uNIVERSE
பிரபஞ்சம் என்றால் என்ன?
மனித உடம்பு பல அற்புதங்களையும், பிரபஞ்ச இரகசியங்களையும் தன்னுள் கொண்டு இயங்குகிறது. இதை சுருக்கமாக அக்காலத்திலேயே சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்றனர்.
இன்றைய அறிவியலாளர்கள், அன்று மெய்ஞானிகள் சொன்னவற்றில் பலவற்றை சாட்சிகளோடு நிரூபித்துவிட்டனர். மெய்ஞானத்தில் சொன்ன பலவற்றை எல்லோரும் எளிதாக பயன்படுத்தும்படி அறிவியலாக்கி செயல்படுத்துகின்றனர்.உதாரணமாக அன்று சில மெய்ஞானிகள் ஒளி அலைகளை அடக்கி தொலைதூர காட்சிகளை உட்கார்ந்த இடத்திலிருந்தே பார்கும்படியும் மற்றும் மனதிலிருந்து டெலிபதி (ஒருவர் ஓரிடத்திலிருந்து கொண்டு தொலைதூரத்தில் இருப்பவருடன் மனதால் பேசுவது) மூலம் பேசிய சிலவிஷயங்களை இன்று அறிவியலாளர்கள் அலைபேசியை தொலைபேசியாக மாற்றியும் எல்லோரின் கைகளில் கிடைக்கும்படி செய்துவிட்டனர்.

உடம்புக்கு வெளியில் உள்ள பஞ்சபூதங்களைக் கட்டுப்படுத்த, விஞ்ஞானம் மின்சாரத்தைக் கண்டுபிடித்து, அதன் மூலம் காற்றை காற்றாடியிலும், மின்சாரத்தை சூடுபடுத்தும் கம்பிகள் மூலம் நெருப்பையும், குளிர்சாதன பெட்டிகள் மூலம் நீரையும், பூமியின் காந்தசக்தியை இரும்பைக்கொண்டு காந்தமாகவும், ஆகாயத்தை வெற்றிட துடைப்பான் (வாக்யூம் கிளீனர்) மூலமும் கட்டுப்படுத்தி விட்டது. ஆனால் அக்கருவிகளை வைத்து மனிதர்களை இயக்குகின்ற பஞ்சபூதங்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.
அறிவியல் தன் கையில் உள்ள மின்னனு நுண்ணோக்கி (எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப) மூலமும், இன்னும் ஆழமான கருவிகள் கொண்டு மனிதனின் உடம்பு முதல் உடம்பில் மறைந்திருக்கும் செல்களையும், அதனடுக்குகளையும் மற்றும் செல்லில் மறைந்திருக்கும் நீர்ப்படிக குழம்புகளையும் (cytoplasm) அதனுள் மறைந்திருக்கும் கருமையம் மற்றும் கருமையத்தில் உள்ள மரபணுவை பயன்படுத்தி ஒரேமாதிரியான ஒத்த உருவங்கள் கொண்ட பல உயிர்களையும், ஓர் உடம்பை பயன்படுத்தி உறுப்புகள் தயாரித்தல் மூளையை ஆட்டிவைக்கக்கூடிய பலகருவிகள் பலஊக்கமருந்துகள் என விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது.

ஆனால் இன்னும் அறிவியலாளர்களால் தன் உடம்பினுள் மறைந்திருக்கும் சூட்சும உடம்புகளான ஜீவன், உயிர், சக்தி, மனம், ஆன்மா, ஆத்மா இவை போன்ற பலவும் இன்னும் கண்டு பிடிக்கப்படாமலே உள்ளன.
உலகில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் காரணகாரியம் இருப்பது போல் மனிதனிலும், மனிதனை சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம்காரியம் உண்டு. காரணமின்றி எதுவும் நடப்பதில்லை. இவற்றை மெய்ஞானத்தின் மூலம் இன்றி அறிவியலைக் கொண்டு கண்டு பிடிக்க இயலாது.ஒரு செல்லை எடுத்துக்கொண்டால் அதில் இரு வகையான நிகழ்வுகள்
1.செல் இரண்டாக பிரிதல்

2.ஒரே செல் பலமடங்காகுதல்

3.அண்டமும் விந்துவும் இணைந்து ஒரு செல் ஆதல்.

செல் இரண்டாதல் என்பது அழகிய கண்டுபிடிப்பு அற்புதமான விளக்கங்கள். ஆனால் ஏன் ஆகிறது?.அதற்கு காரணகர்த்தாக்கள் யார்? என்று வினவினால் அதற்கு விடை தெரியவில்லை.
அது மரபணுவில் உள்ளது எனலாம். மரபணுவில் யார் தொடர்ந்து பயணிக்கிறார்கள்? ஆனால் அந்த மரபணு எப்படி உருவானது? அதை யார் நிறைவாய் செய்கிறார்கள் என்பதற்கெல்லாம் விடை தெரியாமல் உள்ளது.


அதற்கு காரணம், மனித உடம்பை ஒரு ஜீவனாக கருதாமல் அவற்றை ஒரு ஜடமாக, காற்றை உள்ளடைத்து இயங்கும் கருவியாக வைத்து ஆராய்ச்சி செய்வதே காரணம்.
உடம்பு, கண்களுக்கு தெரியாத கருவில் (Nucleus) இருந்தே உருவாகிறது. அக்கரு உருவாக ஓர் ஆணும் பெண்ணும் தேவைப்படுகிறது.
ஆணுக்கு விந்து உருவாக காரணமும், பெண்ணுக்கு அண்டம் உருவாக காரணமும் தேடும் பொழுது அவர்களுக்கு ஆண்மை, பெண்மை என்ற தன்மைகளுக்குரிய (Hormones) தேவைப்படுகிறது.
இச்சுரப்பிகள் எங்கிருந்து வருகிறது? என நாம் அதற்குரிய உறுப்புகளான கருமுட்டையையும் விந்தகப்பையையும் தேடுகிறோம்.
கரு முட்டைக்கும், விந்தகப்பைக்கும் இத்தன்மைகளை யார் அளித்தது. காரணம் காரணமின்றி எதுவும் நடக்காத பொழுது, இதற்குரிய காரணத்தை ஏன் அறிவியல் அறிய மறுக்கிறது.
பானையில் இருந்தால் தான் அகப்பையில் (அகம் + கர்ப்பை) வரும் என்பார்கள்.


அகப்பை என்பது பெண்ணின் “கர்ப்பபை” அப்படியானால் பானை எங்குள்ளது. பானை என்பது பூமி போல் ஓர் பெரிய உலகம் (பிரம்ம லோகம்) அது கண்களுக்கு புலப்படாமல் நமது உடலின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் அளிக்கிறது.
சூரிய ஒளியில் வெறும் ஒளிமட்டும் வருவதில்லை. பூமியில் செடி கொடிகள் பச்சயம் பெற்று வளர்வதற்கான அனைத்து சக்திகளும் வருகிறது. சூரியனுக்கு இச்சக்தியை அளித்தது யார்? சூரியன் ஓர் உலகமாகவே உள்ளது. அதில் தான் நாம் ஒரு பகுதியாக பூமியில் வாழ்கிறோம்.காரணம்காரியம் இன்றி எதுவும் இயங்காதபொழுது, சூரியன், சந்திரன், பூமி இவைகள் மட்டும் எப்படி தானாக இயங்குகிறது.

உண்மையாதெனில் இவை எல்லாவற்றுக்கும் உயிர் இருக்கிறது. உடல் இருக்கிறது. நம் போன்ற பெரிய மனிதர்கள் அல்லது தேவலோக மக்கள் அங்கு வாழ்கிறார்கள், கண்களுக்குப் புலப்பட்டது மட்டும் உண்மை என்றால், கண்களுக்குப் புலப்படாத,“உயிர், மனம்” இவற்றை மனிதனுக்கு இல்லை என்று கூற முடியுமா? அது போல் சூரியன், சந்திரனில் யாரும் இல்லை என்று கூற முடியாது.
கண்களுக்குத்தெரியாத பல உலகங்கள் உள்ளன. ஒவ்வோர் உலகமும் ஒரே கட்டுப்பாட்டில், பிரிந்து இயங்குகிறது. இம்மர்மங்கள் உணரப்படாதவரை, ஓர் உடம்பையும், அதனுள் ஏற்படும் உணர்வுகளையும் அவை வாழும் சூழ்நிலைகளையும் முழுமையாக அறிய முடியாது.
இவற்றை முழுமையாக அறியாமல் மருத்துவம் பார்க்க கிளம்பும் மனிதர்கள் யாவரும் அரைகுறைகளே இதய நிபுணர் இதயத்துக்கும், மூளை நிபுணர் மூளைக்கும் நிபுணராக இருக்கலாம். அவர்களால் ஒரு மனிதனை முழுமையாக ஆரோக்கியமுள்ளவனாக மாற்ற முடியாது.
முழுமை அறிந்த மருத்துவர்களால் தான் ஒரு மனிதனை நன்கு குணப்படுத்த முடியும். அதனால், என்னால் இயன்ற வரை நாம் வாழும் பூமியைச்சுற்றி மறைந்திருக்கம் பல அற்புத உலகங்களையும், அந்த அற்புத உலகங்கள், எப்படி மனிதனுடன் தொடர்புடையது என்பதையும், அதன் கால அளவீடுகளையும் இத்தொடரி்ல் நான் குறிப்பிட இருக்கிறேன். இதற்கு சாட்சியாக பொய் சொல்லாத வேதங்களையும், நவீன மருத்துவ, விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் மேற்கோள் காட்டி இதில் உங்களுக்காக என் பயணத்தை இயன்ற வரை தொடருகின்றேன்… நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை:
ப்ரதி ஸர்கம், “ச்ரு்டி” யுகங்கள் (படைப்பும் கால மாற்றங்களும்) தோறும் சுவடுவிட்டுக் கொண்டு பரவியது.
சூரிய வம்சம், பிரம்ம புத்திரர்களிலிருந்து ஆரம்பித்து ஜீவகுலம் எப்படி தலைமுறை தலைமுறையாக வந்தது என்ற விபரம்
மன்வந்தரம், ஆயிரம் சதுர்யுகங்களில் லோகம் முழுமைக்கும் மனுஷ்ய குல முன்னோர்களாக இருக்கப்பட்ட பதினான்கு மனுக்களின் காலத்தைப் பற்றிய விஷயங்கள்
வம்சாநு சரிதம், தேசத்தைப் பரிபாலித்த ராஜாக்களின் வம்சாவளி,சூர்ய வம்சம், சந்த்ர வம்சம என்பது போன்ற (Dynasty)களின் விவரம்
உயிரின் வழி பரம்பொருள் நடத்தும் பஞ்ச க்ருதங்கள்
1.ஸ்ரு்டி,
2.ஸ்திதி,
3.சம்ஹாரம்,
4.திரோதானம் அல்லது திரோபாவம்
5.அனுக்ரஹம்
மனதின் வழி நடத்தும் நிகழ்வுகள்:
1.படைத்தல்
2.காத்தல்
3.அழித்தல்
4.அருளல்
5.மறைத்தல்
பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் செயல் பாடுகளும்
“பிரபஞ்சம்” தன்முனைப்பில் தொடங்கி, தன் முனைப்பு ஆற்றலாக மாறி தன் முனைப்பு ஆற்றலிலிருந்து” நேர்மறை எதிர்மறை சக்திகள் உருவாகி, இவ்விரு சக்திகளின் ஈர்ப்பு எதிரப்பு தன்மையால் சுழற்சிகள் ஏற்பட்டு, பிரபஞ்சம் தன்னுள் தொடர்ந்து இயங்குகிறது.
ஒன்று இரண்டாகிஒன்று தனித்திருக்க
இரண்டுக்குள் ஒன்று புதியதாகி
மூன்றும் விளையாடி ஒன்று தனித்திருக்க
மூன்றும் முதலிலந்து ஒன்றாகி விட்டனவே….
பிரபஞ்சம் ஐந்து பகுதிகளாக தன்னுள் பிரிந்து இயங்குகிறது
1.ஆதி பிரபஞ்சம்
2.பரப்பிரம்மலோகம்
3.பிரம்மலோகம்
4.சூரிய லோகம்
5.மாய லோகம்

