற்றும் அதிலுள்ள துகள்கள், நீர் நிலைகள், காற்று மற்றும் உயிரினங்கள் செயல்படும் முறைகள், ஆற்றல்கள், அழிவுகள் ஆகியவை அனைத்தும் இயக்க விதியை கொண்டே இயங்குகிறது.

2.தொடர் சுழற்சி ஆற்றலும், நேர்மரை (SRE+) ஆற்றலான பட்டை போன்ற அமைப்பும் பின்புலமும் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

 

3. இரு எதிர்மறை தங்கநிற பட்டை ஆற்றல்கள் ஒன்றுக்கொன்று எதிர்திசையில் தங்கள் இருப்பிடத்திலிருந்து முழு சுழற்சி கொண்டு எதிர்முனையை அடைகிறது.

4.மேல் பக்கமாக அரைவட்ட வடிவில் அமைந்துள்ள தங்க நிற பட்டை போன்ற அமைப்புடைய எதிர்மறை (SRE -) ஆற்றலின் எல்கைக்குட்பட்டு, நேர்மறை (SRE+) ஆற்றலான பட்டை போன்ற அமைபிற்க்குள் (கீழ் உள்ள படத்தைப் பார்க்க துகள் துகள்களாக மேல் நோக்கி சுழல்கிறது.

4.மேல் பக்கமாக அரைவட்ட வடிவில் அமைந்துள்ள தங்க நிற பட்டை போன்ற அமைப்புடைய எதிர்மரை SRE-) ஆற்றலின் எல்கைக்குட்பட்டு, கீழ் பக்கமாக அரைவட்ட வடிவில் அமைந்துள்ள தங்க நிற பட்டை போன்ற அமைப்புடைய நேர்மரை (SRE+) ஆற்றல் மேல் நோக்கி மெதுவாக சுழல்கிறது. 

5.இரு வகையான எதிர் எதிர் ஆற்றல்களும் ஒன்றிணைந்து, நிசப்த்மான இருட்டு ஊதா நிறத்தில் தங்களுக்குள் ஐக்கியப்பட்ட பிறகு,இரு வகையான எதிர் எதிர் ஆற்றல்களும் (SRE-, SRE+) ஒன்றுக்குள் ஒன்றாக மூன்று இடங்களில் ஒன்றுக்குள் ஒன்று தொட்டு பொருந்துமளவிற்கு வெள்ளி நட்சத்திரம் போன்ற அமைப்பை மையமாக கொண்டு ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாகிறது. 

 

6..இரு வகையான எதிர் எதிர் ஆற்றல்களும் மூன்று இடங்களிலும் ஒன்றுடன் ஒன்று பொருந்தும் போது பின் புறம் உள்ள வெளிச்சம் குறைந்து குறைந்து இருட்டாகிறது. இதனுடன் “கிராக்” என்ற சப்தம் வருகிறது. தொடர் சுழற்சி ஆற்றல் கண்களுக்கு புலப்படுவது இல்லை .

7.  இரு அரைவட்ட வடிவில் அமைந்துள்ள தங்க நிற பட்டைகள் இல்லாத சூழ்நிலையில் தங்களின் அரைவட்ட மையத்திலிருந்து தங்களுக்குள்ளிருக்கும் தொடர் சுழற்சி ஆற்றலை இடதுபுறமாக ஒளி ஒலி ஓசையுடன் மூன்றடுக்கு தங்க நிற பட்டை கதிர்களாக தொடர்ச்சியாக வெளிவிடுகிறது. 

8.அதற்கடுத்து தங்களின் தொடர் சுழற்சி ஆற்றலிருந்து அதன் வலதுபுறமாக ஒளியும் ஓசையுமின்றி தங்க நிற பட்டை கதிர்கள் மட்டும் தொடர்ச்சியாக தன் எல்கையை தாண்டி நீண்ட தூரம் சென்றுகொண்டேயுள்ளது.

9.மேல் பக்கமாக அரைவட்ட வடிவில் அமைந்துள்ள தங்க நிற பட்டை போன்ற அமைப்புடைய எதிர்மரை (SRE-) ஆற்றலின் எல்கைக்குட்பட்டு, கீழ் பக்கமாக அரைவட்ட வடிவில் அமைந்துள்ள தங்க நிற பட்டை போன்ற அமைப்புடைய நேர்மறைம (SRE+) ஆற்றல் வலதும் இடதாக அசைந்து தங்கள் அரைவட்ட கடைசி முனையின் வலதிலிருந்து மாறி மாறி தொட்டுவிட்டு மீண்டும் அதாவது தங்கள் ஆரம்ப இடத்திற்க்கே வருகின்றன.

10.தொலைதூர மேல்புரத்தில் இரு எதிர்மறை ஆற்றல்களும் கீழ்புறமாக முன்னோக்கி வருகிறது. தூரத்தில் பட்டைகள் பெரியதாகவும் அருகில் வரும்போது சிறியதாகவும் தோன்றுகிறது. பின்புலம் மழைக்காக கருக்கொண்ட மேகம் போல் காட்சியளிக்கிறது.

11.இரு எதிர்மறை தங்கநிற பட்டை ஆற்றல்கள், ஒன்றுக்கொன்று, எதிர்திசையில் ஒன்றுக்குள் ஒன்றாக கவர்ந்தோ அல்லது எதிர்த்தோ முழு வட்ட வடிவில், எதிர்மரை (SRE-) ஆற்றல் கீழுமாகவும் நேர்மறை (SRE+) ஆற்றல் முழு வட்ட வடிவில் மேல் நோக்கியும் தங்கள் இருப்பிடத்திலிருந்து முழு சுழற்சி கொண்டு எதிர்முனையை அடைகிறது.

12.எதிர்முனையை அடைந்த இரு வகையான எதிர் எதிர் ஆற்றல்களும் (SRE-, SRE+) ஒன்றாக சுழன்ற பின் மீண்டும் தங்கள் ஆரம்ப இடத்திற்க்கே வேகமாக திரும்புகின்றன.

13.தொடர் சுழற்சி ஆற்றல் சக்கரம் இரு வகையான எதிர் எதர் ஆற்றல்கள் (SRE-, SRE+) முழுவட்ட வடிவில் அதனதன் இடத்தில் அசைவு அற்று காட்சி தருகிறது.

14. தொடர் சுழற்சி ஆற்றல் சக்கரம், இரு வகையான எதிர் எதிர் ஆற்றல்கள் (Sre-, Sre+) மேல் கீழ் என்ற நிலை அற்று சம நிலைக்கு வருகிறது.

15.சக்கரத்தின் பயணம்-சமநிலைக்கு வந்த சக்கரம் இரு எதிர்மரை தங்கநிற பட்டைகள் ஆற்றலற்ற நிலையில் வடக்கு நோக்கி பயணம் ஆகிறது.சக்கரத்தின் பயணம்  ஆதியும் அனைத்திற்க்கும் தலைமை பீடமாகவும், சப்தமின்றி நிசப்தமாக ஒளி நிறைந்து விளங்கும் ஆதி சக்கரத்துடன் தனித்து இயங்கிய சக்கரம் இணைந்து காணாமல் போகிறது.