Skip to content Skip to footer

 

  • ஸ்ரீ சக்கரம்
  • எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்!
  • ஸ்ரீ சக்கரத்தை பற்றி அறிவதற்கு முன் நாம் இந்த சக்கரம் எப்படி தோன்றியது? 
  • எதற்காக தோன்றியது?
  • என்ன செய்து கொண்டிருக்கிறது? என்பதை பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
  • பொதுவாக இந்த உலகத்தை படைத்தவன் இறைவன் என்று நாம் சொல்கின்றோம். படைத்தவன் இறைவனாக இருந்தாலும் அவன் தனி ஒரு ஆளாக இருக்க முடியாது.
  • இறைவன் எப்படித் தோன்றினான்? என்ற கேள்வி இருந்தது என்றால் அந்த கேள்விக்கு பதில் இறைவன் என்பது ஒரு உன்னதமான உணர்வு நிலை என்பதாகும்.
  • அந்த உணர்வானது இருள் என்னும் சக்தியிலிருந்து தன்னை தனித்து உணர்ந்து அந்த இருள் என்னும் சக்தியை உலகமாக உணர்வு என்னும் ஆற்றலில் இருந்து உருவாக்குகிறது.
  • உணர்வு ஒளி இரண்டும் ஒன்றுதான். அதனால் அவர் உலகத்தை உருவாக்குகிறார். அந்த உலகம் எப்படி இருக்கணும் யார்? யார்? எங்கே இருக்கணும் யார்? யாருக்கு? என்னென்ன வேலை செய்யவேண்டும் என்பதை பற்றிய ஒரு அமைப்பு தான் இந்த ஸ்ரீ சக்கரம்.
  •  இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஸ்ரீ சக்கரம் என்பது இந்த உலகத்தை படைத்தவனுடைய ஒரு வரைபடமாகும்.
  • நம்மை பொறுத்த வரையில் அதுதான் பிரபஞ்சம். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பிரபஞ்சம் என்று சொல்லும் பொழுது எல்லாமே இரு நிலைப்பாடு என்ற தத்துவம் உள்ளே வருகிறது.
  • ஒன்று சூட்சுமம் கண்ணுக்கு தெரியாதது. சூட்சுமம் என்பது மறைபொருளாக இருந்து இயங்குவது.
  • இன்னொன்று கண்ணுக்கு தெரிவது. பொருளாகவே சக்தி வடிவமாக இயங்குவது.
  • இந்த பிரபஞ்சம் ஏழு அடுக்கில் வெவ்வேறு விதமான இயக்கமாகவும் வெவ்வேறு விதமான வடிவங்களாகவும் உள்ளது.
  • இந்த வெவ்வேறு விதமான வடிவங்களின் சூட்சும ஸ்தூல அமைப்பாக  
  • இந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது.
  • ஸ்ரீ சக்கரம் ஒன்று பொருளாக அதாவது சக்தியாகவும் இயக்கமாகவும் உள்ளது. மற்றொன்று இயக்கும் ஆற்றலாக உள்ளது.  ஸ்ரீ சக்கரத்தை பற்றி ஆரம்ப காலங்களில் என்ன இது கோடு கோடாக உள்ளது.
  • இதுக்கு இவ்வளவு சக்திகள் இருக்குமா !என்று நிறைய சந்தேகங்கள் இன்றளவும் உள்ளது. 
  • ஆனால் இதில் ஆச்சர்யம் என்ன என்றால் ஶ்ரீ சக்கரத்தின் சக்தி,ஆற்றல் மற்றும் அதன் சுழற்சி என்ன என்று அறிந்தபின்பும்  ஶ்ரீசக்கரத்தை யாரும் பயன்படுத்தாமலும் இதை பற்றி அறிவதற்கு முற்படாமலும் இருக்கிறார்கள். 
  • ஸ்ரீ சக்கரம் என்பதை நாம் வெறும் சக்கரமாக பார்க்கின்றோம்.ஆனால்  இது வெறும் சக்கரம் மட்டும் இல்லை.
  • என்றைக்கு இந்த உலகம் ஆதியாக தோற்றுவிக்கப்பட்டதோ அன்றிலிருந்து அந்த ஆதி தனக்குள்ளே உள்ள அந்த சக்தியை வைத்து இந்த பிரபஞ்சத்தை விரிவாக்குவது என்பதுதான் ஸ்ரீசக்கரமாக உள்ளது. 
  •  இந்த பிரபஞ்ச விரிவாக்கத்தை பொறுத்தவரையில்  ஶ்ரீசக்கரம் தான் சக்தியாகவும் ஆற்றலாகவும் மற்றும் அதுதான் மொத்த பிரபஞ்சத்தின் அமைப்பாகவும் மற்றும் உயிரோட்டமாகவும் நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்குரிய அனைத்து சகலநிலைகளிலும் பார்த்தோம் என்றால் அதுதான் ஸ்ரீசக்கரம். 
  • இந்த ஸ்ரீசக்கரத்தை வெறும் சக்கரமாக பார்காமல் அதை நம்முடைய தாயின்  ரூபத்தில்  பார்த்தோம் என்றால் அதுதான் மிகப்பெரிய தாயாக உள்ளது.
  • நாம் சூரியனை அம்மா என்று  சொல்லுகின்றோம், நம்மை தாங்கி நிற்கும் பூமியையும்  ம்மா என்று சொல்லுகின்றோம் மற்றும் பரந்து விரிந்த கடலையும் அம்மா என்று தான் சொல்லுகின்றோம்.

ஆனால் எல்லாவற்றையும் கடந்து ஸ்ரீ சக்கரம் தான் மிகப்பெரிய தாயாக உள்ளது . அந்த தாயைப் பற்றி நாம் அறிந்தோம் என்றால் நமக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.நன்றி நல்வாழ்த்துக்கள்