பிரபஞ்சம் என்பது எல்லாவற்றிற்கும் தாயாக விளங்குகிறது. பிரபஞ்சம் ஒளியின் விரிவு பயணத்தாலும், ஒலியின் இயக்கத் தூண்டுதலாலும் தன்னை விரிவாக்கும் காட்சிகளாகவும், பெரிதாக்கிக்கொண்டேயுள்ளது.
ஒளியின் ஒலியின் இயக்கத் தூண்டுதல் சப்தம்(மந்திரம்) மற்றும் சக்தி அலைகளாக எங்கும் ஏகமுமாக பரவியள்ளது. “பிரபஞ்சம்” ஒளி, ஒலி ஆதிக்கங்களால் தனக்குள் எதிர்மறைகளை உருவாக்கி, அதன் மூலம் புதிய தோற்றங்களையும், உற்பத்திகளையும் உருவாக்கி கொண்டுள்ளது.
அஹங்காரத்தில் தான் என்ற படைப்பவை நான் என்ற தனித்தன்மையுடைய உணர்வாகவும், படைப்பு (பிரபஞ்சம்) உணர்வின் வெளிப்பாடாக (உணர்ச்சிகளாக) ஏகமாக விரிந்து கொண்டேயுள்ளது.

நாம் இருக்கும் பூமி, பூலோகத்தின் மையப்பகுதி, ஏனெனில் பூலோகத்தில் 14 லோகங்கள் உள்ளன. இப்பூலோகம், சூரியலோக கட்டுப்பாட்டில் இருந்தாலும், இருப்பது போல் தெரிந்தாலும், இப்பூலோகம் பிரம்ம லோகத்தில் லிங்க வடிவில் தோற்றுவிக்கப்பட்டு ஒளியாற்றல் மூலம் சிற்சில பகுதிகளாக வெளி கொணரப்பட்டு, ஒளியாற்றல் சூரியலோகமாகவும் பூமி அதில் ஒரு பகுதியாகவும் காட்சி தருகிறது.
சூரிய லோகம் தோன்றுவதற்கு முன்னரே பூமி உருவாகி விட்டது. ஒளியாற்றல் மூலம் பரப்பிரம்ம லோக உயிர் சக்திகளும் பிரம்மலோக உற்பத்திகளும் ஒன்று கலந்து, சூரியலோகமாக, மஹா காட்சியாக வெளிப்பட்டு சுழல்கின்றது. பிரபஞ்சத்தின் தோற்றுவாய் “முதல் உலகமாகி”, ஆதி லோகம் என்ற பெயருடன் படைப்பின் தலைவனாகவும் தலைவியாகவும் விளங்குகிறது.
பிரபஞ்சத்தின் ஆற்றல் ஆதியின் (முதல் உலகின் சக்தி மையத்திற்குள்) கரு வளையத்தில் தோன்றி இரண்டாம் உலகமாகி இயக்கத்தின் தன்மையாக, தன்னிலையில் (உயிர்நிலை) தோற்றமும் ஆற்றலுமாக அழைக்கப்படுகிறது. பரவி இருக்கின்றதை பரப்பிரம்மலோகம் என
புதிய உயிர்களின் உற்பத்தி லோகமாக மூன்றாம் உலகமான பிரம்மலோகம் தோன்றியது. தோற்றமும் ஆற்றலும் அதாவது முதல் உலகமும் இரண்டாம் உலகமம் ஒன்றாகும் பொழுது புதியதாக மூன்றாம் உலகம் உருவாகிறது. மூன்றும் ஒன்றிணைந்து மூன்றாம் உலகின் விழிப்பு நிலையில் (பார்வை) தோன்றியதே நான்காம் உலகமான சூரிய லோகம் ஐந்தாம் லோகம் உயிர்கள் வாழும் மாய லோகம் எனவும், இம்மாயலோகமே முதல் மூன்று லோகமும் தங்களுக்குள் மாறி மாறி விளையாடும் களமாக மாறுகிறகது. மூன்று லோகமும் மாய லோகத்தில் விளையாட சூரிய லோகம் உதவி செய்கிறது
ஆதிக்கும் நமக்கும் தொடர்பு உள்ளதா?
ஆதி மற்றும் ஆதிசக்தி இவ்விரண்டும் இல்லாத ஓர் உயிரோ, அணுவோ, துகளோ, பொருளோ இவ்வுலகில் இல்லை. ஏல்லாவற்றுக்கும் இதுவே மூலமும் மாற்றமும், அழிவுமாக உள்ளது. ஆதிசக்தியை நாம் இறைவன் என்றும், பிரபஞ்சசக்தி (universal force)(gravitational force) என்றும் அழைக்கின்றோம்.
“ஆதி” வெண்மையான ஒளி வடிவத்திலும், அதனின் சக்தி கறுப்பு புள்ளியாகவும் உள்ளது.
ஆதியின் அதிர்வுகளால் கறுப்பு புள்ளி(சக்தி)யில் ஏற்பட்ட மாற்றமே, இந்த மஹா பிரபஞ்சம். ஒரு விதை மரமாகி, அம்மரத்தில் பல பழங்கள் தோன்றி அப்பழங்களில் இருந்து பல விதைகள் தோன்றுவது போல, பிரபஞ்சம் ஒன்றிலிருந்து பலவாக ஆதி சக்தியிலிருந்து பிரிந்து விரிந்துகொண்டேயுள்ளது . தாத்தா,பாட்டி முதல் பேரன் வரை எப்படி தொடர்பு உள்ளதோ, அதுபோல் “ஆதி” தன் வெண்மை ஒளிக்கதிர்களால் கடைசி மனிதனான நாம் வரை தொடர்பில் உள்ளது. இதனால்தான் நமது மூளை வெள்ளை, கறுப்பு, சாம்பல் நிறத்தில் உள்ளது.
“ஆதி” உணர்வாகவும், ஊடலாகவும் (தோற்றம், பெருக்கம், காரணமாகவும்) தன் பயணத்தை இயக்கம், தொடர்கிறது. மறைவுக்கு சக்தி தோன்றுதல், இயங்குதல், விரிவடைதல், மறைதல் என தன் பயணத்தை தொடர்கிறது
ஆதி இல்லாத இடமே இல்லை எல்லாவற்றிலும் மையத்தில் உள்ளது.
1. ஆதிப்பிரபஞ்சம்
ஸர்கம் (ஆதியில் நடந்த ச்ருஷ்டி)
ஆதிப்பிரபஞ்சம் நான், அஹம், சுயம், உணர்வு என்ற சூட்சுமங்களால் ஆனது. இச்சூட்சுமத்திலிருந்தே மூன்று அடுக்கு பிரபஞ்சம் உருவானது.

எல்லா தோற்றங்களுக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் ஓர் உணர்வே காரணமாய் இருக்கிறது. “அவ்வுணர்வே ஆதிசக்தியாக” இருந்து கொண்டுள்ளது, இன்று நாம் பார்க்கும் மாய உலகிற்கும் மற்றும் அனைத்து லோகங்களின் இயக்கத்திற்கும் இதுவே அடித்தளமாய் இருந்து கொண்டுள்ளது. உணர்வை கிரகிப்பவன் கிரகத்தவற்றிகுத் தகுந்த செயல்பாடுகளைச் செய்யக்கூடிய வலிமை உள்ளவன் இறைவன் என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்படுகிறான்.
ஏகாந்தத்தில் பயணப்பட்டு உலகின் ஆரம்ப விளிம்பை தேடியவர்களுக்கு எல்லாம், கிடைத்த பதில “மகா ஒளியே”! என் பயணத்தில் நான் பார்த்த கடைசியும் மிக பிரம்மாண்டமுமான காட்சி பூரண ஒளி வீசும் அரைவட்ட சந்திரன் போன்ற அமைப்பே காட்சியளித்தது .
ஆதிப்பிரபஞ்சமானது ஒரு பெரும் வெண்மை பிரளயமாகவும், அதனிலிருந்து, ஒரு கரும் புள்ளியின்(துளை) வாயிலாக ஏகமாகவும், வசந்தமான காற்றுடனும், ஆனந்தமய ஒளியுடனும் காட்சியளிக்கிறது. எங்கும் வெற்றிடமென்பது இல்லை. இருளும் ஒளியுமாக உள்ளது.
அரைவட்ட சந்திர வடிவத்திற்குள் ஒரு நுழைவாயில் கறுப்பாக உள்ளது. இக்கறுப்பை பெரிது சிறிது என்று அளக்க இயலாது. ஆனால் விகிதாச்சாரத்தால் அறியலாம்.

கறுப்பின் அதிர்வே, தோற்றங்களாகி, லோகங்களும், உலகங்களும் உயிர்களும்” இந்த லோகங்களே சதுர் லோகங்களாகி, இன்றும் இயங்கும் கலங்களாகின. இக்கலங்கள் காலங்களின், தோற்றங்களுக்கு ஏற்ப பல யுகங்களாகின. ஒரு தோற்றம் உருவாகி அத்தோற்றம் பல உலகங்களாகி மீண்டும் தோன்றிய இடத்திற்கே சென்று மறைவதை சதுர் யுகம் என்று அழைக்கப்படுகிறது.
அக்கறுப்பு புள்ளியில் இருந்து தோன்றும் தோற்றங்கள் ஒரு பெரும் தொடராகவும், பிரபஞ்சமாகவும், பரவி விரிந்து கொண்டுள்ளது.
பிரபஞ்சம் கறுப்பு மண்டலமாகவும், பஞ்ச பூதங்களாகவும், பால் வீதியாகவும், நட்சத்திர மண்டலமாகவும், உடுமண்டலங்களாகவும், சந்திரனாகவும், சூரியனாகவும், பூமியாகவும் கோள்களாகவும் தன்னில் பல பாகங்களாக பிரிந்து இயங்குகிறது.
இன்று அறிவியலாளர்கள் எல்லா உயிர்களிலும் துகள்களிலும் அடிப்படை அணுத்துகளாக சந்திரத் துகள் (ஹைட்ரஜன்) உள்ளது என கூறுகிறார்கள். அத்துகள் எங்கிருந்து வந்தது? எப்படி எல்லாவற்றிக்குள்ளும் உள்ளது? எங்குப் பார்த்தாலும் அதன் காட்சி வடிவத்தில் உள்ளது. அத்துகள் தானே எல்லாப் பொருள்களுக்குள்ளும் உயிர்களுக்குள்ளும், ஏற்படுத்தவும் உணர்வு மற்றும் உணர்ச்சிகளை சுமக்கவும் செய்கிறது. அத்துகள் எங்கிருந்து வருகிறது என்று நோக்கினோமானால்? இத்துகள் ஆதிபிரபஞ்சத்திலிருந்தே வெளி வருகிறது. ஆனால் ஆதியில் எந்தத் தோற்ற மாற்றமும் ஏற்படுவதில்லை.
ஒவ்வோர் லோகத்திற்கும் இடையே முறையான தொடர்புகள் இருக்கிறது. ஒன்றில் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது, மற்றொன்றில் பிரச்சனை ஏற்படுத்தப்படுகிறது மற்றும் நாம் காணும் மாய உலகில் உள்ள ஒவ்வொரு செல்லிலும், ஒவ்வொரு துகளிலும், இவ்வனைத்து லோகங்களின் நிகழ்வுகள் காட்சிகளாக பதிந்து உள்ளது. உதரணமாக, ஒரு செல்லை எடுத்துக் கொண்டால் அச்செல்லின், கருமையத்திலுள்ள “மரபணு” உலகம் தோன்றிய காலத்திலிருந்து, என்ன நடந்ததோ.. அனைத்தையும் தன்னுள் பதிவாக கொண்டுள்ளது. காரணம் ஆதி இறை சக்தி எல்லாவற்றுக்குள்ளும் ஒரு தொடராக வந்து கொண்டேயுள்ளது.


நமது மூளையில் ஆதியே மையப்பகுதியாகவும், இடது வலது மூளையை இணைக்கும் பகுதியாகவும் உள்ளது.இப்பகுதியை ஆங்கிலத்தில் கார்பஸ் கல்லோசம் (corpus callosum) என்று அழைக்கின்றனர். நாம் ஜீவாத்மாவாக, ஜீவனாக உடம்பில் இருக்கும் பொழுது ஆதி நமது மூளையின் நடுவில் அதுவெ ஜீவ ஆற்றலாக பரம்பொருளாக உள்ளது.
நமது மூளையின் ஆதிக்கத்தில் உள்ள நான்கு வகையான நரம்பு மண்டலத்தில் தானியங்கி நரம்பு மண்டலத்துடன் ஆதி பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
2. பரப்பிரம்மலோகம்:
உயிர்கள் தனித்தும் தனித்துவமுமாக இயங்குவதற்கான அடிப்படை உலகம் ப்ரதி ஸர்கம் (ச்ருஷ்டி யுகங்கள் தோறும் கவடுவிட்டுக் கொண்டு பரவியது)
ஆதி தன்சக்தியை முன் நிறுத்தி தானே ஆத்மாவாக பின் தொடர, ஆதிசக்தியில் ஏற்படும் மாற்றங்களே பரப்பிரம்மலோகம் அல்லது ஆதி லோகத்தில் உள்ள ஒரு கார்பன் அணுவின் அதிர்வலைகளில் ஏற்பட்ட மாற்றமே பரப்பிரம்மலோகம், இவை பல அடுக்குகளாக அல்லது பல லோகங்களாக (ஒன்றுக்குள் ஒன்று மாறுபட்ட வாயுக்கோளங்களாக) உருவாகுகிறது.

பரப்பிரம்மலோகத்தில் தோன்றுபவைகள் யாவும் ஆதியின் நேரடி தோற்றம் அல்லது அழிவில்லாத சிறப்பான தனித்தன்மையுடைய உயிர் அதிர்வுகள். “உயிர்” என்பது பிராணனின் மறுபக்கமாகும். பிராணன் பரப்பிரம்ம லோகத்தின் மொத்த “உரு” ஆகும். பரப்பிரம்ம லோகம் உள்ளில் பிரிந்து, அதில் 12 தோற்றங்கள் உலகை நிர்வாகம் செய்யக்கூடியவர்களாகவும், மாய லோக சந்திரனுக்கு ராசிகளாகவும் மனித மூளையில் 12 நரம்புமண்டலமாகவும், உடம்பில் 12 உறுப்புகளுக்கு அடித்தளமாகவும் உள்ளன. இவர்களில் இருவர் பிரம்மலோக படைப்புக்கு காரிய காரணமாகவும், ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட செயல் வடிவ துருவங்களாகவும் உள்ளன.

ஆதி ஆண்மையும், பெண்மையும் ஓர் உயிரில் இருந்து தோன்றியவர்கள், பரப்பிரம்மலோகம் தேவையும் கட்டுப்பாடும் அற்றது. ஏனெனில் ஆதி தன் அடிபாகத்தில் வைத்திருக்கும் கறுப்பு சக்தியிலிருந்தே உருவாக்குவதாலும் லோகத்தின் அதிபதிக்கு அருகிலும், நேரடிப்பார்வையிலும் பரபிரம்மவாசிகள் இருப்பதால் அவர்கள் தான் அடையவேண்டியவற்றை எளிதாக அடைகின்றனர். ஆதிசக்தியான இறை சக்தியிலிருந்து இவர்களை பிரிக்க முடியாது. ஆதி ஆத்மா மற்றும் ஆன்ம சுயருபமாக பரப்பிரம்மலோகம் முழுவதும் வியாபித்துள்ளது.
இவர்களே திதி என்று சொல்லப்படுகிற தேதிகளையும், மாதங்களையும் உருவாக்குகிறார்கள். பரப்பிரம்மவாசிகள் ஒவ்வொரு நாட்களையும் ஒருவர் ஆட்சி செய்கிறார். ஆகையால் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமாகவும், வெவ்வேறு நிகழ்வுகளாகவும் நடைபெறுகிறது. நாட்களை நிர்வாகம் செய்யககூடியவர்களாகவும், அந்த நாட்களில் என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்களாகவும் உள்ளனர்.
உதாரணமாக அமாவாசை முதல் பௌர்ணமி வரை வளர்பிறை எனவும் பௌணர்மி முதல் அமாவாசை வரை தேய்பிறை எனவும் நாட்களை அமைத்து, இரு பகுதிகளையும் ஒரு அமாவாசை இணைத்து மாதமாக கணக்கிடுகிறார்கள். ஆதிசக்தியையும் மற்றும் பௌர்ணமி என்பது ஆதியையும் குறிப்பிடுகிறது.
அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று ஏற்படும் அதிர்வுகளால் பதினைந்து நாட்களுக்கு ஏற்படும் மாற்றங்களுக்கு தேவையான சக்தி அந்த ஒரே நாளில் கிடைக்கிறது. இதை அடிப்படையாக வைத்தே உடுக்கை அடிக்கும் கோடாங்கி முதல் கோயில் பூசாரி வரை அமாவாசையன்று பல நிகழ்வுகளை பூமியில் நிகழ்த்துகின்றனர்.
பரப்பிரம்மலோகவாசிகளின் ஆட்சியின் அமைப்பை வைத்து நாமும் நம் வாழ்நாளில் வாழ்வின் செயல்களை வரிசைப்படுத்தி செய்கிறோம். முதல்நாளில் சம்பளம் வாங்குகிறோம் அல்லது கொடுக்கிறோம். சம்பளம் வாங்கும் பொழுது ஆதிசக்தியாகவும், கொடுக்கும் பொழுது ஆதி சுயரூபனாகவும் மாறுகிறோம். பொதுவாக மாதம் முடியும் பொழுது சோர்வாகவும், மாதம் தொடங்கும் பொழுது சுறுசுறுப்பாகவும் உள்ளோம்..
பரப்பிரம்மலோகவாசிகளும் நாட்களும்
பரப்பிரம்மலோகவாசிகளில் பன்னிருவர் இருள் உலகத்தை பன்னிரு பாகங்களாக பிரித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதிக்கு அதிபதியாக உள்ளனர். இவர்கள் ஆளும் பகுதிகளை நாம் மாய் லோகமான பூமியில் இராசிகள் என்று அழைக்கிறோம்.
சூரிய சுழற்சியினால் பூமியில் ஏற்படும் தட்பவெப்பநிலை மாற்றங்கள் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறாக உள்ளது. இவற்றிற்கு காரணமானவர்களும் மேற்குறிப்பிட்ட பன்னிருவரே! சூரியன் இவர்களுக்குள் சுழன்று எல்லா சக்திகளையும் பெறுகிறது. இவைகள் அனைத்தும் மனிதனின் வாழ்க்கையை பாதிக்கிறது. பூமியில் பிறக்கும் பொழுது எந்த இராசி வேகமாக வேலை செய்கிறதோ அந்த இராசிக்கு பந்தப்படுகிறான். அந்த இராசி வேலை செய்யும் பொழுது, இவன் கேட்காமலேயே அம்மனிதனுக்கு தேவையானவைகள் அளிக்கப்படுகிறன.
மாயலோகத்திற்கும் பரப்பிரம்மலோகத்திற்கும் எவ்வளவு தூரம் என்பதை தியானம் செய்யும் ஒருவரால் விஞ்ஞானத்தால் அறிய முடியாது. ஆனால் மாயலோகத்திருந்து பரப்பிரம்மலோகத்திற்கு ஒருநொடியில் சென்று விடலாம்.
பரப்பிரம்மலோகதிதில் தோன்றுவிக்கப்பட்ட பதினைந்து நபர்களில் பன்னிரண்டு போக மீதி மூன்று பேர் பிரம்ம லோகத்தில் உணர்வு, உணர்சி, செயல் மற்றும் ஆக்கல், காத்தல், அழித்தல் வேலைகளை செய்கின்றனர். மேலும் இவர்கள் சூரிய மற்றும் பூலோகத்தில் அணுவாக இயங்குகின்றனர்
பரப்பிரம்மலோக வண்ணங்கள் :
அடர், வெள்ளை, கறுப்பு, ஊதா, நீலம், சாம்பல் இவற்றிலிருந்தே மற்ற எல்லா வண்ணங்களும் தோன்றுகின்றன.

உலகில் தோன்றுகின்ற ஒவ்வொன்றும் ஆதியிலிருந்து வெளிவந்து, தன் பயணத்தை முடித்தபிறகு, மீண்டும் ஆதியுடன் இணைகிறது. எதுவொன்று எல்லாவற்றையும் தோற்றுவித்ததோ தோற்றுவித்ததை விழுங்கிக் கொள்ளும் அதுவே! பின்னர் ஆதி ஒற்றை கண்ணில் அதனின் ஒளி வெள்ளத்தில் அணைத்தையும் தோற்றுவித்து, மீண்டும் அதனுள் அணைத்தையும் உள ‘இழுத்துக்கொள்கிறது.
உலகின் (துகள்களின்) கால அளவை நிர்ணயம் செய்ய விஞ்ஞானம் கறுப்பு அணு பதினான்கு” எண்ணிக்கை கணக்கீடு (carbon dating) என்ற ஒரு கண்டுபிடிப்பை கண்டு பிடித்துள்ளது. கறுப்பு அணு பதினான்கு” ஓர் உடலில் (CARBON 14 HALF LIFE 5730 YEARS) 5730 வருடங்கள் ஆகிறது. இதை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு பாதியாக கணக்கிட்டு ஒரு பொருளின் கால அளவை நிர்ணயம் செய்கிறாரகள்.
ஒரு பொருள் உருவாகும் பொழுதும் அழியும் பொழுதும் கறுப்பு எனும் சக்தியிலேயே நடைபெறுகிறது.
pictures of Basal Ganglia


Pictures of Basal Ganglia
மூளையில் பரப்பிரம்ம லோகம் அடித்தள நாளமில்லா தொகுதியாக (Basal ganglion) உள்ளது.
பிரபஞ்சமும் பிரம்மலோகமும்
ஆதியும் அதனின் சக்தியின் விரிவாக்கமான பரபிரம்மலோகம், இவைகளிரண்டும எல்லாவற்றுகுள்ளும், இப்பிரபஞ்சத்திற்குள்ளும் மையமாக விளங்குகிறது. பிரபஞ்சம் என்பது எல்லாவற்றிற்கும் தாயாக விளங்குகிறது. பிரபஞ்சம் என்றால் என்ன? பிரபஞ்சம் என்பது பல வண்ணங்களாலும் கதிர்களாலும் பஞ்சபூதங்களாலும் அணுத்துகள்களாலும், மற்றும் ஜீவத்துகள்களாலும் சூழப்பட்டுள்ளது.
பிரம்மலோகத்தின் சூட்சும தோற்றங்கள்
பிரபஞ்சத்தின் மூன்றாம் அடுக்கில் அதாவது பிரம்ம லோகத்தில்” “நான்” என்ற சுயதன்மையுடைய ஆதி, “ஆத்மா” என்ற சந்திர ரூபத்திலும், அதனின் சக்தி “ஆன்மா” என்ற அக்னி சந்திரனாவும் பின்னர் பஞ்சபூதகாரணிகளாகவும் உருவாகிறது.
பிரம்மலோகத்தில் ஸ்தூல சூட்சும இனங்கள் படைக்கப்படுகிறது. கருவுறுதல், கருவின் வளர்சிதை மாற்றங்கள் அனைத்தும் பிரம்மலோகத்தில் நடைபெறுகிறது. பிரம்ம லோகத்தின் பாதி உலகம், பெண்மைத்தன்மையால் மூடப்பட்டுள்ளது பிரம்ம லோகத்தில் உருவாகும் உற்பத்திகள்யாவும் மாய லோகத்திற்க்காக தயாரிக்கப்புடுபவைகள். அவைகள் தன்னிலை மாறா சீவகர்களும் (அசுரர்கள், தேவர்கள் மற்றும் பலர்) மற்றும் பூமி படைக்கப்பட்டபின். ராகு கேது முதல் கோள்கள் வரை மற்றும் மேகக்கூட்டங்களும் பஞ்சபூதகாரணிகளும் இங்குதான் படைக்கப்படுகின்றன.
பிரம்மலோகத்தில் தோன்றுகிற முதல் கட்ட உயிர்களில் பெண்பால் தெய்வங்களாகவும், ஆண்பால் கடவுளர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். உதாரணமாக சிவன், சக்தி, பார்வதி, கிருஷ்ணன், ருத்ரன், கங்கை பிரம்மா, சரஸ்வதி.
இரண்டாம் கட்ட உயிர்களாக தேவர்கள், குருமார்கள், அசூரர்கள், மாயாவிகள், போன்றவை படைக்கப்படுகின்றன. இவ்வாறு பிரம்ம லோகத்தில் 8 அடுக்குகள் உருவாகிறது.
புல் பூண்டு முதல் மனிதன் போன்ற ரூபம் வரை எல்லாம், இரண்டு அல்லது இரண்டும் இணைந்து ஒன்றாக, இணைதலில் ஏற்படும் மாற்றங்களால் உயிருடலிகளும் உருவாகிறது. பலவகை
பூமியானது தென் பிரம்மலோகத்தில் மையபகுதியாக உள்ளது. பூலோகமும் பூமியும் வெவ்வேறானது. பூமி பிரம்மலோகத்திலும், பூலோகம் சூரிய லோகத்திலும் உள்ளது.
பிரம்மலோக பூமியையும், பூலோகத்தையும் இணைக்கும் பகுதியாக சுழிமுனை உள்ளது சுழிமுனை என்பது பிரம்மாவின் நெற்றியாகும். பிரம்மா என்பது படைத்தலுக்கு உரிய பெயர் ஆகும்.
பிரம்மலோகம்:
எதிர்மறை தத்துவங்கள் (ஆண்மை. பெண்மை)

சுழி முனைக்கு மேல் ஆண்மை பெண்மை தத்துவங்களாகவும், சுழிமுனையில் ஆத்ம தத்துவமாகவும், சுழி முனைக்கு கீழ் சீவன், சக்தி தத்துவங்களாகவும் பிரம்மலோகத்தில் உள்ள பூமி, தன் காந்த சக்தியால், பிரம்மலோகத்திலுள்ள ஆறு (6) அடுக்குகளை ஈர்த்து ஒரு முட்டை வடிவில் உருவாகி பின்னர் அதுவே ஓர் ஒழுங்கு முறையில் வெடித்து சிதறுகிறது. இதையே பெருவெடிப்பு (big pank) நிகழ்வாக கருதப்படுகிறது. அண்டம் என்று அழைக்கப்படுகிறது.


பெருவெடிப்பு (big pank) நிகழ்விற்கு பிறகு உருவாகிற இந்த மண்டலத்தை உடுமண்டலம் என்றும், அதில் சில பகுதிகளை சூரிய மண்டலம் என்றும் அழைக்கிறோம். கர்பப்பையில் உருவான குழந்தையை தாயானவள் வெளித்தள்ளுவது போல் பிரம்ம லோகத்தில் உருவான பல கோள்களையும், சந்திர துகள்களையும், பிரம்மலோகத்திலிருந்து வெளியே ஓர் ஒளி வட்ட வரைக்குள் செலுத்தப்பட்டு சுழற்றப்படுகிறது.

பிரம்ம லோகம் ஒவ்வோர் பெண்ணிலும் கரு முட்டையாகவும் பிரம்மலோகத்தில் தென்முனையில் உள்ள பூமியானது, (Earth or centromere ) ஒவ்வோர் பெண்ணிலும் கர்ப்பபையாக உள்ளது.

பிரம்ம லோகம்
ஒவ்வோர் ஆணிலும விந்தகப்பையாவும், ஒவ்வோர் அண்டமும் (கருமுட்டை) சூரிய லோகங்களை உள்ளடக்கியுள்ளது. உடல் உறுப்புகள் உற்பத்திகள் மாய லோகமாக உள்ளது. கர்பபையிற்குள் நுழையும் பிராணன் பரபிரம்ம லோகமாக உள்ளது சந்திரன் பரபிரம்ம லோகத்துடன் இணைந்து இருக்கும் இடம் ராசி மண்டலங்களாகவும்.புதியதாக ஓர் உயிர் தோன்றும் பொழுது அன்றய நேரத்தில் சந்திரன் இருக்கும் இடம் தோன்றிய உயிர்க்கு அதுவே இராசியாகவும் அழைக்கப்படுகிறது. பிரம்மலோகத்தில் தோன்றிய ராகு, கேது மற்றும் சில கோள்களும் சூரிய லோகத்தில் தோன்றிய சில கோள்களும் ஒன்றிணைந்து பால்விதி, நட்சத்திரங்கள், ராசிகள் அவற்றின் வீடுகள் என பல வகைகளாக உள்ளது. நிறைகுறை, நிறம், தன்மை, ரிதம், அமைப்பு போன்றவற்றை பொறுத்து கோள்கள் சுழல ஆரம்பிக்கின்றன.
பிரம்மலோக வண்ணங்கள்:

வெண்மை, சிகப்பு, அரக்கு, இளஞ்சிகப்பு. மற்ற வண்ணங்கள் இவற்றுக்குள் மறைக்கப்பட்டுள்ளன.வெற்றிடம் ஊதா இவைகள் இரண்டிலும் உள்ள இடைவெளியில் வெண்மை நிறத்தில் ஆதிமஹா பிரகாசமாக பிரபஞ்சத்தின் வெளிப்பாடுகள் வெளிப்படுகிறது.
சூரிய லோகம்:
உயிர் ஆற்றல் தத்துவம்
பிரபஞ்சத்தின் மூன்றாம் அடுக்கில் நான் என்ற சுயதன்மையுடைய ஆத்மா, சந்திரனாகவும், அதனின் ஆன்மா, பஞ்சபூதகாரணிகளாகவும் ( ஒளி, ஒலி,ரூபம், ஸ்பரிஸ்ம், உணர்வு ) படைக்கப்படடன. இவைகள் எல்லாம் சூரிய லோகத்தில் ஒளிக்கதிர்களாகவம், ஒலி அலைகளாகவும் நிறைந்து நிற்கின்றன.

சூரிய லோகம் தன் பார்வையில் மேற்கூறப்பட்ட அனைத்து லோகங்களையும் காட்சிப்பொருளாக கொண்டு இயங்குகிறது. சூரிய லோகத்தை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கும் பொழுது, தெற்கிலிருந்து வடக்காக குழாய் போன்று அகன்று செல்கிறது.

பிரம்ம லோகத்தில் சூரிய ஒளி பட்டவுடன், அனைத்தும் இயங்க சுழல ஆரம்பிக்கிறது (tyndal effect). இயங்குகின்ற சூரிய லோகமே மாய லோகமாகும் நாம் வாழ்வது, மாய லோகம்., சூரிய லோகத்தையும் மாய லோகத்தையும் தனித்தனியாக பிரிக்க முடியாது.

சூரிய லோகத்திலிருந்து எல்லாம் அணுவின் விதியை அடிப்படையாக வைத்து இயங்குகிறது. நான்கு லோகங்களும் அடிப்படை அணு இயக்க துகளாகி, ஆதி பிரபஞ்சத்தால் இயக்கப்படுகிறது. அணு என்பது ஆகாயத்தில் தோன்றும் இயக்க ஆற்றலின் காட்சி.
அணுவின் அமைப்பில், ஆதிலோகத்திலிருந்து சூரியலோகம் வரை உள்ள எல்லாம் உள்ளிருந்து அல்லது மறைந்திருந்து அதன் தன்மைகளை மாயலோகத்தில் வெளியிடப்படுகின்றன.
இந்த ஓர் அணு ஆதிப்பிரபஞ்சத்திலிருந்து உருவாகி எல்லா உலகங்களுடன் தொடர்புடையது. இவ்வணுவின் இயக்கம், ஒவ்வொரு மூலப் பொருளுடன், உயிர்களுடன் ஒவ்வொரு செல்லுக்குளளும் மறைந்து உயிராகவோ மின்சாரமாகவோ இயங்குகிறது.
அணுவில் அணுவினை ஆதிப்பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங்கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலு மாமே
மாய லோகம் :
மாய லோகம் (பூலோகம்),: ( வாழ்வின் நிகழ்வுகள் மற்றும் மனித உடல்
தத்துவம் (ஆண்,பெண்)

ஜீவன், சக்தி தத்துவங்கள் (அன்றாட வாழ்க்கை தத்துவம்) நாம் இருக்கும் பூமி, பூலோகத்தின் மையப்பகுதி, ஏனெனில் பூலோகத்தில் 14 லோகங்கள் உள்ளன. இப்பூலோகம் சூரியலோக கட்டுப்பாட்டில் இருந்தாலும், இருப்பது போல் தொரிந்தாலும் இப்பூலோகம் பிரம்ம லோகத்தில் தோற்றுவிக்கப்பட்டு, சூரிய ஒளியின் மூலம் வெளித்தோன்றி பரப்பிரம்ம லோக உயிர் சக்திகளும் ஒன்று கலந்து சூரியலோக கட்டுப்பாட்டில் சுழல்கிறது.

தன் பார்வையின் மூலம் பிரம்மாவின் (பிரமத்தின்) கண் “சூரியலோகத்தை தோன்ற செய்து” அதில் பூலோகத்தை தன் பார்வையின் சுழற்சியால் சுழல வைத்து தானும் அதனுடன் பயணிக்கிறது. இப்பயணம் இப்பூமியில இன்றுடன் பன்னிரண்டாயிரத்து இருநூற்றி ஐம்பத்தாறு கோடியே எழுபத்தி நான்கு லட்சத்து ஆராயிரத்து தொள்ளாயிரத்து பதினொரு ஆண்டுகள் 625 கோடியே 49 லட்சத்து 13 ஆயிரத்து 115 வருஷங்கள் எட்டு மாதங்கள் 30 நாட்கள் ஆகும்.

சூரியலோக காட்சிகள் கற்பனையாக வரலாம். மற்றும் பிரம்மலோக காட்சிகள் உணர்வுகளாக, செயல்களாக வெளிப்பட்டு கொண்டுள்ளது. பொதுவாக விஞ்ஞானம் சொல்கிறது மிருகங்களுக்கு நிற வித்தியாசம் தெரியாது என்று!.. எவைகளுக்கு நிற வித்தியாசம் தெரியவில்லையோ அவைகள் பிரம்மலோகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவைகள், அவைகளுக்கு மனித ஜால வித்தைகள் தெரியாது. உடம்பு பிரம்மலோகத்தின் கட்டுப்பாட்டில் உருவாக்கப்பட்டு பிரம்மலோகத்தின் கட்டுப்பாட்டிலேயே வாழ்கின்றது எ.கா. உஷ்ணப் பிரதேசத்தில் ஆப்பிலும் ரோஜாப்பூவும் கிடைக்கலாம் ஆனால் வளர்வது குளிர் பிரதேசத்தில். அதுபோல உடம்பு பிரம்மலேகத்தின் கட்டுபாட்டில் உருவாக்கப்பட்டிருந்தாலும், வாழ்வின் பாதையும் பயணமும் மாயலோகம் மற்றும் சூரியலோகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாயலோகத்திற்கு உரிமை கொண்டாடுபவைகளாக உள்ளன.

மனித உடம்பில் நாம் ஏற்கனவே சொன்னது போல் அண்டமும் பிண்டமும் ஒன்று என்று அதனடிப்படையில் பார்க்கும் பொழுது ஒரு பெண்ணின் கருப்பையில், கரு தோன்றி வளர்வதைப் போல், பிரம்மலோகத்தில் நடைபெறும் உற்பத்திகள் யாவும் பெண்ணின் கருவில் வளரும் கருவை ஒத்துள்ளதாக இருக்கும். நாம் சொல்லும் பிரம்மலோகமும் ஒன்றோடொன்று சேர்ந்தும் பிரிந்தும் உள்ளது. பிரம்மலோகம் பார்வையிலிருந்து மறைந்து இருந்தாலும் மனித உடம்புகளில் அடி வயிற்றில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் பிரம்மலோகத்தின் மாதிரி வடிவகாட்சிகளே! பூலோகமும்
ஒரு மனிதனுக்குக் குழந்தைகள் பிறப்பதும், பிறக்காமல் இருப்பதும் பிரம்மலோகத்தின் செயல்பாடுகளை பொருத்தே உள்ளது. மூளையின் இயக்கம் பரபிரம்மலோகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. நரம்புமண்டலங்கள் நான்கு விதமானது. நான்கும் செயல்படும் முறைகளும் வெவ்வேறானது. ஏனெனில் நான்கு நரம்புமண்டலங்களும் நான்கு லோகத்தை அடிப்படையாக வைத்து இயங்குகிறது.
உடம்பும் லோகங்களின் தொடர்பு மையங்களும்
ஒரு மனிதனின் தோற்றமும் பிரபஞ்சத்தின் தோற்றமும் ஒன்றாக உள்ளது. பிரபஞ்சம் மனிதனுள், உடல் அங்கங்களாகவும் உள்ளது. மூளையில் நட்சத்திர கூட்டங்களாகவும் உள்ளது. இந்த நட்சத்திர கூட்டங்கள் நியூக்கிளியஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. உடலானது பிரம்ம லோகத்தின் கட்டமைப்பை பொறுத்து அமைகிறது.மற்றும் தொப்புள் பகுதியை சுற்றி சூரிய மண்டலம் போன்றதொரு அமைப்பை (solar plexus) நரம்பு மண்டலமாக கொண்டுள்ளது. பால் வீதி (Loose areolar tissue).


பரப்பிரம்ம லோகத்தில் தோன்றிய மஹா சக்திகளான, ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்கள் பொருந்தியவர்களுமான பன்னிருவர்” மனித மூளையில் 12 மைய நரம்பு மண்டலமாக (central nervous system ) இருந்து, உயிராக உயிருடன் இணைந்து மூளையையும், உடலின் பல பாகங்களையும் செயல்படுத்துகின்றனர். மீதமுள்ள இருவர் ஒருவட்ட வளையத்திற்குள் ஒன்றிணைந்து, ஒன்று கலந்து பிரம்ம லோகத்தில், உயிரின் உதவியுடன் புதிய உலகையும் உயிர்களையும் படைக்கின்றனர்
“உயிரே” பின்னர் அஹங்காரத்துடன் இணைந்து வாதம், பித்தம், கபம் என்ற குற்றங்களாகி, “இவ்வுடல்” இவ்வுலகில் உடல் இயங்குவதற்கு அடிப்படை இயக்க தத்துவமாகிறது
ஆதியை தவிர்த்து லோகங்கள் யுகங்கள் லோகங்களின் கட்டமைப்பு எல்லாம் நான்காக உள்ளது. ஒரு மனிதன் இறந்த பிறகு அவனை தூக்கி செல்ல நான்கு பேர் தேவைப்படுகிறது. இன்றும் சொல்லப்போனால் பிரம்மனுக்கு நான்கு முகங்கள் உண்டு என்கின்றன. பூமியும் நாற்புற திசைகளால் ஆனதுதானே எல்லாம் நான்காக இருந்து நம் உடல் அமைப்பையும் நான்கு பாகங்களாக்கி இயக்குகின்றன.
இவற்றைப்போல உடம்பையும் நிர்வாகம் செய்ய நான்கு அமைப்புகள் உள்ளன;

1. உடலையும், உயிரையும் நிர்வாகம் செய்யும் பாகத்தை மூளை என்றும் அதனுடன் தொடர்புடைய லோகத்தை பரப்பிரம்மலோகம் என்றும்
2. உடலின் உணர்வுகளை நரம்புகள் மூலம் நிர்வாகம் செய்யும் பாகமும் அதனுடன் தொடர்புடைய லோகத்தை பிரம்மலோகம் என்றும்

3. உடலில் ஊட்டச்சத்தினை” குருதியோட்ட குழாய்களின் மூலம் நிர்வாகம் செய்யும் பாகத்தை செரிமான மண்டலம் என்றும் அதனுடன் தொடர்புடைய லோகத்தை சூரியமண்டலம் என்றும்

4. உடலின் உள்ளுறுப்புகளை நிர்வாகம் செய்யும் பகுதியை “தானியங்கு நரம்புமண்டலம்”என்றும் அதனுடன் தொடர்புடைய லோகத்தை மாய லோகம் என்றும் — (Nuclius. brain. ectoderm. C.N.S)

பிரம்ம லோகம்— உடம்பின் கட்டமைப்பு -body structures. peripheral nervous system) mesoderm. muscles and born
சூரிய லோகம்… ஒளியின் வேகத்தால் ஏற்படும் மாற்றங்களும சுழற்சியும”,….solar plexus & eye
சூரிய லோகத்தில் “பிராணன” ஆகாயமாகவும், பிராணனில் இருந்து தோன்றுகிற “உயிர்”. பூலோகசக்திகளுடன் இணைந்து அணுக்களாகவும், உணர்வுடன் இணைந்து அணு இயக்கமாகவும் செயல்படுகிறது.
மாய லோகம்…உறுப்புகள், உணர்வுகள், உணர்ச்சிகள் ..A.n.s, endoderm. ganglions உணர்ச்சிகளை சமபடுத்தி கர்ம ஞான எந்திரங்களை இயக்குகிறது
A.N.S (autonomic nervous system)
முளையில் இயங்கும் 12 மைய நரம்பு மண்டலங்களும் (C.N.S) பரப்பிரம்மலோகத்தைச் சார்ந்தது உடம்பில் இயங்கும் உணர்வுகளை மேற்கொண்டு செல்லவும் உணர்ச்சிகளை கீழ்க் கொண்டு வரவும் செயல்படும் நரம்புமண்டலம் (PeripheralNervousSysterm) பிரம்மலோகத்தைச் சார்ந்தது.PNS உணர்ச்சிகளை கீழ் நோக்கி கொண்டு வருகிறது உணர்வுகளை மேல் நோக்கி கொண்டு செல்கிறது.

solar plexus (ENTERIC NERVOUS SYSTEM)
உணவுகளை உட்கொள்ளவும் அவைகளை செரிக்க வைக்கவும் பயன்படும் நரம்புமண்டலம் சூரிய நரம்பு மண்டலம் (Solar plexus) என்று அழைக்கப்படுகிறது. இந்த நரம்புமண்டலம் சூரியலோகத்தைச் சேர்ந்தது.
நமது உடம்பில் நாம் உயிர் வாழ்வதற்கும், இயங்குவதற்கும் துணைபுரியும் உறுப்புகளையும், நமது வாழ்க்கை மன ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப நமது உடல் உறுப்புகளைச் செயல்படுத்தும் நரம்புமண்டலத்திற்குத் “தானியங்கு நரம்புமண்டலம(ANS) என்று பெயர். இந்த நரம்புமண்டலம் மாயலோகத்துடனும், கலியுகத்துடனும் தொடர்புடையது.
பிரம்மலோகமும் பரப்பிரம்மலோகமும் ஒன்றுக்குள்ஒன்று தொடர்புடையது. இதனால் உணர்ச்சிகளைச் சுமக்கும் நரம்புமண்டலமும், மூளையில் உள்ள நட்சத்திர மண்டலங்களும் இயங்கும் போது ஒன்றுக்குள்ஒன்று தொடர்புடையதாக உள்ளது. “தானியங்கு நரம்புமண்டலமும்”(ANS) சூரிய நரம்பு மண்டலமும் ஒன்றுக்குள் ஒன்று தொடர்புடையது
சூரியலோகமும் மாயலோகமும் ஒன்றுக்குள் ஒன்று தொடர்புடையது. இதனால் வாழ்க்கை முறையும் உணவு முறையும் ஒன்று சேர்ந்து உடம்பைப் பாதிக்கிறது. ஒவ்வோர் உயிரும் உடலின் உணர்ச்சிகளும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறுபடுகிறது உருவாகிறது: வளர்கிறது. (உ-ம்) கொசுக்கள் கூட ஒரு சிலகாலத்தில் அதிக உற்பத்தியும் ஒரு சில காலத்தில் குறைவான உற்பத்தியாகவும், ஒரு சில காலகட்டத்தில் இல்லாமலும் போய்விடுகின்றன.
நாம் காரணமின்றி ஆசைப்படுவதும், உற்சாகமடைவதும், துக்கமடைவதும் நமது உடம்பில் மற்றும் நம்மைச்சுற்றி நடக்கும் விசயங்களையும், பிரச்சனைகளையும் பொறுத்து உள்ளன. சில நிகழ்வுகள் காரணமின்றி நடக்கின்றன.
காரியமாகவும் இருக்கின்றன. இதற்குகாரணம் நாம் அல்ல. நாம் நமது உணர்வுகளை மறக்கும் பொழுது, நாம் நம்மைச் சுற்றிச்சூழலும் கிரகங்களாலும் நட்சத்திரங்களாலும் பாதிக்கப்படுகிறோம் மற்றும் விடை தெரியா பிரச்சனைகள் மற்ற லோகங்களாலும் ஏற்படுகிறது. (உம்) பிரம்மலோகம் பிரம்மலோகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நம்மை உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கின்றன. இவ்வாறு நடக்கும் பிரச்சனைகளும் நிகழ்வுகளும் நம்முடன் ஒத்துப்போகாமல் ஒவ்வாமை ஆகவும் மாறலாம் ஒவ்வாமையால் ஏற்படும் பிரச்சனைகள் உடலில் வியாதியைத் தோன்றுவிக்கின்றன. இதனால் நாம். நம் உணர்வு நிலைகளையும், உடல் அமைப்பையும் பிரபஞ்சநிகழ்வுகளையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
இன்னும் பூகோளத்தில் அமைந்துள்ள கோளங்களையும். லோகங்களைப் பற்றியும் ஓரளவு சொல்ல விரும்புகிறேன். இதற்கு புராணங்களும், இன்றைய அறிவியலும் தேவைப்படுகிறது. இங்கே புராணம் என்பது வரலாறு (History) மட்டுமின்றி, புவியியலாகவும் (Geography) அக்கால அறிவியலாகவும் உள்ளது.
ஜீவனும் (சீவன். Gene ) லோகங்களும்
மாய லோகத்தில் வாழும் சீவனுக்கு முதல் மூன்று லோகத்தின் தன்மைகளும் குணங்களும் சூட்சம வடிவத்தில் மறைந்து உள்ளன. அவை தமோ ரஜோ சாத்வீகம் எனப்படும். இம் மூன்று குணங்களும் சக்தி நிலைகளுடன் இணையும் பொழுது, ஆக்கல் காத்தல் அழித்தல் அல்லது மாறுதல் என்ற நிகழ்வுகளாக நடைபெறுகின்றன. ஆகையால் சக்தி நிலைகள் ஒவ்வொரு பஞ்ச பூதங்களுக்குள்ளும் மேற்கூறப்பட்ட அனைத்து குணங்களும் நிகழ்வுகளும் நடைபெறுவது உண்டு.
இதில் ஆண்மையும் பெண்மையும் ஒன்றுகலந்து பின்னர் ஆண்மையும் பெண்மையும் ஒன்றுகலந்த ஆண் (சிவன்) என்ற உடலாகவும் பெண் (பார்வதி)என்ற உடலாகவும் தனித்தனியாக பிரிக்கிறார்கள். இது ஓர் தொடராக வருகிறது. ஆணும் பெண்ணும் இணைந்து புதிய ஆண் பெண் குழந்தைகளை உருவாக்குகின்றனர்.
மாய லோகத்தில் வாழும் சீவனுக்கு முதல் மூன்று லோகத்தின் தன்மைகளும் குணங்களும் சூட்சும வடிவத்தில் மறைந்து உள்ளன.
ஆண்மையும் பெண்மையும் பிரம்ம லோகத்தில் மூலப் பொருள்களாக உள்ளன.
ஆண்மையும் பெண்மையும் மாய லோகத்தில் ஆணும் பெண்ணுமாக உள்ளனர்.
ஆணோ அல்லது பெண்ணோ! ஆண்மையும் பெண்மையும் கலந்துருவானவர்கள்

1.பூலோகத்தில் ஆண்மையின் வித்து – சீவன் (D.N.A)


2.பூலோகத்தில் பெண்மையின் வித்து – சக்தி (R.N.A)


“சீவன்” (மரபணு) ஆண்மையும் தூய நீரும் (பெண்தன்மை) ஆகாயத்துடன் சேர்ந்து 2. (D.N.A replication)

“சக்தி”(M.R.N.A) “சீவன்” பஞ்ச பூதகாரணிகளும் சேர்ந்து உருவானவர்கள்.
சீவனும் சக்தியும், ஆண்மையும், பெண்மையும் இணைந்து புதிய உடலை தோற்றுவிக்கின்றனர்.
இப்புதிய உடல், ஆண்மை பெண்மையின் உள் அளவீடுகளையும், அவர்களின் விகிதாச்சாரத்தையும் பொறுத்து ஆண் உடல் அல்லது பெண்உடல் என அமைகிறது..
“சூரிய லோகத்திற்கும், மாயலோக உடம்பிற்கும் இடையில் உள்ள தொடர்புகள்

1. புதன்(MERCURY)
புதன்கிரகத்தின் ஜீவகாந்த சக்தியை சேமிப்பதனால் ஏற்படும் நன்மைகள்:

1.நரம்பு மண்டலம் பலப்படும்.
2.வாயு தொந்தரவு நீங்கும்.
3.வாயு சம்மந்தப்பட்ட நோய் ஏற்படாது.
4.நுரையீரல் பலமடையும், நுரையீரல் சார்ந்த நோய்கள் குணமாகும்.
கூர்ந்த நுண்ணறிவு ஏற்படும்.
2. சனி கிரகம்(SATURN)

சனி கிரக சக்தியை உடலில் சேமிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
1.எலும்பு,பல், கல்லீரல், மண்ணீரல், உடலின் குளிர்ச்சித்தன்மை இவைகள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் சனி கிரக ஆகர்ஷணம் சக்தியில் ஏற்படும் குறைபாடே சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட காரணமாகும். மேற்படி சனி கிரக ஜீவகாந்த சக்தியை உடலுக்கு அதிகம் கிடைக்கும்படி செய்தாலே சம்பந்தப்பட்ட நோய்கள் தானே சரியாகும்.
2.சனி கிரக ஜீவகாந்த சக்தியை உடலுக்கு கொண்டு செல்வற்கு நாடிசுத்தி பிரயாணமும் சின்முத்ராவை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
3. சுக்ரன் கிரகம்(VENOUS)
விந்து நாளம், சிறுநீரகம் தொண்டை இவைகள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் சுக்கிரன் கிரக ஆகர்ஷணம் சக்தியில் ஏற்படும் குறைபாடே சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட காரணமாகும். பல தவறான பழக்கத்தினால் நோய் ஏற்பட்டிருந்தாலும் அப்பழக்கங்களை கைவிட்டு மேற்படி கிரக சக்தியை உடலில் அதிகப்படத்தினாலே மேற்படி நோயின் தீவிரம் குறைந்து குணம் உண்டாகும்![]()
சுக்கிரன் கிரக சக்தியை உடலில் சேமிப்பதால் ஏற்படும் நன்மைகள்
1..விந்து கெட்டிப்படும். நீர்த்துப் போகாது.
2.பெண்ணிற்கு கர்ப்பப்பை கோளாறு நீங்கும்.
3.சிறுநீரகம் நன்கு செயல்படும்.
4..தைராய்டு பாதிப்பு ஏற்படாது.
5..அழகுணர்ச்சி ஏற்படும்.
6.இல்லற இன்பத்திற்கு உடல் தகுதி பெறும்.
7.மலட்டு தன்மை நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்
8.இந்திரியம் சார்ந்த எந்த நோயும் அணுகாது.
4. குரு (JUPITER)
மூளை, தோல், காது, விந்துவிலுள்ள உயிர் அணுக்கள் (விந்து அல்ல) சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும், குரு கிரக ஆகர்ஷ்ணசக்தியில் ஏற்படும் குறைபாடே மேற்படி குரு கிரக ஜீவகாந்த சக்தியை உடலுக்கு அதிகம் கிடைக்கும்படி செய்தாலே சம்பந்தப்பட்ட நோய்கள் தானே சரியாகும். பல தவறான பழக்கத்தினால் நோய் ஏற்பட்டிருந்தாலும் அப்பழக்கங்களை கைவிட்டு மேற்படி கிரக சக்தியை உடலில் அதிகப்படுத்தினாலே மேற்படி நோயின் தீவிரம் குறைந்து குணம் உண்டாகும்.

குருவின் ஜீவகாந்த அலையினால் ஏற்படும் நன்மைகள்
1.தோல் சம்பந்தப்பட்ட சரும வியாதிகள் நீங்கும்.
2.காது கேட்கும் திறன் அதிகரிக்கும்
3.ஆண்மை அதிகரிக்கும்.
4.கருணையுள்ள குணம் மலரும்.
5. உடலில் ரத்தமும், ரத்த நாளமும், உஷ்ணம், அவைகள் சார்ந்த அனைத்தும் சமநிலைபடுத்தப்படும்.
5. செவ்வாய்(Mars)
செவ்வாய் கிரக ஆகர்ஷ்ண சக்தியை அதிகப்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்:

1.உடல் உஷ்ணம் தேவைக்கு மேல் ஏற்படாமல் காக்கும்.
2.ரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து பிணியும் நீங்கும்.
3.வீர உணர்ச்சி ஏற்படும்
4.ரத்த நாளம் அனைத்தும் செம்மையாக செயல்படும்.
5.உடல் செந்நிறமாக ஜொலிக்கும்.
6) சந்திரன்(MOON)
மனமும் உடலில் நீரச்சக்தியும் கணையம் பிட்யூட்டரி ஆகிய உறுப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் சந்திரன் கிரக ஆகர்ஷ்ண சக்தியில் ஏற்படும் குறைபாடே காரணமாகும். மேற்படி சந்திரன் கிரக ஜீவகாந்த சக்தியை உடலுக்கு அதிகம் கிடைக்கும்படி செய்தாலே சந்திரன் சம்பந்தப்பட்ட நோய்கள் தானே சரியாகும். பல தவறான பழக்கத்தினால் நோய் ஏற்பட்டிருந்தாலும் அப்பழக்கங்களை கைவிட்டு மேற்படி கிரக சக்தியை உடலில் அதிகப்படுத்தினாலே மேற்படிநோயின் தீவிரம் குறைந்து குணம் உண்டாகும்.

சந்திரன் ஜீவகாந்த சக்தியை அதிகப்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்:
1.உடலில் நீரச்சக்தி பலமடையும்
2.மனித உடலின் கணையம் பிட்யூட்டரி உறுப்புகள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.
3.மனம் சாந்தமடையும். தன்னம்பிக்கை மலரும்.
4.கற்பனை வளம் பெருகும்.
5.உடலில் கபம் சேராது.
6.பய உணர்வு மறையும்.
ராகு மற்றும் கேது சக்தியை உடலில் சேமிப்பதால் ஏற்படும் நன்மைகள்;
1. உடலில் ரத்தத்தில் விஷ சேர்க்கை ஏற்படாது.
2. உடலில் நச்சுத் தன்மை மலத்திலும், வியர்வையிலும் வெளியேறும் உடல் தூய்மை பெறும்.
லோகங்களின் வாழ்நாள் கணக்குகள் யுகங்களாக கணக்கிடப்படுகிறது.
யுகம்:

1.கிருதாயுகம் -கடவுளர்கள் – தவம் செய்தல்
2.திரேதாயுகம்-பிரபஞ்சம்-இராமாயணம்-தியானம் செய்தல்
3.துவாபரயுகம்-தன்மைகள்-மஹாபாரதம்-யாகங்கள் செய்தல்
4.கலியுகம்-குணங்கள்-எல்லாகதைகளும்-தானங்கள்
1.கிருதாயுகம்
முதல் யுகமான இந்த கிருதாயுகம் ஐப்பசி மாத அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய வளர்பிறை நவமி திதியில் தொடங்கியது. இந்த யுகத்தில்தான் அரிச்சந்திரன், நளச்சக்கரவர்த்தி ஆகியோர் வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.இந்த முதல் யுகத்தில் வாழ்வோருக்கு வயது ஒரு லட்சம் வருஷமாம். இந்த யுகத்தில் பிறந்தவர்க்கு இடையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் மரணம் வராது. நோய் நொடியென்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. கிருதா யுகத்தில் இருப்பவர்களுக்கு வைத்திய சாஸ்திரம் பற்றி எதுவுமே தெரியாது. வைத்தியர்களே இல்லாத நிலைதான் கிருதாயுகத்தில் உண்டு.இந்த கிருதா யுகத்தில் தாய் தந்தையர் தன் குழந்தைகளை இழக்கமாட்டார். பெண்கள் கணவனை இழக்கமாட்டார். விதவைகள் கிடையாது.

இந்த கிருதா யுகத்தில் வாழ்ந்த மனிதர்கள் உயரம் 5 பனை மரத்தின் உயரமாகும். 5 பனை மரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக நிறுத்தி வைத்தால் மொத்தம் எவ்வளவு உயரமோ அவ்வளவு உயரத்திற்கு ஒவ்வொரு மனிதனின் உயரமும் உண்டு.
இந்த கிருதா யுகத்தில் முள் மரங்கள் கிடையாது. எப்பொழுதும் கனி கொண்டக்கும் மரங்களே இருக்கும். மாதம்,வாழும். பொறாமை, கொலை, களவு, கோள்கூறுதல், பிறரை வஞ்சித்தல், அவமதித்தல், துன்பம் செய்தல், நன்றி மறத்தல், நீதிநெறி தவறுதல், பிறர் பொருளை அவமதித்தல் ஆகிய எதுவுமே இந்த யுகத்தில் கிடையாது.
2.திரேதாயுகம்
இரண்டாவது யுகம் “திரேதாயுகம்” என்று அழைக்கப்படும் திருதியை திதியில் திரேதாயுகம் தொடங்கியது. இது “அட்சய திருதியை” எனப்படும் இந்த நாளில்தான் பரசுராமர் அவதரித்தார்.
திரேதா யுகத்தில்தான் ஸ்ரீராமர் அவதரித்தார். ராவண யுத்தம் திரேதா யுகத்தில் தான் நடந்தது. இந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் தொகையில் கால் பங்கு மக்கள் பாவம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். மக்களுக்குத் துக்கம், நோய்கள் ஏற்படத் தொடங்கின. கால்பங்கு மக்களுக்கு ஆசைகள் அதிகரித்தன. புண்ணியமும் சற்று குறைந்தது. சிற்றின்பம் பால் பங்கு அதிகரித்தது. இந்த யுகத்தில் வாழ்ந்த மக்கள் ஆயுள் 50,000 வருடங்களாயிற்று. மனிதனின் உயரம் இரண்டு பனைமரம் உயரத்திற்குக் குறைந்தது.
3.துவாபரயுகம்
இந்த யுகத்தில் தான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தார். மகாபாரத யுத்தம் இந்த யுகத்தில் தான் நடைபெற்றது. மகாபாரதப் போர் முடிந்து ஸ்ரீ கிருஷ்ணர் பகவான் துவாரகையில் 36 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். பின்னர் தனது மண்ணுலக வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்த ஸ்ரீகிருஷ்ண பகவான் தனது யாதவ வம்சத்தை அழித்துவிட்டுத் தான் ஒரு வனத்திற்குள் சென்று தன் பாதங்கள் மட்டும் வெளியே தெரியும்படி காட்டிக் கொண்டு ஒரு புல் தரையில் யோக நித்திரையில் படுத்தார்.
இந்தக் காட்சியை தூரத்திலிருந்து பாரத்த வேடன் ஒருவனுக்கு ஒரு மான் தனது தலையை வெளியே நீட்டிப் படுத்திருப்பது போல் தெரிந்தது. கிருஷ்ண பகவானுக்கு பாதத்தைத் தவிர வேறு எந்த இடத்தில் அடித்தாலும் மரணம் ஏற்படாது.

எனவே, தனது இரு பாதங்களையும் ஒன்றோடொன்று பிணைந்து ஒரு மானின் தலையைப் போல காட்சி கொடுக்கச் செய்து கொண்டிருந்தார். தூரத்திலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்த வேடன் ஒருவன் ஒரு மான் படுத்திருப்பதாக நினைத்து அம்பைத் தொடுத்தான்.
இந்த அம்பு ஸ்ரீகிருஷ்ணரின் பாதத்தின் வழியே உடலுக்குள் செல்ல அவர் தனது திருமேனியை விட்டு அருளினார். ஸ்ரீகிருஷ்ண பகவான் எந்தத் தினத்தில் பூவுலகம் விட்டு தன் நிலையை அடைந்தாரோ அன்றைய தினமே கறுத்த மேனியை உடைய கலி புருஷன் இந்தப் பூமியல் பிரவேசித்தான். அதாவது, கலியுகம் தோன்றியது. மூன்றாவது யுகமான துவாபரயுகம் மாசி மாத அமாவாசையன்று தொடங்கியது. இந்த யுகத்தில் சமமாக அனுபவித்தார்கள். நன்மை தீமை கலந்ததாக துவாபரயுகம் விளங்கியது. மனிதனின் உயரம் ஒரு பனைமரம் அளவிற்கு குறைந்தது.
4.கலியுகம்
கடைசியாக சகல பாவங்களுக்கும் இருப்பிடமான கலியுகம் வந்தது. ஆவணி மாதம் தேய்பிறை திரயோதசி திதியில் கலிபுருஷன் தோன்றினான். தற்போது நடப்பது கலியுகம் 5107 ஆகும். அதாவது, கலியுகம் தொடங்கி 5107 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இதில் இன்னும் மீதியாக உள்ள 4,20,893 ஆண்டுகள் சென்றாக வேண்டும். இந்த கலியுகத்தில் அதர்மம் விருத்தியாகும். தர்மம் அழியும் பசி, தாகம், மழையின்மை, தேக விபரீதம் எக்காலத்திலும் உண்டாம்.

மனிதர்கள் நாளுக்கு நாள் உயரமும், கனமும் குறைந்தவர்களாவார்கள். பெண்கள் 5 அல்லது 6 வயதுகளில் கர்ப்பவதியாவார்கள். அதி சீக்கிரத்திலேயே இளமை அடைந்து வெகு கூட சீக்கிரத்லேயே முதுமைக் கோலம் அடைவர்.
கலியுக முடிவில் மனிதனின் உயரம் ஒரு சாண் அளவிற்கே இருக்கும். 12 வயதிற்குள்ளாக மனிதனின் ஆயுள் முடிந்துவிடும். பூலோகத்தில் மழை குறைந்து தண்ணீர், உணவு இன்றி, தண்ணீருக்கும் உணவுக்குமாக மனிதர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டே அழிந்து போவர். நாட்டை ஆள அரசர் இல்லாமல் அன்னியோன்ய கலகத்தால் மக்கள் அழிந்து போவர். அதன் பின்னர் மீண்டும் கிருதா யுகம் ஆரம்பமாகும் என்று பத்மபுராணம் கூறுகிறது.
1. நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு மஹாயுகம்
2. எழுபத்தோறு மஹாயுகங்கள் கொண்டது ஒரு மனு
3. பதினான்கு மனு கொண்டது ஒரு கற்பம் ஆகும்.
4. நடப்பது 28 வது மஹாயுகம் (அதில் கலியுகம் நடைபெறுகிறது)
5. மொத்தம் 27 கற்பங்கள் உள்ளன. இன்றும் மஹாயுகங்கள் முடியவில்லை
கற்பகங்கள் ஆரம்பமே ஆகவில்லை.
பூமியின் வயது : பன்னிரெண்டாயிரத்து இருநூற்று ஐம்பத்தாறு கோடியே எழுபத்திநான்கு லட்சத்து ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினோறு உருவங்கள்
சாதாரணமாக ஒரு மனிதன் ஒருநாளைக்கு மூச்சு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை ஆயிரத்து அறநூறு
1. இதை முழுச சதுரக் கூறாகிய வேண்டும் 21இ600 ழூ 800 ஸ்ரீ 17இ28இ000வருசங்கள்
2.இந்த மனிதனின் மூச்சை முக்கால் சதுரக் கூறாகிய 60 ஆல் பெருக்க வேண்டும் திரேதாயுகம் ஆகும்.212600 ழூ 60 ஸ்ரீ 12இ96இ000வருசங்கள்.
3. இந்த மனிதனின் மூச்சை அரை சதுரக் கூறாகிய 40- ஆல் பெருக்க வேண்டும். துவாபரயுகம் ஆகும்.21இ600 ழூ 40 ஸ்ரீ 8இ64இ000 வருசங்கள்
4. இந்த மனிதனின் மூச்சை கால் சதுரக்கூறாகிய 20ஆல் பெருக்க வேண்டும். கலியுகம் ஆகும். 21இ600 ழூ 20 ஸ்ரீ 4இ32இ000 வருசங்கள்
5.இந்த நான்கு யுகமும் சேர்ந்து வருசங்கள் ஒரு மஹா யுகம் ஆகும்.4இ20இ000
6. இது போல் 71 மஹாயுகங்கள் கொண்டது ஒரு மனு ஆகும். 43இ20இ000 ழூ 70 ஸ்ரீ 30இ672202000 வருசங்கள்
7. இது போல் 4 மனுக்கள் கொண்டது நானூற்று இருபத்து ஒன்பது கோடியே நாற்பது லட்சத்து என்பதாயிரம் வருசங்கள் கொண்டது ஒரு கற்பம் ஆகும். இவ்விதம் வாமதேவகற்கம் என்றும் முதல் கற்பம் நடைபெற்று முடிந்து விட்டது. 308679208000 0 14 42940800001.
8. இப்போது சுவேதவராக கற்பம் என்னும் இரண்டாவது கற்பம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டாவது கற்பத்தில் (1) சுவாயம்பு மனு (2) சுவரோசிஷ்டன் மனு (3) உத்தமன் மனு (4) தாமன் மனு (5) ரைவதன் மனு (6) சாஷ்கசல் மனு என்னும் ஆறு மனுக்கள் நடந்து முடிந்துவிட்டு இந்த 6 மனுவுக்கும் 30இ67இ20இ000ழூ6ஸ்ரீ1840320000வருசங்கள்.
9. இதுவும் இதற்க்கு முன் நடந்து முடிந்த முதலாவது வாமதேவ கற்பமும் சேர்ந்து 4294080000 வருசங்கள் இந்த இரண்டும் சேர்ந்து – 6134400000 வருசங்கள்.
10. இப்போது நடைபெறுகிற ஏழாவது வைவஸ்வதன் மனுவில் இதுவரை 27 மகாயுகங்கள் நடந்து முடிந்துள்ளது 23இ20இ000 ழூ 27 ஸ்ரீ 116640000 வருசங்கள் இதை சேர்த்து 6251040000 வருசங்கள்
11. 20வது மகாயுகத்தில் சென்றுள்ளது.
12.கிரேதாயுகம் 1728000 வருசங்கள்
13.திரேதாயுகம் -1296000 வருசங்கள்
14.துவாபரயுகம் 844000 வருசங்கள்
15.கலியுகத்தில்விபவவருஷம்பங்குனிமாதம் 30 ம்தேதிவரை 13.4.1989 வரைசென்றுள்ளது. 5086 வருசங்கள். ஆகமொத்தம் 6254913089 வருசங்கள்
அதாவது
1.1.1930 ம்தேதிவரை 8 மாதங்கள் 16 தினங்கள்முடிகின்றன.
1.1.1990 ஆம்தேதி இந்த பூமியின் வயது அறுநூற்று இருபத்தி ஐந்துகோடியே நாற்பத்துஒன்பதுலட்சத்து பதிமூன்றுஆயிரத்து என்பத்து ஒன்பது வருஷங்கள் எட்டுமாதங்கள் பதினாறுதினங்கள்ஆகும்.
30.08.2017 625 கோடியேஇ 49 லட்சம் 13 ஆயிரத்து 115 வருஷங்கள்எட்டுமாதங்கள் 30நாட்கள்ஆகும். இவ்வளவு காலமாக நமது கடவுள் இந்தப்பூமியை இயக்கி ரேடியோ அலைகள்மூலமாகவே வான மண்டலத்தில்அந்தரத்தில் சுழலவிட்டுக்கொண்டிருக்கிறார்.
எந்த விஞ்ஞானியாவாவது எந்தப் பகுத்தறிவாளராலாவது இந்தச்சாதனையைசெய்ய முடியுமா?
இன்னும் எவ்வளவு காலம் இந்தப் பூமி வான மண்டலத்தில் அந்தரத்தில் சுழன்றுகொண்டிருக்க வேண்டும் என்று நமது கடவுள் நிர்ணயித்துள்ள காலத்தின்கணக்குவிவரம் :-
இப்போது நடைபெறுகிற கலியுகத்தில் (13.04.89 ம் தேதி முடிய விபவ வருஷம் பங்குனி மாதம் 30 ம் தேதி முடிய சென்றுள்ள வருஷங்கள் 5089 போக பாக்கி செல்லாக வேண்டிய 43 மகாயுகங்களுக்கு 426911 வருசங்கள் 432202000043185760000
பிரம்மலோகம் மாய லோகம் என்ன வேறுபாடு
ஓர் உடம்பை பார்க்கும் பொழுது, ஓர் உடலாக தோன்றினாலும்! உடம்பினில் தலை, முண்டம், கை, கால், மற்றும் உள்ளுறுப்புகள் தனித்தனியான வேலை செய்கிறது.
இவை எல்லாவற்றையும் சுமக்கும் மனிதன் தானொரு வேலையை தன் சிந்தனையில் உதிப்பதற்கு ஏற்றவாறு ஒரு வேலையை செய்கிறான்.
ஒரே உடல் ஆனால் எல்லாம் மாறுபாடுடையது. இவைகளின் இருப்பிடமும் வெவ்வேறாக உள்ளது. இது போல் எல்லா உலகமும் ஒன்றின் கீழ்ஒன்றாகவும், பக்கவாட்டிலும், கீழும் மேலும் அமைந்துள்ளது.
ஒவ்வொரு மனிதனும் பூலோகத்தில் பிறந்து பிறவிப்பயனை அடைந்து ஒவ்வொரு லோகமாக மேல் நோக்கி செல்கிறான். குழந்தை அப்பாவாகிறது, அப்பா தாத்தாவாகிறார்.
மூன்று பேரும் வெவ்வேறானவர்கள். இந்த குழந்தையிலிருந்து அப்பாவாகி, தாத்தாவாகிற வாய்ப்புகள் பலருக்கு கிடைக்கிறது சிலருக்கு கிடைப்பது கூட இல்லை.
இதற்கு காரணம் இம்மனிதனா அல்லது மனிதனுள் மறைந்திருக்கும் பிரபஞ்சமா? நான் என்று சொல்லி வாழும் சீவனா, சக்தியா,மற்றும் ஏனையவைகளில் எது.
மாய லோகத்ததில்,
கீழிருந்து மேல் நோக்கி செல்கிறோம்.
சீவன்கள் சிறு குழந்தைகளாக உள்ளனர்.
ஆணும் பெண்ணும் வாலிபமாக உள்ளனர்.
ஆண்மை பெண்மை., தாய் தந்தையராக உள்ளனர்.
உயிர்த்தன்மையும் உயிர்சக்தியும் தாத்தாபாட்டியாக உள்ளனர்.
உயிர்த்தன்மையும் உயிர்ச்சக்தியும் உடலை விடும் பொழுது
பிரம்ம லோகத்தில், ஒருயிராகின்றனர்.
சரயோகம்:
சரம் என்பது தொடர்ச்சி அல்லது மாலை என்று பொருள்படும் மற்றும் சரம் என்பது ஒரு இடத்தில் ஆரம்பித்து ஒரு இடத்தில் முடிக்க வேண்டும்.அதாவது ஆதியிலிருந்து அந்தம் வரைக்கும் முடிவது.


சரயோகமும் 4 யுகங்களும்:
நாம் விடும் சுவாசமானது 4 யுகங்களுடன் சேர்நத்தாகும்.அதாவது 4 யுகம் சேரந்தது 1 மகாயுகம் மற்றும் 1 மகாயுகம் என்பது ஒரு ஜீவனுக்குரிய காலமாகும்.எனவே நம்முடைய ஜீவன் யுகம்யுகமாய் பயணம் செய்து கொண்டிருக்கிறது.ஆனால் பாத்திரம் மாறிகொண்டே இருக்கிறது.
யுகங்களும் லோகங்களும் மற்றும் சுவாசமும்:

ஒரு நாளைக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான மனிதன் விடும் சுவாசத்தின் எண்ணிக்கை 21,600 ஆகும்.இந்த சுவசத்தின் எண்ணிக்கையை வைத்து ஒவ்வொரு யுகமும் எத்தனை வருடங்கள் என்பதை சொல்லிவிடலாம்.

1.கிருதாயுகம் – ஆதி உலகத்தை சார்ந்தது- 21,600*80 = 17,28,000 வருடமங்கள் 1 கிருதயுகமாகும்
2.த்ரேதாயுகம்-பரபிரம்ம லோகத்தை சார்நத்து.இங்குதான் பிராணணாகிய உயிர் உருவாகிறது.15 திதிகள் மற்றும் 12 ராசிகள் உருவாகின்றனர்.
21600*60 = 12,96,000 வருடங்கள் 1த்ரேதாயுகமாகும்
3.துவாபரயுகம்-பிரம்மலோகத்தை சார்நத்து.இங்குதான் சிவம் மற்றும் சிவசக்தி சந்திரன்கள் மற்றும் மூலாதாரம்,ஆதாரமையங்கள்,பஞ்சபூத காரணிகள்,8 உணர்வுகள் மற்றும் குணங்கள் உருவாகின்றன.
21600*40 = 8,64,000 வருடங்கள் 1 துவாபரயுகமாகும்.
4.கலியுகம் – மூன்றுலோகங்ளும் ஒன்றிணைந்து மூன்றாம் உலகின் விழிப்பு நிலையில் (பார்வை) தோன்றியதே நான்காம் உலகமான சூரிய லோகம்

ஐந்தாம் லோகம் உயிர்கள் வாழும் மாய லோகம் எனவும், இம்மாயலோகமே முதல் மூன்று லோகமும் தங்களுக்குள் மாறி மாறி விளையாடும் களமாக மாறுகிறது.மூன்று லோகமும் மாய லோகத்தில் விளையாட சூரிய லோகம் உதவி செய்கிறது.
21600*20=4,32,000 வருடங்கள் 1 கலியுகமாகும்.
சரகலையும் முக்கியாமான நாடிகளின் பெயர்களும்:
1.சூட்சும நாடி
2.சுசுமுனா நாடி
3.இடகலை
4.பிங்கலை
5.சுழுமுனை
6.மூலாதாரநாடி
7.பிரம்மநாடி
8.ஜீவசக்தி நாடி
9.அத்தி
10.அலம்புடை
11.புருடன்
12.காந்தாரி
13.குரு நாடி
14.சூரியநாடி
15.சரஸ்வதி நாடி
16.யாஸ் அஸ்வினி
கிழமைகளும் நாடிகளும்
1.ஞாயிறு-சூரிய நாடி
2.திங்கள்-இடகலை
3.செவ்வாய்-பிங்கலை
4.புதன்-சுசுமுனா
5.வியாழன்-குரு நாடி(இடகலையும் பிங்கலையும் ஒன்று சேர்ந்து பல நாடிகளாக பிரியும் மற்றும் அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளை பொருத்து குரு நாடியானது மாறும்.
6.வெள்ளி-இடகலை
7.சனி-சூட்சும நாடி
குறிப்பு:
பிங்கலை நாடி என்பது வேறு மற்றும் சூரிய நாடி என்பது வேறு.
சுழுமுனை நாடி என்பது வேறு மற்றும் சுசுமுனா நாடி என்பது வேறு.
சரகலையும் சுவாசத்தின் எண்ணிக்கையும்:
ஒரு நாளைக்கு 21600 சுவாசம் ஓடுகின்ற மனிதருக்கு ஆயுள் 120 வருடம் வரை ஆரோக்கியமாக வாழலாம்.
1 மணி நேரம்-900 சுவாசம்
1 நிமிடம்-15 சுவாசம்
உட்கார்ந்து ஓய்வு நிலையில் இருக்கும் போது-12 சுவாசம் /MIN
நடக்கும் போது-18 சுவாசம் /MIN
ஓடும் போது-25 சுவாசம்/MIN
தூங்கும் போது-32 சுவாசம்/MIN
உடல் உறவின் போது-64 சுவாசம்/MIN
இப்படி ஒவ்வொரு நிலையிலும் சுவாசத்தின் எண்ணிக்கையும் தன்மையும் மாறிகொண்டே உள்ளது.
ஷாஜிஸ் யோகா மற்றும் தியான மையத்தில் சரகலை அடிப்படை பயிற்சி மற்றும் உயர்நிலை பயிற்சி தொடர்நது அளிக்கப்பட்டு வருகிறது .ஆர்வமுள்ள அன்பர்கள் தொடர்பு கொள்ளவும்.நன்றி நல்வாழ்த்துக்கள்.
மார்ச் மாதம்(15/3/2025 to 16/3/2025) அன்று வால்பாறையில் நடந்த சரயோகப்பயிற்சி முகாமில் நடந்த புகைப்படங்கள் :



